அனைவருக்கும் வணக்கம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. இந்தக் கொரானாவுக்கு நாம் அஞ்சித்தானாக வேண்டும். அதற்காக நமது கலை இலக்கியச் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுக்கொள்ளத் தேவையில்லை. சாத்தியமான வழிகளில் நமது செயல்பாடுகளைத் தொடர்வோம். இன்றைய இணையவழிச் சந்திப்பு அந்த நோக்கிலானதுதான்.
வாராவாரம் வௌ;ளியிரவு ‘ஒரு இலக்கிய ஆளுமையுடன் கதையாடல்’ என்கிற நம்முடைய தொடர்நிகழ்வு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்புடன் இப்போது தொடங்குகிறது. அவருடனான உரையாடலை நூதனன் ஒழுங்கு செய்வார். கேள்வியெழுப்ப விரும்புகிறவர்கள் சாட் பகுதியில் குறுஞ்செய்தியாகப் பதிவிடுங்கள்.
நூதனன்: வணக்கம் தோழர். எப்பவும் பயணத்திலேயே இருக்கும் உங்களுக்குக் கொரானா ஊரடங்கால் நீண்ட ஓய்வு கிடைத்திருக்கிறது. ஏதும் புதிதாக எழுதிக்கிட்டிருக்கீங்களா?
ஆதவன்: அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். இந்தக் காலத்தில் நான் எதையும் எழுதவில்லை. ஊரடங்கானாலும், ஆன்லைன் கிளாஸ் நடத்துகிற, கல்விவணிகப் பயங்கரவாதி அல்லது டாஸ்மாக்கைத் திறந்துவைக்கின்ற அரசாங்கம் போல ஒரு எழுத்தாளரும் இருக்கணுமா என்ன? இயல்பாக எல்லா வேலைகளையும் செய்தபடியே எழுதவும் படிக்கவுமானதுதான் எனது மனஅமைப்புப் போல. அதீதக் குளிர்ச்சி கண்ணாடியை நெரித்துச் சிதறடிப்பத போல, இந்த ஊரடங்கின் அமைதி என் மனவொருமையைச் சிதறடிக்கிறது. வரலாற்றின் எந்தப் பேரழிவிலும் பிரளயத்திலும் மனிதகுலம் இப்படி முடங்கிக் கிடந்ததில்லை. புழுபூச்சியெல்லாம்கூட தம் சுதந்திரத்தை இம்மியளவும் இழக்காதிருக்கிற போது, நான் ஏனிப்படி அடைந்து கிடக்கிறேன் என்கிற கேள்வி என்னை வாட்டுகிறது. கொரானாவிலிருந்தும் ஊரடங்கின் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கும் மக்களைத் தோற்கடிக்க ஆட்சியாளர்கள் கைக்கொள்ளும் மூர்க்கம் என்னைத் தீராப்பதற்றத்திற்குள் தள்ளுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then