வானம் கருப்பாக இருக்கிறது, நட்சத்திரங்கள் மினுமினுத்துக்கொண்டிருக்கின்றன. அதன் கீழே கடலின் பேரொலி. ஒருவேளை மனிதனுக்குப் பயந்திருந்திருக்கக் கூடும். பகல் இருண்டு இரவானது. இருள் முடங்கிய இரவினை அரவணைத்து நிலா மெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. தென்றல் அதன் போக்கில் வீசுகிறது. சுற்றி ஈரமாகவும், உலர்ந்தும் இருக்கிற அழகான மணல் திட்டுகள் கடல் நீரின் தனித்துவமான நறுமணத்தைச் சுமந்து செல்கின்றன.
அவள் கடற்கரையில் நின்று இரு கைகளையும் நீட்டியபடி அண்ணாந்து நட்சத்திரங்களைப் பார்த்து அந்த அமைதியையும் அற்புதமான இரவின் இருள் அழகையும் உணர்ந்து பரவசமடைந்தாள்.
அப்படியிருக்க, வானம் சட்டென இரண்டாகப் பிளந்தது. நட்சத்திரங்கள் குவியலாக விழத் தொடங்கின. அவற்றில் சில தரையில் விழுந்தன. சில வழியிலேயே வெடித்துச் சிதறின. அந்தச் சப்தம் காதுகளைக் கிழிக்கின்ற அளவிற்கு ஒலித்தது. அவள் காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள். உடைந்த நட்சத்திரங்கள் துண்டு துண்டுகளாகக் கடலின் மீதும், கடற்கரையின் மீதும் விழ, ‘கவுன்சிலிங்கில் குறிப்பிட்ட குவார்ட்ஸ் ராக் இவைதான் போல!’ வெடிப்புகளும் ஆலங்கட்டி மழையும் கொட்டித் தீர்த்தன. அந்த இடத்தில் மீண்டும் நிசப்தம் நிலவியது. அவள் அந்தக் கற்மழையில் தலைவரை மூழ்கினாள். மிகவும் சிரமப்பட்டுக் கைகளால் அந்தக் கற்களை அகற்றிவிட்டு எழுந்து நின்றாள். சட்டெனக் கற்களிலிருந்து வெள்ளை மணல் துகள்கள் குவியல் குவியலாகக் உதிரத் தொடங்கின.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then