காலத்தின் கருணை எப்போதும் அளவிடற்கரியது. அது இந்த மானுடத்திற்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும், ஏன் சுழன்றுகொண்டிருக்கும் இந்தப் பூமிக்கோளுக்கும் நன்மைப் பயக்கும் ஏதாவது ஒன்றை எப்போதும் தந்து கொண்டிருக்கும். அப்படித்தான் காலத்தின் கருணையாக இந்த மண்ணில் வரலாற்றின் காலக்கோட்டில் கிறிஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டில் கபிலவஸ்துவில் சுத்தோதனர் என்னும் சாக்கியக் குல மன்னரின் மகனாக அவர் பிறந்தார்.
அவருடைய பிறப்பை ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் கவித்துவமாக போதிசத்துவர் அம்பேத்கர் எழுதி இருப்பார். இளவேனில் பண்டிகையைக் கொண்டாடுவது சாக்கியர்களின் மரபு. அந்த ஆண்டு மிகச் சிறப்பாக இளவேனில் பண்டிகையை மன்னர் சுத்தோதனரும் அவருடைய மனைவி மகா மாயாவும் கொண்டாடிக் கூடி மகிழ, கருவில் உதித்தார் புத்தர். மாயா ஒரு கனவைக் காண, அதன் பொருளாக, ‘உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் அரசனாகவே நீடித்தால், இந்த நாட்டின் மிகச் சிறந்த அரசனாவான். துறவு மேற்கொண்டால், உலகிற்கு வழிகாட்டும் புத்தர் ஆவான்’ என்று விளக்கப்பட்து. கர்ப்பிணியான மாயா தன் தந்தையின் வீட்டிற்குச் செல்ல ஆசைப்பட, தங்கப் பல்லக்கில் பிறந்த வீடிருக்கும் தேவதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவ்வழியில் லும்பினிச் சோலை. அழகிய பூக்கள் மலர்ந்திருந்தன. வாசத்தைச் சுமந்து வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. பறவைகளின் இன்னிசையால் காற்று இன்னும் கொஞ்சம் அடர்ந்திருந்தது. வேர் முதல் கிளைவரை மரங்கள் கனிகளால் நிறைந்திருந்தன. லும்பினியில் இளைப்பாற மனம் விழைய, பல்லக்கிலிருந்து இறங்கி சால் மரங்களுக்கிடையில் நின்றுகொண்டிருக்கும்போது மகவினை ஈன்றார் மகா மாயா.
இமயமலையிலிருந்து வந்த ஒரு மாமுனிவர் அசித்தர். அவர் சுத்தோதனர் இல்லத்திற்கு வருகை தந்து, குழந்தையின் ஒளிவீசும் அழகினையும் கவர்ந்திழுக்கும் தன்மையையும் கண்டு மகிழ்ச்சி பொங்கக் கூறியதாக போதிசத்துவர் அம்பேத்கர்,

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


