கரையில் பெரும் பூதமென நிற்கும் மருதமரம், போகத்திற்குத் திறந்த முல்லையாத்தைக் குடித்து சற்று அகண்டு வளர்ந்திருந்தது. விடியலின் பச்சைக்கதிருக்குள் எலியிடுக்கி எடுக்கும் ஆண்டியை, மரத்தினடியில் நின்று பார்க்கையில் இன்னும் சின்னதாகவே தெரிந்தார். செம்மண் நிற முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு, இடுப்பில் நிக்காத சகதி பெல்ஸ் பேண்ட்டை அள்ளி முடிந்திருந்தார். ஏக்கருக்கு வைத்த நூறு எலி இடுக்கிகளை மிகுந்த பதார்த்தமாக எடுத்து தோள்பட்டைக்கம்பில் கோத்து வரப்பேற எட்டு மணியானது. இடுக்கியில் சிக்கிய தண்ணிப்பாம்பு, பல்லிகள், சுண்டெலிகள் போக இருமானெலிகளும், பில்லெலிகளும் இருபத்தைந்து வரை தேறின. அவற்றின் கொரவளையிலும், வயிற்றிலும் இடுக்கி அடித்தத் தடங்கள் அழுந்தியிருந்தன. எலிகளை வரிசையாகப் பரசினார்.
வைக்கப்படப்போரம் வெறித்துப் பார்த்தபடியிருந்த வெருகுப்பூனைக்குக் கழித்துப்போட்ட பாம்பையும், சுண்டெலிகளையும் தூக்கியெறிந்தார். அது வாய்க்குக் கிடைத்ததைக் கவ்வி ஓடியது. நார்ப்பையில் எலிகளைக் கொட்டி பேண்ட், சட்டையைக் கழட்டி அதன்மேல் அமுக்கி வாய்க்காலில் அம்மணமாகக் குளித்தெழுந்தார். சாயந்தரமாக வாய்க்காட்டுக்காரர் வீட்டுக்குப் போனால் முன்னூறு வரை கிடைக்கும். அதுவும் அன்றைக்கே மொத்தமாகக் கிடைத்தால் ஆச்சரியந்தான். மூச்சிறைப்பு, குறுக்குவலிக்கு எலிக்கறி நல்லதென்பதால் போகிற வழியில் யாராவது செலவுக்குத் தந்தால் எலிகளைக் கொடுத்துவிடுவார். யாரும் கேட்காததால் ஆண்டியே வதக்கிச் சாப்பிட முடிவெடுத்தார். இடுக்கிகளை எண்ணித் திரும்பவும் கம்பில் கோத்து சைக்கிள் கேரியரில் கட்டினார். தனது ஊரான மேட்டுப்பட்டிக்குப் போய்ச்சேர ஆண்டியின் மிதிக்கு ஒன்றரை மணிநேரமாகும்.
ஆண்டி வகையறா ஆளுகள் மேட்டுப்பட்டியின் கடைசியான நாகமலை அடிவாரத்தில் எண்ணிவிடுமளவில் இருக்கின்றனர். சுத்துவட்டார நெல் வயல்களில் அவர்கள்தான் இடுக்கி போட்டு எலிகளை வேட்டையாடுவார்கள். இடுக்கி போடக்கூடாதென வீட்டுப் பிள்ளைகள் சொல்லிவிட்டதால் பாதி ஆம்பளைகள் இடுக்கி போடாமல் மதுரைக்குக் கூலி வேலைகளுக்குப் போய் வருகின்றனர். சிலருக்குச் சொந்த நில விவசாயமும் உள்ளது. அவர்களுக்குண்டான நிலத்தில் மட்டும் நெல் பயிரிட்டால் இடுக்கி போடுவார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then