நான் முன்னர் வேலைப் பார்த்த பள்ளியில் மொத்தம் பத்து ஆசிரியர்கள். அதில் ஒருவர் மட்டும் சைவம். ஆசிரியர் அறையில் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம். யாரேனும் மீன் அல்லது கறி எடுத்து வந்தால், அவரிடம் சொல்லிவிடுவார்கள், அன்று மட்டும் அவர் தனியாகச் சாப்பிடுவார். அன்றைய தினத்தில் அசைவ ‘வாடை’ பற்றி ஒருமுறையாவது அருவெறுப்பாகப் பேசுவார். மீன் எடுத்து வந்த ஆசிரியர் சங்கடப்படுவார். ‘சாப்பிடாமல் இருக்க முடியவில்லை’ என தப்பு செய்தது போல விளக்கம் தருவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி ஒருவர் உணவு தேர்வுக்காக இன்னொருவரைக் குற்ற உணர்வுக்காளாக்க முடிந்தது? சைவ உணவு உண்பதாலேயே அந்த ஆசிரியர் எப்படி தன்னை உயர்தர அடுக்கில் அமர்த்திக்கொண்டார்?
இப்படியான நிகழ்வுகளின் வழி எனக்குள் சைவ, அசைவ உணவுகள் குறித்துப் பல கேள்விகள் முளைத்துக்கொண்டே இருந்தன. எதிர்பாராத விதமாகக் கண்ணில்பட்ட ‘Dalit Kitchens of Marathwada’ புத்தகம் என்னுடைய வினாக்களுக்குப் பதில் தந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then