வரலாற்று மீட்டெடுப்பு ஏன்?
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பற்றிப் பல நூறு மில்லியன் டாலர் செலவில் அமெரிக்கத் தலைநகரில் 2016இல் ஓர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இன்றுவரை மாதமொன்றுக்கு மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள், கறுப்பினத்தவரின் மறைக்கப்பட்ட வரலாற்றை அவர்கள் அறிகிறார்கள். அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டபோது ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு பற்றித் தொடர்ந்து ஆராய்ந்து எழுதும் ஹார்வர்ட் பேராசிரியரும் கறுப்பினத்தவருமான ஹென்றி லூயிஸ் கேட்ஸ், நியூயார்க் டைம்ஸில் அந்த வரலாற்று மீட்டெடுப்பு ஏன் அவசியமானதென்று எழுதினார். அதிலிருந்து சில மேற்கோள்கள் இக்கட்டுரைக்கு முகமனாக உதவும்.
“கறுப்பினத்தவர் அமெரிக்கப் பண்பாட்டுக்குப் பங்களித்திருக்கிறார்களா? அவர்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரம் இருக்கிறதா? என்ற நீண்ட விவாதத்துக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.”
“மானுடத்துக்கும் வரலாறுக்கும் தொடர்புண்டு. ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் கறுப்பினத்தவருக்கு வரலாறு இல்லை, ஆகவே மானுடத் தன்மையுமில்லை என்று கருதினார்கள்.” ஆப்பிரிக்கா வரலாறு அற்ற பிரதேசம் ஆகவே பொருட்படுத்தத்தக்கதல்ல என்றார் ஜெர்மானியத் தத்துவயியலாளர் ஹெகல்.
இம்மாதிரியான கருத்தாக்கங்களுக்கு எதிராகத்தான் கறுப்பினத்தவர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாற்றினை எழுதத் தொடங்கினர். 1880களில் ஜார்ஜ் வாஷிங்டன் வில்லியம்ஸ் ‘1619 முதல் 1880 வரையிலான கறுப்பினத்தவரின் வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டது முதல் பெருமுயற்சி.
ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குதலுக்கு உள்ளானதாலேயே ஆதிக்கம் செலுத்துவோரால் வரலாறு அற்றவர்களாகவும் ஒரு சமூகத்தின் பண்பாட்டுக்கோ அறிவுத்தளத்துக்கோ பங்காற்றாதவர்களாகவும் சித்திரிக்கப்படுவது வழமை. மெக்காலே பிரபு இந்தியர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை எள்ளி நகையாடியது இன்றும் இந்தியர்கள் பலருக்கு எரிச்சல் தருவது. ஆனால், தீவிர சாதிய ஒடுக்குதலுக்குள்ளான தலித்துகள் பற்றிய இந்தியர்களின் பார்வையும் அத்தகையானதாகவே இருந்தது.
இன்று பல தரப்பினரும் தாங்களே தலித்துகளின் முன்னேற்றத்துக்கு உழைத்ததாகவும், தாங்களே மீட்பர்கள் என்றும் பேசுவதோடல்லாமல் தங்கள் பங்களிப்புகளை முதன்மைப்படுத்தும் விதமாக தலித்துகள் தற்சார்போ சுயமுன்னெடுப்போ இல்லாமல் மீட்சிக்காகக் காத்திருந்தது போலச் சித்திரிக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் தலித்துகளின் வரலாற்று மீட்டெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then