இமையம் எழுதத் தொடங்கிச் சுமார் முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் நவீன தமிழிலக்கியம் எண்பது ஆண்டுகளைக் கடந்திருந்தது. பாரதியார், புதுமைப்பித்தன் தொடங்கிப் பல்வேறு படைப்பாளிகள் நவீன தமிழின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்திருந்தார்கள். உலகத் தரமான எழுத்து தமிழில் வந்திருந்தது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தேவிபாரதி எனப் பல புதிய எழுத்தாளர்கள் தடம் பதிக்கத் தொடங்கியிருந்தார்கள். இதே சமயத்தில் தமிழிலக்கியப் போக்குகள் குறித்துச் சில விமர்சனங்கள் ஓங்கி ஒலித்தன. அவை பின்நவீனத்துவம், அமைப்பியல் போன்ற பல கோட்பாடுகளை முன்னிறுத்திப் பேசின. புதுவகை எழுத்தைப் பற்றிப் பேசின. லத்தீன் அமெரிக்க எழுத்தைப் பிரதானமாக முன்வைத்தன. ஃப்ரன்ஸ் கஃப்கா, ஹேர்ஹே லூயி போர்ஹெஸ், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், இடாலா கால்வினோ போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் பாணிகளையும் அந்த விமர்சகர்கள் கொண்டாடினார்கள், முன்னிறுத்தினார்கள்.
தொன்மங்கள், மிகுபுனைவு, மாய யதார்த்தம், மையமற்ற எழுத்து, கதையற்ற கதை, கட்டுடைத்தல் எனப் பல்வேறு கலைச் சொற்களை வாரி இறைத்தார்கள். தற்போது தமிழில் எழுதப்பட்டுவரும் யதார்த்தவாத இலக்கியம் தட்டையானது என்றும் அது வழக்கொழிந்துவிட்டது எனவும் சொன்னார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then