மாதத்தின் முதல் ஐந்து தேதிகளுக்குள் அரசாங்கம் மானியத்தில் வழங்கும் செயற்கை நுண்ணறிவு சந்தாவைக் கள்ளச்சந்தையில் விற்றுப் பணம் பெற்றால்தான் காலத்தை ஓட்ட முடியும். நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வந்தபோது அளித்த எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப் போய், ஓய்வூதியமும் பறிக்கப்பட்டு, கடைசியில் எஞ்சியிருப்பது இந்த மானிய விலை சந்தா மட்டுமே. போக்குவரத்து, மருத்துவம் என அநேகச் செலவுகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏல முறையில் விற்கப்படும் சந்தாக்கள், முழு விலையிலிருந்து படிப்படியாகக் குறைந்துகொண்டே போகும். ஐந்து, ஆறு தேதிகளுக்கு மேல் சொற்பப் பணம் கூட மிஞ்சாது. இரண்டு நாள் அடித்த காய்ச்சல் வீட்டுக்குள் முடக்கிவிட்டது. மணிக்கட்டில் கட்டியிருந்த நுண்ணறிவு செயற்காட்டி, காய்ச்சலுக்கான காரணம் நிமோனியா அறிகுறிகள் என ஆரஞ்சு நிறத்தில் ஆச்சரியக் குறியீடோடு எச்சரிக்கை விடுத்தது. குறியீடு பார்ப்பதற்கு ஸ்மித் & வெசன் மாடல் 66 காம்பாட் மேக்னம் ரிவால்வரின் தோட்டாவைப் போல் ஏதோ அபாயத்தை உணர்த்துவதாக உள்ளுணர்வு உந்தியது. எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு வரும் பிரத்தியேக அறிவிப்பு ஒலிக் கோவை, வழக்கம் போல் என் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. சடுவையும் பொருட்படுத்தாமல் எங்கள் பகுதியிலிருந்த அடர் சாம்பல் நிற ஆளுயரத் தானியங்கி இயந்திரத்தில் ஊசியைப் போட்டுக்கொண்டேன். வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டது போக மீதமிருந்த பணம் அடுத்த மாத வாடகைக்குக் கண்டிப்பாகப் போதாது. ஐந்தாம் அடுக்கில் வாடகை செலுத்த இயலாதவர்கள், ஆறாம் அடுக்கிற்கு மாற்றப்படுவர்.
இயந்திரத் திரை, நுரையீரல் செயல்திறன் பாதிப்பு சரிசெய்யப்பட்டு ஆயுட்காலம் 84இலிருந்து 86ஆகக் கூடியிருப்பதாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்தாக வேண்டியதை நினைத்து எரிச்சலாக இருந்தது. தலை கொய்யப்பட்ட ஆஸ்ட்ரிச் சடலங்களால் அடுக்கி நிரப்பப்பட்டது போல், கருமை பூத்த சகதியாக, இரண்டு நாள் முன்பு பெய்த பனிப்பொழிவு சாலையை மூடிக் கிடந்தது. வறட்டு இருமலுடன் நடக்க ஆரம்பித்தேன். ஏ.ஐ. தொகுப்புகளடங்கிய கண்ணாடியையும் போதாமைக்குக் கள்ளச் சந்தையில் விற்றிருந்தேன். மங்கலான மஞ்சள் ஒளி படர்ந்த திரைக்குப் பழகி நாளாகிவிட்டது. தானியங்கி பேருந்துகளைக் கடக்கும்போது மட்டும், சிறுவயது வீட்டின் முற்றத்திலிருந்த ஆவாரம் பூச்செடி நினைவுக்கு வரும். எப்ஸமின் பழைய குதிரைப் பந்தய மைதானத்தில்தான் சந்தை வழக்கமாக நடைபெறும். ரயில்வே தண்டவாளத்தின் வழியாகத்தான் போக வேண்டும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் வாக்குரிமைக்காக மைதானம் நோக்கி சஃப்ரெஜ் போராளி எமிலி பயணித்த அந்த ரயில் தண்டவாளம் இன்று பயன்பாட்டில் இல்லை. ஒருவேளை ஓட்டும், தேர்தலும், ஜனநாயகமும் அடுத்த நூற்றாண்டில் பயனற்றுப் போகும் எனத் தெரிந்திருந்தால், அவள் குதிரை முன் பாய்ந்திருப்பாளா? கண்காணிப்பு ரோபோக்களை மீறிக் கள்ளச்சந்தையில் வர்த்தகப் பரிமாற்றம் அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஒற்றைக் கண் தெரியாத எழுபது வயதுக் கிழவி என்ற கரிசனமெல்லாம் இயந்திரக் காவலர்களுக்குக் கிடையாது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





