பறையர் விஞ்ஞானமும் வினைஞர் பரிணாமமும் – கோ ரகுபதி

தமிழ்ச் சைவமும் ஆரிய ஸநாதநமும் வகை வகையாய்ப் புராணங்களைப் படைத்து அவற்றைச் சாதிகளின் வரலாறெனப் புனைந்துள்ளன. பிரம்மனும் சிவனும் ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாய்ப் படைத்தனர். அவர்களுக்குள் இரத்த உறவு இல்லை எனக் கூறி என்றென்றைக்கும் அவர்களைப் பிரித்து வைப்பது இப்புராணங்களின் அரசியல்.

தங்கள் சாதியை “முன்னேற்றும்” இயக்கப் போக்கில், தாங்கள் பிறந்து வளர்ந்த ஆதிதிராவிட, திராவிட, தமிழ் இனக்குழுவின் ஐந்திணைத் “தொப்புள்கொடி” உறவை அறுத்தெறிந்து என்றென்றைக்கும் தங்களுக்-கெதிரான ஆரிய ஸநாதந நால்வர்ண அசமத்துவப் படிநிலைக்குள் நுழைந்து “பார்ப்பனர்”, “சத்திரியர்”, “வைஷியர்”, “சூத்திரர்” சாதி அடையாளம் தரிக்கப் புராணங்களைப் புனைகின்றனர். இவர்களின் வரலாற்றை விசாரித்தால் அச்சாதியைச் சேர்ந்தோர் புராணத்தை ஒப்பிப்பர். புராணமும் வரலாறும் ஒன்று மற்றொன்றுக்கு முரண்பட்டது. எதார்த்தத்தில் நிகழ இயலாததை தர்க்க அடிப்படையற்றதை உண்மைக்குப் புறம்பாகவும், உண்மையை ஒளித்தும் வைத்திருக்கிறது புராணம். இது, இயக்கவியலுக்கு முரணாக நிலைத்த மாறாத் தன்மையைக் கூறும். வரலாறு, மானுடவியல், நாட்டுப்புறவியல் புலத்தினர் புராணத்துக்கும் சாதிக்குமான உறவை விவாதிக்கின்ற போதிலும், புராணத்தைத் தர்க்க ரீதியாகக் காண்பதில்லை. இவ்வறிஞர்கள் குறிப்பிட்டச் சாதிகளைச் சேர்ந்தவர் என்பதும் அச்சாதியின் வரலாறு புராணத்திலிருந்து தொடங்கப்படுவதாலும், இவர்கள் புராணத்தைச் சுமக்கின்றனர். தங்கள் சாதிப் பெயரில் அச்சுப்பிழை நிகழ்ந்துள்ளது. சிவன் அல்லது பிரம்மன் எங்களைக் குறிப்பிட்ட தொழில் செய்யப் படைத்தார் எனக் கூறி புதியப்பெயர்களைச் சூட்டி உண்மையை ஒளித்து தனித்தச் சாதிகளாய் வாழ்கின்றனர். புராணங்களை உருவாக்குவதும் பெயர்களை மாற்றுவதும், சம்பந்தப்பட்டச் சாதியினராலும் பிறராலும் செய்யப்படும் போக்கு இன்றும் நடைபெறுகிறது.

புராணத்துக்கு முரணான வரலாறு, கடந்த கால நிகழ்வுகளை ஆதாரங்களின் அடிப்படையிலும், தர்க்க ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் எழுதுகிறது. இது, இயக்கவியலையும் மாறும் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். “வரலாற்றை எழுதுவது முதலாளித்துவ அமைப்பை அழிக்க வழிவகுக்கும்.” என “ஜார்ஜ் தாம்ஸன்” கூறுவது, சாதியச் சமூகத்துக்கும் பொருந்தும்1 இது, சாதிகள் தனித்தனியாய்த் தோன்றவில்லை. புதிய உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பும் தொழிலும் தோன்றுதல் அவற்றை உபயோகிக்கும் தொழிற் குழுக்கள் தனியாய்ப் பிரிதல் அகமணக் குழுவாக மாறுதல் போன்ற காரணிகளால் புதிய சாதிகள் அல்லது குழுக்கள் உதித்தன. அவற்றின் தொப்புள்கொடி ஒன்றுதான் எனக்கூறும் இக்கட்டுரைப் பொருட்களோடு வினையாற்றும் உற்பத்திச் சமூகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று உதித்தப் பரிணாமத்தை விளக்க முற்படுகிறது. இதை விளங்கிக்கொள்ள முதலில் மனிதக்குல வரலாற்றைச் சுருக்கமாக அறிவது அவசியம்.

இயற்கையின் அங்கம்:

மனிதக் குரங்கு மனிதனாகப் பரிணமித்ததை “டார்வின்” விளக்குவது போல், மானுடவியலாளர்கள் மனித விலங்கு சமூக விலங்காகப் பரிணமித்ததைக் காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்றும் வரலாற்றாளர்கள், மனிதன் கைக்கொண்ட கருவிகளின் அடிப்படையில் கற்காலம், பழைய, புதிய கற்காலங்கள், உலோகக் காலம், நவீன காலம் என்றும் மார்க்சியர்கள், ஆதிபொதுவுடைமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் என்றும் வகைப்படுத்துவர். மனிதக் குரங்கிலிருந்து மனிதனாய்ப் பரிணமித்தக் காலங்களில், காட்டு விலங்குகளைப் போல் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்தான். பின் கல், மரக்கம்பு போன்ற கருவிகளைக் கைக்கொண்டு விலங்குகளைக் கொன்று உண்ணும் நிலைக்கு மாறினான். இயற்கையின் இயற்கை உயிரியாய் அம்மணமாக வாழ்ந்த இக்காலங்களில் வெட்கம், கூச்சம் போன்ற உணர்வுகள், ஆண் பெண் வேலைப் பிரிவினை, சாதி, சாமி, குடும்பம், அரசு, பாலினப் பாகுபாடு, வயது வேறுபாடு என எவையும் இல்லை.

இந்நிலை சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன.

  1. விவசாயத்தை அறியாமல் இயற்கையில் கிடைத்தவற்றைத் தின்றபோது, வேளாளர் அல்லது வௌ;ளாளர் தோன்றியிருக்க முடியுமா?
  2. அம்மணமாகவும் இலைதழைகளையும் உடுத்தியக் காலத்தில் துணி நெய்யும் தொழிலும், வெளுக்கும் அவசியமும் இல்லாதபோது, நெசவாளரோ சலவையாளரோ எவ்வாறு தோன்றியிருக்க முடியும்?
  3. நீண்ட தலைமயிரோடும் உடலை மயிர்ப்போர்த்தியப் போதும் சவரக்காரர் உதித்திருக்க இயலுமா?
  4. கிடைத்தவற்றை உண்டு ஆற்றுக் கரையோரம் வாழ்ந்தபோது, மண்பானையின் அவசியம் இல்லாததால் குயவர் இருந்திருப்பாரா?
  5. அரசு என்ற நிறுவனமே தோன்றாக் காலத்தில் மன்னர், அமைச்சர், வீரர், காவலர் என எவராவது தோன்றியிருக்க இயலுமா?

இக்கேள்விகளுக்கான பதில்களை நிலைகுடிகளுக்கு முந்தைய அலைகுடி வாழ்க்கையில் தேடுவோம்

காட்டில் இடம்விட்டு இடம்பெயரும் தொல்குடியினர் ஏற்கனவே, தங்கிய இடத்திற்கே எதிர்பாராமல் மீண்டும் வந்தடைவதும் அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் “அலைநிலை”-யால் அவர்கள் நிலத்தில் தனியுரிமையைக் கோரவில்லை.3 இதனால், அவர்களிடம் நிலவுடைமையாளர், நிலமற்றோர் எனப் பிரிவும் தோன்றவில்லை. ஆகவே, ஒருவர் உழைப்பை மற்றொருவர் சுரண்டவும் இடமில்லை. அவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சியைத் தேவைக்கேற்ப பங்கிட்டு உண்டனர்.4 மணமான தம்பதியர் தனிக்குடில்களில் வசித்தனர். பருவ வயதை எய்து மணமாகாத குமார, குமாரிகள் அவரவர்களுக்கெனத் தனியாகக் கட்டப்பட்டக் குடில்களில், மொத்தமாய் மணமாகும் வரை வசித்தனர். ஆண், பெண் வேலைப் பிரிவினை இருந்தது. அவர்களுக்குள் தோன்றும் முரண்பாடு, நோய் போன்றவற்றைத் தீர்க்க, அவர்களிடமே சாமியாடி இருந்தார். சில குடிகளிடம் தலைவர், சாமியாடி என இருவர் இருந்தனர். சிலகுடிகளிடம் பேயோட்டுவதில் கைத்தேர்ந்த நபர்களும் இசையும் இல்லை அத்தகையோர் பிற குடிகளைச் சார்ந்து இருந்தனர். ஒரு குடியைச் சேர்ந்த ஒருவர், மற்றொரு குடியைச் சேர்ந்த பெண்ணை மணக்கின்ற போது, அப்பெண்ணின் பெற்றோர் மட்டுமன்றி, அக்குடியினர் அனைவரின் ஒப்புதலையும் பெறவேண்டும். குடி, சாமியாடிஃதலைவன், குடும்பம், குமார, குமாரி என்ற ஒழுங்குமுறையில் தொல்குடியினர், அலைகுடியாய் இயங்கினர். “பிரித்தானிய ஏகாதிபத்தியம்” வனத்துறையை உருவாக்-கியதால், காடுகளில் தொல்குடிகளின் அலைநிலைக்கு எல்லை வரையறுத்தனர். இதனால், இல்லாதப் பேய்க்கு அஞ்சிய அலைகுடிகள் வனத்துறை அலுவலர்களைக் கண்டும் அஞ்சினர்5;. சிறிய மரக்குச்சியால் நிலத்தைக் கீறி, சுழற்சிமுறையில் மானா வாரியாய்ப் பயிரிட்டதால், நிலைத்த விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் கலப்பை, நீரிறைக்கும் தோல்பைப் போன்ற உற்பத்திக் கருவிகளும், அதைத் தயாரிக்கும் தொழிற்பிரிவும் அவர்களிடம் தோன்றவில்லை. மாதவிடாய் இரத்தப் போக்கைத் தடுத்தலும், கட்டற்றப் புணர்ச்சி நிலையிலிருந்து ஒருதாரக் குடும்ப ஒழுங்கு உருவாக்கமும், அந்தரங்க உறுப்புகளை இலைதழை, மரப்பட்டைநார் போன்றவற்றால் மறைக்கச் செய்தது. துணி நெய்யாததால் நெசவாளரும், அழுக்கு உடுப்பை வெளுக்கும் சலவையாளரும், தலை,முக மயிரை மழிக்காததால் சவரக்காரரும் தோன்றவில்லை. ஆற்றுக்கரையோர வாழ்க்கை, உபரி உற்பத்தி இல்லாமைப் போன்ற நிலை, அவற்றைச் சேமிக்க மண் பானை, உலோகப் பாத்திரங்களுக்கான தேவை ஏற்படவில்லை. இதனால் குயவரும், கொல்லரும் உதிக்கவில்லை. ஆவி, பூதங்களையும், இறந்த முன்னோரையும் வழிபட்ட அவர்களிடம், கோயிலும் இல்லை மதமும் தோன்றவில்லை. தொல்குடிகளுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்தன. இதில் ஈடுபடுவதற்கும், தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கும், அவர்களிடம் தனியாய்ப் படைவீரர் குழுக்கள் இல்லை. குழுவின் மொத்த உறுப்பினரும் மோதலில் ஈடுபட்டு வென்றனர் அல்லது மரித்தனர். தொல்குடிகளிடம் தோன்றியத் தனித்த தொழிற்குடியாகச் சாமியாடியைக் கூறலாம். இன்ப, துன்ப நிகழ்வுகளில் தலைமைத் தாங்குதல், நோய்த் தீர்க்கும் பேயோட்டம், சண்டைச் சச்சரவைத் தீர்த்தல் போன்ற நிகழ்வுகளில் சாமியாடியாகவும், பூசாரியாகவும், தலைவராகவும், பிற நேரங்களில் உழைப்பாளராகவும், உறவுக்காரராகவும் இருப்பார். “புனித”த் தன்மைக் கட்டப்படாததால், அவரைச் “சாமி” என அழைப்பதில்லை அப்பனே, மூப்பனே, மாமானே, மச்சானே என உறவு முறையில் அழைப்பர். தொல்குடிகளின் அலைகுடி வாழ்விலிருந்து, “மாமன்னர்”, “மன்னர்”, “அமைச்சர்”, “அந்தப்புரம்;”, “வேளாளர் அல்லது “வௌ;ளாளர்”, “போர் மறவர்” அல்லது “சத்திரியர்”, “பரத்தையர்”, “வணிகர்” என எந்தத் தனித்தன்மையான தொழிற் பிரிவினையும் இல்லை. இவை பிற்காலத்தில் தோன்றின. இனி, ஒவ்வொரு புதிய தொழிற்குடியும் எவ்வாறு தோன்றிச் சாதியாகப் பரிணமித்தது என்பதைக் காண்போம்.

புலைத்தொழில் அறிவியலின் தோற்றுவாய்:

சங்க இலக்கியங்கள் கூறும் ஐந்திணைகளில் முல்லை, குறிஞ்சி, நெய்தல் ஆகியன முறையே மேய்ச்சலையும், அலைகுடி, கடல்சார் வாழ்வையும் கூறுகின்றன. பாலை நிலம் வறட்சியால் தோன்றுவது எனக் கூறுவர். இத்திணைகளில், வேலைப் பிரிவினைகள் பல்கிப் பெருகும் வாய்ப்புக் குறைவு. இவர்கள் மேலே குறிப்பிட்ட அலைகுடிகளுக்கு ஒத்தவர்கள். அவர்கள்தான் இவர்களா? அல்லது இவர்களே அவர்களா? என்பது தனிப்பட்ட ஆய்வுக்குரிய பொருள். நிலைகுடியான மருதத்திணை திடீரெனத் தோன்ற இயலாது. அலைகுடி வாழ்வில் மானாவாரியாய்ப் பயிரிடுகிறபோது, அறுவடை செய்யும் வரை அவ்விடத்தில் தற்காலிகமாக, நீண்ட நாட்கள் தங்குவர். இந்நிலை நிரந்தரமாகத் தங்கி உற்பத்திச் செய்ய வித்திட்டது. ஏற்கனவே, அலைகுடிகளாக இருந்து உற்பத்திக் கருவிகளையும், தொழிற் பிரிவினைகளையும் கொண்டிருந்தோர், மருதத்திணைக் குடியாக மாறியிருக்க இயலும். மருதத்திணைக்கு உரிமைக்கோருவோர், தற்கால “சாதி”யைத் திணையோடு பொருத்துவதற்குத் தங்கள் பெயரின் உச்சரிப்பு மாறிவிட்டதாகக் கூறுவர். புராணத்தையும் ஆதரவாகக் காட்டுவர். ஆனால், சங்க இலக்கியங்களில் கூறப்படும் பெயர்களோடு இக்காலத்திலும் வாழ்கின்ற, சாதியற்ற சமூகங்கள் உண்டு. அவர்கள் புலையன், பறையன், பாணன், துடியன், புலைச்சி ஆகியோர் ஆவர். இவர்களை அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணைப் போன்ற, சங்க இலக்கியங்கள் இழிவாகக் கூறுகின்றன. இருப்பினும், இவை சாதி உருவாக்கத்தை அறிய உதவுகின்றன. இவை பொருள்களுக்கும் வினைஞருக்குமான உறவைக் கூறுகின்றன இவற்றிலிருந்து வினைஞர்களுக்கு இடையேயான உறவைக் காணலாம்.

ஆடை வெளுத்தல், ஓலைகளால் முடையப்பட்டப் புட்டில் விற்பனையை”ப் புலைச்சிக்கும், “போரில் பறை அடித்தல், சுடுகாட்டில் சோறுபடைத்தலைப் புலையருக்கும் தொழில்களாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இது ஆண், பெண் வேலைப் பிரிவினையைச் சுட்டுகிறது. “புலைத் தொழிலையுடைய பாணன்” என்ற (கலித்தொகை, 68) வரியும், “புலையனால் முழக்கப்படும் பெரிய துடி”, “புலையனின் தண்ணுமையிலிருந்து எழக்கூடிய ஒலி” என்ற (நற்றிணை, 77&347) வரிகளும், பாணரும் புலையரும் வெவ்வேறு நபர்களா? பாணருக்குப் “புலைத்தொழில்” என்றால் இசை, சாவுசடங்குத் தவிர்த்து, வேறு தொழில்களைப் புலையர்கள் செய்தனரோ? என்ற கேள்விகளை எழுப்புகின்றன. புறநானூற்றில் (335. 7 – 8) மாங்குடி மருதனாரின் “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை” என்ற வரியில் புலையர் பெயர் இல்லாதது ஏன்? என்ற சிக்கலும் எழுகிறது. புலையரோடு துடியும், தண்ணுமையும் இப்“புலை”த் தொழில்களோடு பாணரும் இணைந்திருப்பதால் இவற்றின் பொருள் அறிவோம். துடி என்றால் துடிக்கொட்டுஞ் சாதியான் எனப் பொருள் (ஆனந்த விகடன் அகராதி, ப. 534, இனி ஆ. அ. எனச் சுட்டப்படும்). இவையிரண்டும் “உடுக்க” எனப்படும் பறையிசைக் கருவிகள் ஆதலால், துடியிசைத்தப் புலையரையும், பாணரையும் துடியர் எனலாம். கடம்பன் ஒரு “பழையகுடி” என்ற குறிப்பு மட்டும் கிடைக்கிறது. ஆங்கிலேயரின் மானுடவியல் ஆவணங்-களிலும் துடியர், கடம்பர் பற்றிய குறிப்புகள் இல்லாததால், துடியரைப் புலையர், பாணர் எனலாம். பாணரைப் புலைத் தொழிலோடும், புலையரை இசைத் தொழிலோடும் இணைத்துக் கூறுவதால், புலை என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்வோம்.

புலை என்ற சொல்லுக்கு, ஊன், புலால், புன், அசுத்தம், தீ நாற்றம், தீட்டு எனக் கூறுவதோடு கீழ்மகள், இழிவு என்றும் “புலைத்தனம்” என்ற சொல்லுக்குக் கொலைக்குணம், புன், இழிகுணம் என்றும் பொருள்7. இவை அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மனிதர், விலங்குகளின் உடலோடு தொடர்புடையவை. விலங்குகளைக் கொல்லுதல், தீயால் ஊனைச் சுட்டு உண்ணல், தோலில் பறையிசைக் கருவிகளும், பிற பொருட்களும் தயாரித்தல், உடல் புண்ணுக்குச் சிகிச்சை அளித்தல் என மனித, விலங்கு உடல்களில் வினைபுரிவதைச் சுட்டுகின்றன. இறைச்சியை உணவாகவும், மருந்தாகவும் உண்ணுதல், தோல், மருந்துப்பொருட்கள், இசைக்கருவிகள் தயாரித்தல் ஆகிய தேவைகளுக்காக, விலங்குளின் உடலில் வினைபடுகின்றனர். இசைக்க அறியாமை, ஒரு வடிவத்துக்கு மேற்பட்ட இசைக்கருவிகள் இல்லாமை, தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற தோலைப் பண்டமாற்றுச் செய்தல், தங்கள் தலைவனுக்குக் கொடுத்தல்8 போன்ற நிலைகளால், சில தொல்குடியினரிடம் தோலின் பயன்பாடு குறைவு என்பதை உணரலாம். அவர்கள் உடலைப் போர்த்துதல், இசைக்கருவி தயாரித்தல் ஆகிய இரு தேவைகளுக்காகத் தோலைப் பயன்படுத்தினர். விவசாய உற்பத்திக்கான கருவிகளைத் தயாரித்தல், அரசுகளின் மண்ணாசையால் நாடுபிடிக்கப் போர், படை உருவாக்கம், தோல் கேடயம், ஆயுதஉறை, குடிநீர் கொண்டு செல்லல், ஆளும் வர்க்கத்தின் தோல் பண்பாடு போன்றவற்றால், தோல் பயன்பாடு நிலைகுடியில் அதிகரித்தது. மாயவித்தை, மருத்துவம், போர், மங்கல, அமங்கல நிகழ்வுகள், ஆவேச, பூத, அம்மன், காளி ஆட்டங்கள் எனப் பல வகையான வினைகள் இசையோடு பிணைந்திருப்பதால், இசைக் கருவிகளும் பல வகைகளில் தயாரிக்கப்பட்டன. மாயவித்தையின் உடுக்கைக்கும், சாவுக்கு அடிக்கும் சாப்பறைக்கும் வேறுபட்ட ஒலி தேவையானது, இசைக்கருவிகளின் வடிவவேறுபாட்டைத் தீர்மானிக்கிறது. குறிஞ்சி, பாலை நிலங்களுக்குத் துடி9 நெய்தலுக்கும் சாவுக்கும் சாப்பறை, மருதத்துக்குக் கிணைப்பறை10, போருக்கு முரசும், கொம்பும் என ஐந்திணைகளுக்கும் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கும், காலத்தைக் குறிக்கவும் வெவ்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்-பட்டன. உடுக்கை, சாப்பறை, சிறுபறை, பெரும்பறை, தப்பு, தமுக்கு, தவில், தமரு, மேளம், பம்பை, நாழிகைப்பறை என இப்பறையிசைக் கருவிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. இக்கருவிகளனைத்தும் பலியிடப்பட்ட, இறந்த, உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்பட்டன.

தோலிசைக் கருவிகளைப் “பறை”-யிசைக்கருவிகள் என அழைப்பது சமகாலத்தில் விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறது. “தமிழர்” சிலர் பறை என்பது சொல், சொல்லுதல், பற எனப் பொருள். தமிழர் நிகழ்த்தியப் போர்களைப் “பறை”யால் அறிவித்ததால் அக்கருவிக்குப் பறை எனப் பெயர் ஏற்பட்டது. இதற்கும் பறையருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அவர்கள் வாதம். கலை நுகர்ச்சி, பறைக்குக் கிடைத்திருக்கும் உலகளாவிய அங்கீகாரம், பொருளாதர மதிப்புப் போன்ற புதிய நிலைகளால் “தமிழர்”கள் பறையைக் கையகப்படுத்த “பறை பறையருக்கல்ல” எனக் கூறுகின்றனர். ஆண்டாண்டுக் காலமாக ஆண்டைகளுக்கு அடிமையாகப் பறையடித்த “இழிவு” ஒழிய பறையைப் புறக்கணிப்போர் பறையரில் சிலருண்டு. ஆகவே, இசைப்பது யார்? இசை எவ்வாறு தோன்றியது என விளங்கிக் கொள்வோம். “தமிழ்மேளக்காரர்” எனக் கூறப்படும் கள்ளர், வேளாளர், அகமுடையார் இசைத் தொழிலை மேற்கொண்டது “எதிர்பாராதது” என ‘ஹெமிங்வே’ குறிப்பிடுவதால் அவர்கள் பாரம்பரியமான இசைக்கலைஞர் அல்லர்.11 திருமணம், சாவு, திருவிழா போன்ற நிகழ்வுகளிலும், அரசின் அறிவிப்பை அறிவிக்கவும் பறையர்கள் பறையடித்தனர். பறையருள் ஒரு பிரிவினர் மட்டுமே பறையடித்தனர், எனக் கூறப்படுவதுண்டு.12 பம்பை என்னும் முரசினை இசைப்பதால் பறையர்களைப் “பம்மைக்காரன்” என்றும்13, உருமி இசைப்பவர்களை மதுரை மாவட்டத்தில் “தொட்டியன்” என்றும் பிற பகுதிகளில் பறையர் எனவும் அழைக்கப்படுகின்றனர்,14 . கேரளத்தில் சில சடங்குகளில் பாணர்கள் துடி அடிப்பர்15. துகில் எழுப்ப பாணனும் அவர் மனைவியும் முரசையும், கைத்தாளத்தையும் முழங்கினர்,16 மழைத்தெய்வமான மாரியம்மனை வரவழைக்க புதரை வண்ணார்கள் பம்மை இசைப்பர். “நாவிதர்”, “அம்பட்டர்” என அழைக்கப்படும் ஆதிமருத்துவர், திருமணங்களிலும் கோயில்களிலும் இசைப்பர். இவர்கள் இப்பறையிசையை மேற்குறிப்பிட்ட வினைகளோடு இணைத்தே நிகழ்த்தினர். இயக்கத்தோடு பிணைந்திருந்த இசைக்கான கருவிகளையும், வினையிலீடுபட்ட வினைஞர்கள்தான் தயாரித்தனர். பறையிசைக் கருவிகளைப் பறையர், பாணர், வெட்டியார் ஆகியோர் தயாரித்தனர் / தயாரிக்கின்றனர். தோலில் பணிபுரியும் பாணன்கள், முரசுக்கான தோலைத் தயாரித்ததாகத் தோல் தொழிலை ஆராய்ந்த “சாட்டர்டன்” கூறுகிறார்17. இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் “உரிமை”யைப் பெற்றிருந்த வெட்டியார்கள், பதப்படுத்தப்படாதத் தோலைப் பயன்படுத்தித் தப்பட்டையையும் முரசையும் தயாரித்தனர்18. சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை, “தொடக்கத்தில் தமிழருக்குத் தோலில் தொழில் புரிந்தவர்” செம்மார் எனக் குறிப்பிடுகிறது19, 1901ஆம் ஆண்டுச் சென்னை மாநிலக் கணக்கெடுப்பு, செம்மார், தொண்டைமான், தோல்மேஸ்திரி எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் சுண்ணாம்பு உற்பத்திச் செய்தல், நாகசுரம் வாசித்தல், தவில் இசைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது.20 செம்மாரின் இசைத்தல் எவ்வினையோடு இணைந்தது என்பதை அறிய இயலவில்லை. பறையரின் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் சடங்கியல் தலைமை வகிக்கும் வள்ளுவர், வெட்டியார், புதரை வண்ணார், ஆதிமருத்துவர் ஆகியோரில்21 வெட்டியார் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. எனினும், “சுடுகாட்டில் தருப்பைப் புல்லின்மேல் உணவுப் படைப்பவன்”, “சுடுகாட்டில் சோறுபடைக்கும் இழிபிறப்பினோன்” எனப் புறநானூற்றுப் பாடல் வரிகள் (பக். 360 -363) புலையரைச் சுட்டுவதால் இப்பெயரில்தான் வெட்டியார் அறியப்பட்டார் எனலாம். எருமைத் தோலில் பறையிசைக் கருவிகள் தயாரிப்பதும் காளிக் கோயிலில் எருமை பலிகொடுத்தலில் பறையர்கள் முக்கியப் பங்காற்றியதையும்22 இவ்விடத்தில் இணைத்துப் பார்த்தால், ‘வினை வினையோடு இணைந்த இசை, வினைஞரே இசைக்கருவி தயாரித்தல்’ ஆகிய மூவினைகளும் ஒன்று மற்றொன்றோடு பின்னிப் பிணைந்திருப்பது விளங்கும். பறையர், பாணர், வெட்டியார், பொதரையர், செம்மார், நாவிதர் ஆகியோரின் வினைகள் இசையோடும் பிணைந்திருப்பதால் இசைக் கருவிகளையும் அவர்களே தயாரித்தனர். “பாணர், பொதர வண்ணார், வெட்டியார், நாவிதர், செம்மார் ஆகியோர் பறையரின் உட்பிரிவு” என 1891, 1901-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புகளில் பதியப்பட்டுள்ளது. இங்கு நம்மை வியப்பூட்டுகிறது.23 இவர்கள் நிகழ்த்தும் வினைகளின் ஒப்புமை, சடங்கியல் தலைமை, வழக்காறு, வரலாறு, கணக்கெடுப்பு ஆகியன இவர்கள் பறையரின் உட்பிரிவு என்பதை தெளிவாக்குகிறது. ஆகவே, பண்டையத் தமிழரில் பறையரல்லாதோர் தோலில் தொழிற்படாததும், பறையை இசைக்காததும் தெளிவு. பறையானது, பறையரோடும் பறையரின் உட்பிரிவுகளான பாணர், செம்மார், வெட்டியார் ஆகியரோடும் பிரிக்க இயலாத நிலையில் பிணைந்திருப்பதை அறியலாம்.

பறையரின் உட்பிரிவினர் மொத்தமாய் ஒரேநேரத்தில் தோன்றவில்லை. அரசியல் பொருளாதார சூழலால் தூண்டப்பட்டப் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய வினைஞரை உருவாக்கியது. இதனால், பறையரிலிருந்து புதிய உட்பிரிவினர் ஒவ்வொருவறாய்ப் பரிணமித்தனர். ஆகவேதான் அவர்களிடம் ‘ஒத்தத் தன்மையும்’, ‘தனிச்சிறப்புகளும்’ ஒருசேர இருக்கின்றன. இத்தனிச்சிறப்புதான் உட்பிரிவுத் தோற்றத்தின் அடிப்படை. உட்பிரிவின் பரிணாமத்தை விளங்கிக்கொள்ள பறையரின் மங்கல, அமங்கல நிகழ்வுகளில், சடங்கியல் தலைமை வகிக்கும் வெட்டியார், பொதர வண்ணார், நாவிதர், வள்ளுவர் ஆகிய நால்வரையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். மாயவித்தையையும், மருத்துவத்தையும் விளங்கிக் கொள்வதுனூடாக வண்ணார், நாவிதர் பரிணாமத்தை விளக்கலாம். உடுப்புப் பண்பாடு, வெளுப்பு வினையை ஆராய்ந்தோர் சங்ககாலத்தில் “புலைச்சி” ஆளும் வர்க்கத்தினரின் அழுக்கு உடுப்பை வெளுத்ததாகக் கூறுகின்றனர்.24 துணியாலான உடுப்புப் பண்பாடு அரசியலதிகார வர்க்கத்திடம் பரவியகாலங்களில் மாதவிடாய் இரத்தப்போக்கைத் தடுக்கும் “முட்டு”த் துணியிலும், போர்வீரரின் உடுப்பில் படிந்த இரத்தக்கறையை நீக்கவும் வண்ணாரின் கொள்ளிக் கட்டையிலிருந்து, வண்ணார்களைப் படைத்ததாகச் ‘சிவபுராணங்கள்’ கூறுகின்றன. மாதவிடாய் இரத்தத்தைத் தடுக்கப் பயன்படுத்திய துணிகளை வெளுத்து மீண்டும் பயன்படுத்தும் வழமையையும்,25 அக்காலங்களில் ‘மாத்து’ (மாற்றுத் துணிஃஉடுப்பு) கொடுக்கவரும் வண்ணார்களைத் தடுப்பதன் வழி, தங்களின் பகையை அரசியலதிகாரச் சாதியினர் தீர்த்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டால், வண்ணார் வினையின் முக்கியத்துவம் விளங்கும். இவ்வினை “சலவை”த் தொழிலுக்குப் பாதை அமைத்தது. சம்பந்தப்பட்ட நபர்களாலும், பிறராலும் “அருவருப்பு”, “தீட்டு” எனக் கருதப்பட்ட இரத்தக் கறையை நீக்கும் வினையைச் செய்ய ஏற்கனவே, “புலை”த் தொழிலில் வினைபுரிந்த நபர்களிலிருந்துதான் தோன்ற இயலும். இவ்வினை மாயவித்தையான பேயோட்டுதல், பில்லிசூனிய வினையில் பலியிடுதல், பச்சை இரத்தம் குடித்தல் என இரத்தத்தோடு பிணைந்திருந்தது. இவ்வித்தை-யை பொதரை வண்ணார் செய்வார் பிற வண்ணார் அறியவில்லை. ஆகவே, “இரத்தக் கறையை” நீக்கும் வண்ணார் மாயவித்தைச் செய்த மாயக்கரானிடமிருந்து உருவாக்கப்பட்டார். இரத்தக் கறையை நீக்கும் வினையை வண்ணாரிடமிருந்து நீக்கினால் மங்கல, அமங்கல சடங்கில் தலைமை வகித்தல், பம்பையடித்து மாரியம்மனை அழைத்தல் என மாயவித்தையே அவர்களிடம் மிஞ்சும். இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொருளாதாரம், படை வீரர்களின் தலைமயிரை ஒழுங்குபடுத்தல், நவீன மழிப்புக் கருவிகளின் உற்பத்தி ஆகியவற்றால் பரவிய சிரைத்தல், மழித்தல்26 வினையை நீக்கினால் நாவிதரிடம் மாயவித்தையின் சடங்கும் இசையும் மிஞ்சும். மனிதனின் நோயைக் குணப்படுத்தும் பகுத்தறிவு அறிவியல் மருத்துவம் மாயவித்தையிலிருந்துதான் பரிணமித்தது எனத் தத்துவ-வாதிகள் கூறுவதை27 “புன், கழலை, கண் கட்டிகளை அறுத்தல், சுளுக்குநீக்குதல், நோயாளிக்குத் தேவைப்படின் இரத்தத்தை வெளியேற்றுதல்” என மனித உடலில் இரத்தத்தோடு வினையாற்றிய நாவிதர்களோடு ஒப்பிட்டால்28 பகுத்தறிவு அறிவியல், மருத்துவம் நாவிதரிடம் கருநிலையில் இருந்தது புலப்படும். ஏற்கனவே, பல்லாண்டுக் காலமாக விலங்குகளில் வினையாற்றிய வினைஞருக்குத்தான், மனித உடலிலும் வினையாற்றும் சிந்தனையும், நெஞ்சத்துணிவும் ஏற்படும். மனித உடலில் அறுவைச் சிகிச்சையில் பிணைந்திருக்கும் மயிர் மழிக்கும் திறனை விலங்கின் உரிக்கப்பட்டத் தோலின் மயிரை மழித்துப் பறையிசைக் கருவி செய்த வினைஞரின் பட்டறிவிலிருந்துதான் தோன்ற இயலும். ஏற்கனவே, விலங்கு, மனித உடலில் வினைபுரிந்த நாவிதரைப் பகுத்தறிவு அறிவியல் மருத்துவராகப் பரிணமிக்கும் நிலையை அரசு உருவாக்கமும் பேரரசு விரிவாக்கமும் நிகழ்த்தியப் போர்கள் தூண்டியது.

போரில் அல்லது நோயில் மூக்கிழந்தோருக்கு, மாற்று மூக்குகளை வைத்து ஒட்டுறுப்பு அறுவைமுறை சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதர்கள் கண்டுபிடித்ததாக

டி.டி. கோசாம்பி கூறுவதை (கோ. ரகுபதி, 2006) மறுக்க இயலாது. அரசு, குடும்பம் ஆகியவற்றின் தோற்றத்தின் அடித்தளமான சொத்துடைமையை வாரிசுக்குக் கொடுப்பதற்காக, மணமாக இருக்கும் மணமகனுக்கும் மணமகளுக்கும் “ஆண்மை”, “பெண்மை”களை மர்மமயிர் மழித்தல் வழி நாவிதரும் நாவிதச்சியும் பரிசோதித்தனர்29. இவை மாப்பிள்ளைச் சவரம், இடைச் சவரம் என அழைக்கப்பட்டது. புதுமணத் தம்பதியரின் முதலிரவு உடுப்பை, மறுநாள் வெளுக்க எடுத்து “இரத்தக் கறையைக்” கண்டு மருத்துவர் பரிசோதித்த “ஆண்மை” “பெண்மை” செயலாற்றியதைப் பெற்றோரிடம் கூறுவது மாயக்காரனின் (“வண்ணாரின்”) கடமை. மருத்துவரும் மாயக்காரனும் மறுஉற்பத்தியை அறிய மருத்துவச்சியும் அல்லது இவ்வினையில் கைத்தேர்ந்த“புலை”த் தொழில் சமூகத்தினரும், மகப்பேற்றில் பிரசவம் செய்தனர். “பேய்க்கும் பார் நோய்க்கும் பார்” என்ற சொல் வழக்குப் பேயோட்டுதல் வண்ணாரோடும், நோய் நீக்குதல் நாவிதரோடும் இணைந்திருந்ததையும் இணைத்துப் பார்த்தால், மாயவித்தையிலிருந்து மருத்துவம் பரிணமித்தது தெளிவு. அதாவது, மாயக்காரனிடமிருந்து மருத்துவர் தோன்றினார். துணியில் இரத்தக் கறையை நீக்கிய வினைஞரை, அழுக்கை நீக்கும் “சலவையாளரா”கவும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நபர்களுக்குச் சிகிச்சையளிக்க மயிரை மழித்த வினைஞரை “சவரக்காரர்”களாகவும் பரிணமித்தனர். (கோ. ரகுபதி, 2006). அறுவைச் சிகிச்சை செய்த நாசுவன்ஃ நாசிவன்ஃநாவிதர் என்ற பெயருக்குப் “புலை”த் தொழிலுக்குத் தரப்படும் “தூய்மையற்ற’’ என்றும்30. புலைமகனுக்குப் புலையன், கீழ்ச்சாதியான், புரோகிதன், நாவிதன்” என்றும் பொருள் கூறுவதும்.31 பறையர், வேட்டுவர் ஆகியோரின் தொழிற் பெயர். “நாவிதர்”32 என்பதும் அவர்கள் “புலையர்” கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. வண்ணார், நாவிதரோடு இணைபவர், வள்ளுவப் பறையர். வள்ளுவர்கள் மருத்துவத்தோடு எதிர் காலத்தைக் கணித்துச் சோதிடம் கூறுவர். வண்ணாரும் நாவிதரும் மக்களைப் பேயிலிருந்தும், நோயிலிருந்தும் பாதுகாத்தனர் என்றால் வள்ளுவர் நோய், பேய் உட்பட மக்களுடைய எதிர்காலத்தில் வாழ்க்கையைச் சோதிடத்தால் கணித்துக் கூறுவார். இவர் மாயவித்தையிலிருந்துதான் தோன்றியிருக்க இயலும். மாயவித்தையில் மூலிகைகளை மருந்தாகக் கொடுப்பதும் வழமை இருந்ததாலும், வள்ளுவப் பறையர்கள் “புலை”த் தொழிலிருந்து விலகி சோதிடத்தையும், சித்த மருத்துவத்தையும் செய்தனர். அயோத்திதாசர் சித்த மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டிருந்ததை இப்பின்னணியில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். கேரளத்தில் வள்ளுவப் பறையர்களுக்குக் கணியன் என்றும் பெயர் இவர்கள் மேற்குறிப்பிட்ட வினைகளோடு மாயவித்தையும் செய்வர். கணியன்கள் தமிழகத்தில் இசையையும், ஆவேச ஆட்டத்தையும் நிகழ்த்துவர். மாயவித்தையில் முக்கிய அங்கம் வகித்த தோலில் வினைபுரிந்த பறையரின் உட்பிரிவான செம்மார், பறையருக்குச் சடங்கியல் தலைமை வகிப்பவரும், தோலில் இசைக்கருவிகள் தயாரித்த வெட்டியாரிடமிருந்துதான் உருவாகியிருக்க இயலும். செம்மார்கள் இசைத்தனர் என்றாலும், எந்நிகழ்வுகளில் அதைச் செய்தனர் என்பது தெளிவற்று இருக்கிறது. இங்கு விவாதிக்கப்பட்ட பொதர வண்ணார், வள்ளுவர், நாவிதர் செம்மார் ஆகியோர், சங்க காலம் தொட்டு நிகழ்ந்த அரசியல் பொருளாதார மாற்றங்களினூடாகத் தோன்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் தனிச்சிறப்பான வினைஞராகப் பரிணமித்தனர். இருப்பினும், அவர்கள் தங்கள் தொப்புள்கொடி உறவை அறுக்கவில்லை. பறையருக்கு நிகழ்த்தும் மாயவித்தையான சடங்கில் அவர்கள் பிணைந்திருக்கின்றனர். “நாவிதர்”கள் பிராமணரல்லாத அனாதைப் பிணங்களை எரிக்கும் “உரிமை” தங்களுக்கானது எனக் கருதுகின்றனர்,33 இவர்களைப் போல், அனாதைப் பிணங்களை அப்புறப்படுத்திப் புதைப்பது தோட்டிகளின் வேலை.34 ”வெட்டியா-னும் பிணமும் கட்டிப் புரளும்” என்னும் தமிழ்ப் பழமொழி வழி பிணமெரித்தலில் வெட்டியா-னின் பங்கை அறியலாம்35 . வெட்டியானும் தோட்டியும் பறையரே என ’ஸ்டுவர்ட்’ பதித்துள்ளார்.

தங்களுக்குத் தேவையான வினைஞர்களைப் பறையரிடமிருந்து எடுத்ததை மறைக்க, படைக்கப்பட்டப் புராணங்களில் வண்ணாரு-க்கும், நாவிதருக்கும் கூறப்படும் ஆரிய ஸநாதந புராணம் சுவராசியமானது. அவை, “வைசியன் பிராமண ஸ்திரீயைப் புணரப் பிறந்தவன்” வண்ணார் என்றும்36, இதைத் தலைகீழாக மாற்றி “வைசியப் பெண்ணுக்கும் மருத்துவத்தைச் செய்த பார்ப்பனருக்கும் பிறந்தவர்” அம்பஸ்தா / அம்பட்டர் என்றும் கூறுகின்றன. 37 நாவிதர்களை அம்பட்டர் என்றும் அழைப்பர். “அம்பஸ்தா” என்ற வடமொழிச் சொல் தமிழில் அம்பட்டர் ஆனது. ஆரிய ஸநாதந நால்வருணத்துக்குள் நிகழ்ந்த புணர்ச்சியால், அக்குழுக்களுக்கு எதிரான திராவிட இனக்குழுக்கள் தோன்றின எனக் கூறுவது பொய். மேலும், மருத்துவத்தைத் “தீட்டு”, “இழிவு” எனக்கூறும் ஆரிய ஸநாதந சட்டங்கள் பார்ப்பனர்கள் மருத்துவத்தில் ஈடுபடுவதைத் தடுக்கிறது.38 அவ்வாறிருக்கும் போது வைசியப் பெண்ணைப் புணர்ந்த அப்பார்ப்பனர் மருத்துவம் செய்தார் எனப் புராணம் கூறுவதும் பொய்தான். கோயில் சாமி சிலைகளுக்கும், கோயிலோடு இணைந்துள்ள சாதியாருக்கும், அழுக்கை வெளுக்க ஈரங்கொள்ளி, பாண்டி வண்ணார் என இரு பிரிவினரை வண்ணாரின் கொள்ளிக்கட்டையிலிருந்து சிவன் படைத்ததாகக் கூறப்படும் புராணங்கள் வண்ணார் ஏற்கனவே, இருந்ததைக் கூறுகின்றன. அந்த வண்ணார் மாயவித்தைச் செய்த பொதரையர் ஆவர். (கோ. ரகுபதி, ஆதிமாயன்: வண்ணார்). பறையரின் நாவிதருக்குக் குடிப்பறையன், குடிப்பிள்ளை எனப் பெயர்39 . மேற்குறிப்பிட்ட வினைகளைப் பிறருக்குச் செய்கின்ற நாவிதரின் பெயர் குடிமகன், குடிப்பெண்40 எனப் பெயர். இவ்வினைகளைச் செய்வோர், பிற சாதியினரிடம் தோன்றாததால் அவர்கள் நாவிதரான குடிப்பறையனைத் தங்களுக்காக எடுத்து குடிமகன் எனப் பெயர் சூட்டினர் எனலாம். வண்ணார்கள் வெளுக்கப் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிவபுராணம் கூறுவதற்கு மாறாகப் பறைவண்ணார், பொதரை வண்ணார், ஏகாலி என அழைக்கப்படுபவர், தங்கள் பாட்டன் எனக்கூறி அவ்வாறு அழைக்கும் வழமையும் வழக்காறும் பறையரிடம் இருப்பது பறையருக்கும் பொதரையருக்குமான இரத்த உறவைக் கூறுகிறது.41 (இத்தகைய வழக்காறு பிற சாதியினரிடம் இல்லாததால், அவர்கள் வண்ணார்களைப் பறையரின் உட்பிரிவான பொதரையருக்குப் புராணமும் புதுப்பெயரும் சூட்டினர். இச்செயலில் தமிழ்ச் சைவர்களுக்கும், ஆரிய ஸநாதநிகளுக்கும் வேறுபாடு இல்லை. பார்ப்பன முனிவருக்கும் பறையர் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்42 வள்ளுவர்கள் எனப் புராணம் பொய் என்பது விளக்காமல் விளங்கும்.

தோலிலிருந்து பொருட்கள் தயாரித்தோரில் தமிழகத் தோல்கொல்லர், கேரளத் தோல்கொல்லர், தோல் கேடயங்களைத் தயாரித்த பளிச்சக் கொல்லர் ஆகியோரும் அடங்குவர் சேணவார், கத்தி, உறை, செருப்புப் போன்ற பொருட்களைத் தோல்கொல்லர்கள் பாணன்களோடும் இணைந்து தயாரித்தனர். தோல்கொல்லர் தோலில் சாயமிடுவதோடு மாயவித்தையையும் செய்தனர். தோல்கொல்லர்களைக் கொல்லர் பிரிவைச் சேர்ந்தோர் எனக் கூறினாலும், பிறகொல்லர்கள் தோல்கொல்லரோடு உண்பதோ, மண உறவோ கொள்வதில்லை. தோலில் தொழிற்படுவதால் அவர்களைத் தாழ்ந்தவராகக் கருதியதோடு, தங்களைத் தீண்டுவதற்கும் பிற கொல்லர்கள் அனுமதித்ததில்லை45 . ஆகவே, தோல் கொல்லர் ஏற்கனவே, தோலில் வினைபுரிந்த வெட்டியார், பாணர், செம்மான் போன்ற வினைஞரிடமிருந்துதான் தோன்றியிருக்க இயலும்.

இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்தும் “உரிமை”யைப் பெற்றிருந்த வெட்டியார் இதற்கு ஈடாக உழவுத் தொழிலுக்குத் தேவையான தோல் கொடுத்து “உதவுவது” அவர்களின் கடமை என்ற குறிப்பு விவசாயத்தில் தோல் பயன்பாட்டைத் தெரிவிக்கிறது46. விவசாயத்தில் கமலை அல்லது கவலைத் தொழில் நுட்பத்தில் தோலால் செய்யப்பட்டப் பெரிய பை கிணற்றிலிருந்து நீர் இறைத்தது. தோல் கொடுப்பது வெட்டியானின் கடமை, அதில் தோல்பை தயாரிப்பது செம்மானின் வேலை. 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், பறையரில் சிலரின் தொழிற் பெயராகத் “தச்சன்” எனப் பதியப்பட்டதானது47 உழவுக்கான கலப்பையையும், பறையர்கள் தயாரித்ததைத் தெரிவிக்கிறது. பறையர்களே நெல் விதையைக் கண்டுபிடித்தனர் எனக் கூறும் காணிக்காரரின் வழக்காறு48, உழவுப் பறையர்49 பறையரின் பிரிவு என்பதையும் இத்தோடு இணைத்து விளங்கிக்கொண்டால் பாரம்பரியமான உற்பத்தி முறையில் ஒரு முழு நிறைவான சமூகமாகப் பறையர்கள் இருந்தது புலப்படுகிறது. இதுவரை விவாதித்ததிலிருந்து, விலங்கு, மனித உடல்கள், இரத்தம், புலால், தோல், இசை, சடங்குகள் என உடல்களில் வினையாற்றிய வினைஞர்களைத்தான் தமிழ்ச் சங்க இலக்கியம் புலைத்தொழில், புலையர், இழிசினர் எனக் கூறியது. “புலை”த்தொழிலில் ஈடுபட்டோர் தங்களைப் பறையரின் உட்பிரிவு எனச் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் 1891-ஆம் ஆண்டு, 1901-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புகளில் பதிவு செய்திருப்பதும், சென்னை மாநிலக் கணக்கெடுப்பில் ஸ்டுவர்ட் புலையர்களைப் பறையர் எனக் கூறுவதாலும்50, 1935 ஆம் ஆண்டு வெளியான புலைச்சேரி என்பதற்குப் பறைச்சேரி புலைச்சாதியாரின் வசிப்பிடம் என ஆனந்தவிகடன் அகராதி பொருள் தருவதும் (ப. 1905), புலையர்கள் பறையர் என்பது திண்ணம். விலங்குகளின் தோலில் பறையர்கள் நிகழ்த்திய வினைசமூகப் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது. இதில் வினைபுரிந்தோர் ஆண் எனக் கண்டோம். விலங்குகளின் தோலை வினையாற்றுவற்குரியப் பொருளாகத் தோலை மாற்றியதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. இனி வரும் பகுதியில் அதைக் காண்போம்.

புலைச்சியும் சாம்பவச்சியும்

சங்க இலக்கியங்கள் புலைச்சி உடுப்பில் வினைபுரிந்ததையும், பனையோலையால் புட்டில் செய்து விற்றதையும் கூறுகின்றன. உடுப்பின் அழுக்கை உவர்மண்ணால் நீக்கியதால் அவளை “வண்ணாத்தி” யாகக் காணும்போக்கு ஆதிக்கம் செலுத்துகிறது. புலைச்சிக்கு எவட்சரம், புலைப்பெண், யவட்சரம்51 என்றும் சாம்பவச்சிக்கு எவட்சரம், வெடியுப்பு52, என்றும் அவ்விருவருக்கும் பொருட்களைப் பொருளாகத் தருவதும் எவட்சரத்துக்குச் சவர்க்காரம், வெடியுப்பு53 எனப் பொருள் கூறுவதும், புலைச்சியை அழுக்கு நீக்கும் வினையைக் கடந்தும் புரிந்து கொள்ளத் தூண்டுகிறது. எவட்சரம், சவர்க்காரம், வெடியுப்பு எனக் கூறப்படும் பொருட்களுக்கும் புலைச்சிப் பயன்படுத்திய உவர்மண்ணுக்கும் தொடர்புண்டு. உவர்மண் என்றால் உழமண், சவர்மண், களர் நிலம், உழைமண், உப்பு சேர்ந்த மண் எனப் பொருள்54. இவ்வுவர்மண்ணை “வவ்வுவர்ப்பு” என அகநானூறு (89: 7 – 8) கூறுவது அதன் சுவையையும் சுட்டுகிறது55. உவர்நிலத்தில்கிடைக்கும் இப்பொருளுக்குப் பூநீர், பூநீறு, பனிநீர் என்ற பெயர்களும் உண்டு. சவர்க்காரம் அல்லது சவுக்காரம், பூநீறு என்றால் மருந்து பொருள் ஆகும். சவர்க்கம் என்பது கல்லுப்பு56. வவ்வுவர்ப்பு, சவுக்காரம், பூநீறு, உவர்மண் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பொருள் பனிக்காலத்தில் உவர்நிலத்தின் மேற்பரப்பில் வெண்மை நிறத்தில் பூப்போல் பூத்திருக்கும். இந்நிலத்தில் விவசாயம் செய்ய இயலாது. உவர்ப்புச் சுவையுடைய இவ்வுப்பு எளிதில் ஆவியாகும். மனிதர்களும், விலங்குகளும் உணவுக்கான உப்பை மண்ணிலிருந்துதான் எடுத்தனர். உப்பின் சுவையறிந்த விலங்குகள் உப்பு மண்ணைத்தேடி உப்பு நக்கச் செல்வதுண்டு57. மனிதர்களுக்கான உப்பும் மண்ணிலிருந்துதான் பெறப்பட்டது. கன்னடத்துப் பறையரெனக் கூறப்படும் ஹொலையரில் குச ஹொலையர் உப்பு மண்ணிலிருந்து உப்பு எடுத்தனர்58. வவ்வுவர்ப்பு சித்த மருந்துகளில் சேர்க்கப்படும். மாயவித்தையோடு மூலிகை மருந்து கொடுக்கும் வழமை பிற்காலத்தில் சித்த மருத்துவமாகவும், பறையரின் பிரிவுகளான நாவிதர், வள்ளுவர் சித்த மருத்துவராகவும் பரிணமித்ததால் நிலத்திலிருந்து அந்நியப்பட்டனர். ஆனால், அழுக்கை நீக்கும் வினைக்கு வவ்வுவர்ப்பு அடிப்படை என்பதால், வண்ணார்கள் உவர் நிலத்தோடு பிணைந்திருந்தனர். இதனால், வவ்வுவர்ப்பு கிடைக்கும் நிலத்தை அடையாளம் காண சித்த மருத்துவர்கள் வண்ணார்களைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இவ்வழமை 1980களிலும் இவ்வழமை நீடித்தது59. உவர் மண்ணை ஒரு குறிப்பிட்டக் கொதிநிலைக்கு உட்படுத்தினால் வெடியுப்புக் கிடைக்கும். போரில் வெடியாகப் பயன்படுத்தல், விவசாயத்திற்கான நீர் நிலை ஆதாரங்களான கிணறு, ஏரி தோண்டவும் சுண்ணாம்புக்கல் தோண்டி எடுக்கவும் இடையூறாக இருக்கும் பாறைகளை வெடிவைத்து தகர்த்தல், அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் கட்டுவதற்கான கற்பாறைகளைத் தகர்த்து எடுத்தல் போன்றவற்றுக்கு இவ்வெடியுப்புப் பயன்படுத்தப்பட்டது. சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் போர்களுக்குப் பயன்படுத்தியதை ஆராய வேண்டும். இந்தியாவில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை நிறுவ நடத்தப்பட்டப் போர்களில் பிரான்சு நாட்டினர் இம்மருந்தை வண்ணார்களிடம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

புலையரையும் பிறசாதி ஆண் பெண்களுக்கு வெடியுப்புப் பொருளாகச் சுட்டப்படவில்லை. புலைச்சிக்கும் சாம்பவச்சிக்கும், சவர்க்காரத்தையும் வெடியுப்பையும் என்று பொருளாகக் கூறுவதால் அவ்விருவரும், ஒரே புள்ளியில் இணைகின்றனர். சாம்பான், சாம்பவன் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்த பெண் சாம்பவச்சி ஆவாள். பறையரின் மற்றொரு பெயர் சாம்பவர் ஆகும். உவர்மண் நிலத்தில் கிணறு தோண்டி புலைத்தி ஆடைவெளுத்ததைப் புறநானூறும், (311) அகநானூறும் (89: 7 – 8) கூறுவதால் அவ்வுப்பை புலைச்சி / சாம்பவச்சி யின் கண்டுபிடிப்பு எனலாம். இக்கண்டுபிடிப்பின் வரலாற்றைத் தேடுதல் அவசியம். இவ்வவ்வுவர்ப்பு சுண்ணாம்பு உற்பத்திக்கு அடித்தளமிட்டது. உவர்நிலத்தின் மேற்பரப்பில் வவ்வுவர்ப்பும் அதன் அடிப்பகுதியில் சுண்ணாம்புக் கற்களும் கிடைக்கும். மேற்பரப்பில் வவ்வுவர்ப்பைச் சேகரித்த புலைச்சி / சாம்பவச்சிக்குத்தான் அப்புவிப் பரப்பைத் தோண்டும் சிந்தனை உதித்திருக்க முடியும். உவர்நிலப்பரப்பின் கீழ்ப்பகுதியைத் தோண்டினால் பலவகைக் கற்கள் கிடைக்கும். அவற்றில் சிறிய உருளை வடிவிலான சுண்ணாம்புக் கற்கள்தான் சுண்ணாம்புக்கான மூலப்பொருள். மண்வெட்டி, கடப்பாறை, பிக்காசு, பெரிய சிறிய ஆப்புகள் ஆகியன பூமியைத் தோண்டும் கருவிகள். மண்ணோடு சேர்ந்திருக்கும் சுண்ணாம்புக் கற்களைப் பெரிய மண் அரிப்பானில் பிரித்தெடுப்பர். பிற கற்களைக் காரைவீடுகள் கட்டப் பயன்படுத்துவர். இக்கற்களைத் தோண்டி எடுக்கும் இடத்தை “கல்வெட்டுங்குழி” என அழைப்பர். சுமார் மூன்று முதல் ஏழு அடி ஆழத்தில் பூமியைத் தோண்டி சுண்ணாம்புக் கற்களைச் சேகரித்தல், சூளையில் சுண்ணாம்புக் கற்களைச் சுண்ணாம்பாக மாற்றுதல் என அத்தொழில் மொத்தமும் சாம்பவச்சி செய்தாள். சூளையில் சுண்ணாம்புக் கற்கள் நிரப்பப்பட்டு இதை நெருப்பில் தூளாக்கக் கரிக்கட்டை, காய்ந்தப் பனங்கொட்டை இடப்படும். இவையிரண்டும் அடுக்கடுக்காக இடுவர். மிதமான நெருப்பை உண்டாக்க சூளைக்கு அடியில் விசில் வடிவத் தகரப் பெட்டிக்குள் மரத்தாலான மூன்று விசிறிகள் பொருத்தப்பட்டு இது சுற்றுவதற்காகத் தகரப்பெட்டிக்கு வெளியில் சிறிய சக்கரமும் இணைக்கப்படும். இது சூளைப்பெட்டி எனப்படும். இதிலிருந்து சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட தொலைவில் இரண்டு மரங்களுக்கு இடையே பெரிய சக்கரம் பொருத்தப்படும். இதைச் சுற்றுவதற்கு ஏற்றாற்போல் ஒரு இரும்புக் கம்பியும் இணைக்கப்படும். சூளைப்பெட்டியும், பெரியசக்கரமும் தச்சரிடமிருந்தும் கொல்லரிடமிருந்தும் பெறப்படும். 1891ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு தச்சர் என்பது பறையரின் தொழிற் பிரிவின் பெயர் எனக் குறிப்பிடுவதானது60 தச்சப் பறையரிடமிருந்து சுண்ணாம்புப் பறையர் சு+ளைப் பெட்டியைப் பெற்றார் எனலாம். சூளைப் பெட்டியும் பெரிய சக்கரமும் இணைக்கப்பட்டு பின்னது சுற்றப்படும்போது கிடைக்கும் ஆக்ஸிஜன் சூளையில் மிதமான கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பில் சுண்ணாம்புக்கற்கள் பொடியாகும். ஒருநாள் முழுக்க நிகழும் இவ்வேதி வினையில் மறுநாள் காலை சு+ளை வாசலைத் திறந்து சுண்ணாம்பு எடுக்கப்படும். தென் தமிழகத்தில் ஆற்றுப்பாசனம் அல்லாத குளம், கிணற்று நீராதாரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பில் உவர் நிலத்தைக் காணலாம். திருச்செந்தூரிலிருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சாத்தான்குளம், பன்னாம்பாறை பகுதிகள் சுண்ணாம்பு உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும். ஆகவேதான், சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்ட பறையரின் பிரிவுகளான சாம்பவர், செம்மான், சுண்ணாம்புப் பறையர், சுண்ணாம்புக்காரன் தென்தமிழகத்தில் வசிக்-கின்றனர்61. பூமியைத் தோண்டி சுண்ணாம்புக் கற்களைக் கண்டுபிடித்து சுண்ணாம்பு உற்பத்தி செய்தவள் புலைச்சி / சாம்பவச்சி. மன்னர்களின் அரண்மணை, கோட்டை, கொத்தளங்கள், மாடமாளிகைகளுக்குப் பின் புலைச்சி / சாம்பவச்சியின் மண்ணியல், வேதியியல் அறிவும், உழைப்பும் பொதிந்திருக்கிறது. விவசாயத்துக்கும் பிற தேவைகளுக்குமான நீராதாரங்களைப் பெருக்க உருவாக்கப்பட்டக் குளம், ஏரி, கிணறு தோண்டும்போது இடையூறாக இருக்கின்ற பாறைகளை வெடிகளால் தகர்த்ததால் இவற்றிலும் புலைச்சி / சாம்பவச்சி பங்கை மறுக்க இயலாது.

வவ்வுவர்ப்பும், சுண்ணாம்பும் அதாவது, புலைச்சியும் சாம்பவச்சியும்தோல் பதப்படுத்தும் வேதியியல் புள்ளியில் இணைகின்றனர். பலியிடப்பட்ட அல்லது இறந்த விலங்குகளை உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் நீண்ட நேரமிருந்தால் அழுகும். இதைத் தடுக்க முதலில் அதில் உப்புத் தடவப்படும் பின் சுண்ணாம்புக் கரைசலில் பதப்படுத்தப்படும். பறையரின் உட்பிரிவினரான வெட்டியார், பாணர், செம்மார் ஆண்கள் தோலில் தொழிற்பட்டதாலும் அச்சமூகப் பெண்கள் வவ்வுவர்ப்பு, சுண்ணாம்பு உற்பத்தி செய்ததாலும் இப்பொருட்களைத் தோலைப் பதப்படுத்த பயன்படுத்தியது திண்ணம். விலங்குகளின் பச்சைத்தோலைப் பதப்படுத்தும் பணிகளிலும் அப்பெண்கள்தான் ஈடுபட்டிருக்க இயலும். சங்க காலத்தின் பிற்பகுதியில் சோழர், பாண்டியப் பேரரசுகள் உருவாக்கத்தால் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற போர்கள் தோல் பொருட்கள் பயன்பாட்டையும் கோட்டை, கொத்தளம், அரண்மனைக் கட்டுதலையும் அதிகரித்து. ஏற்கனவே, சங்க காலத்தில் அரசர், வணிகர் போன்ற பிறரைச் சுரண்டும் வர்க்கத்தினரிடம் மட்டும் பரவியிருந்த உடுப்புப் பண்பாடு இக்காலகட்டத்தில் வெகுமக்களிடம் மெல்ல பரவியது. சங்க காலத்தில் வவ்வுவர்ப்பால் அழுக்கு நீக்கிய தொழில்நுட்பத்தால் இப்புதிய நிலையை எதிர்கொள்ள இயலாததால் ” வெள்ளாவி” முறைத் தோன்றியது. இரும்பை உருக்கும் கொல்லரின் பட்டறை, சுண்ணாம்புச் சூளைப் போன்று வெள்ளாவியும் வேதியியலை அடிப்படையாகக் கொண்டது. இத்தொழில் நுட்பத்திற்கு வட்டார வேறுபாடு உண்டு. அடியில் நெருப்பு மூட்டும் உயரத்தில் மண்பானையை வைத்து அதைச் சுற்றி மண்ணால் அடைத்து அடுப்பு உருவாக்கப்படும். பானையில் தண்ணீர் ஊற்றி உவர்மண் கலந்த உடுப்புகளை முதலில் அழுக்கு மிகுந்திருக்கும் உடுப்பை வைத்து இறுதியில் அழுக்குக் குறைவற்ற உடுப்பு வைக்கப்பட்டு அவற்றை முரட்டுத் துணியால் மூடி கட்டப்படும். வெள்ளாவி பானைக்கு அடியில் நெருப்பிடும்போது பானையின் நீர் கொதித்து ஆவியாகிப் பானைக்குமேல் அடுக்கப்பட்டிருக்கும் உடுப்புகளில் படிந்துள்ள அழுக்கு கரைந்து பானையில் விழும். இது அழுக்கு, இரத்தக்கறைகளை உடுப்பு, துணிகளிலிருந்து நீக்கும் வேதியியல் தொழில் நுட்பம். பேரரசு உருவாக்கம், போர், இலைதழைகளுக்குப் பதிலாகத் துணியாலான உடுப்பு அணியும் பண்பாடு போன்றவைச் சுண்ணாம்புச் சூளை, வெள்ளாவி முறையை சிறு சிறு தொழிற்சாலையாகக் கிராமங்களிலும், சேரிகளிலும் தோற்றுவித்தது. இப்போக்குப் புலைச்சியை வண்ணாத்தி, சாம்பவச்சி என இரு வினைஞராகப் பிரித்தது.

சங்ககாலப் புலைச்சியிடமிருந்து பரிணமித்த தொழில் நெசவு ஆகும். பனங்குருத்-தோலையால் புட்டில் செய்து விற்பது புலைச்சியின் தொழில்களுல் ஒன்றெனக் கலித்தொகைப் பாடல் (117) கூறுகிறது. பாணர்கள் பனையோலைக் குடையும்62, பறையர்கள் பிரம்புக் கூடைகள், மூங்கில் பாய்கள், பனையோலைக் குடைகளும் தயாரித்தனர்63. பனையோலையில் பொருட்கள் உற்பத்திச் செய்யும் ஓலைப்பறையர் என்னும் பிரிவு பறையரில் உண்டு64. மனிதக் குழுக்கள் குடும்பங்களின் குழுக்களாகப் பரிணமித்தப் போக்கில் கட்டற்ற புணர்ச்சியை ஒருதார ஒழுங்காக முறைப்படுத்தியதால் உடலினி-டையை மறைக்கும் அவசியம் ஏற்பட்டது. முதலில் இலைதழைகளாலும் பின் செடிகொடி, மரப்பட்டைகளிலும் நாரெடுத்துப்பின்னி உடலினிடையை மறைத்தனர். ‘பெர்னல்’ கூறுவதுபோல், கூடைமுடைதல் மட்டுமல்ல இலைதழை பின்னலறிவும், துணிநெய்தலுக்கு வித்திட்டது. முடைதலையும், பின்னலறிவையும் கொண்டிருந்தோர்தான். துணிநெய்தலுக்குப் பரிணமிக்க இயலும். ஏற்கனவே, இவ்-வினையைப் பட்டறிவாகக் கொண்டிருந்த புலைச்சி, பறைச்சி, பாணத்திகளே நெசவுக்குள் நுழைந்தனர். பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இராசஇராசச் சோழனின் கல்வெட்டு நெசவுத் தொழிலாளருக்குரிய “நெச” என்னும் பெயரால் பறையர்களைச் சுட்டியதும்65 சௌராஸ்டிரர்கள் தங்களைப் பட்டுநூல்காரர் எனக் கூறுவதை ஏற்க மறுத்து இச்சொல் தென்னிந்தியாவைச் சேர்ந்த சேணியர், கைகோளர், தேவாங்கர், காட்டிரியர், பறையர், செங்குந்தர், முதலியார், சாலியர், பத்மசாலேக்கள் ஆகிய நெசவில் ஈடுபட்டிருக்கும் சாதியாருக்கு உரியதாகும்66 எனக் கூறியதையும் ஒப்பிட்டால் புட்டில், குடை, கூடை முடைந்த புலைச்சி, பாணத்தி, பறைச்சி ஆகியோரிலிருந்து நெசவாளர்உருவானர் எனலாம். நெசவில் ஈடுபடும் கோலியப்பறையர், சாலியப் பறையர் இருவரும் பறையரின் பிரிவுகளே67. தமிழகத்திலும் தெலுங்குப் பகுதியிலும் மிகுந்து காணப்படும் நெசவாளர் கைக்கோளர் ஆவர். இவர்களின் தோற்றத்திற்குக் கூறப்படும் வீரபாகு புராணத்தில் கைக்கோளரும், பறையரும் அடங்குவர்68. கங்கம்மா தெய்வத்திற்கு நிகழ்த்தப்படும் மாதங்கி வேடமணிந்த ஆட்டம் கைக்கோளருக்கு மட்டுமே உரியது69. மதங்கம் என்றால் ஒரு பறை, ஒரு மலைமுகில் என்றும்70 மதங்கர் என்றால் ஒரு முனி, பாணர் என்றும்71 மதங்கன், மாதங்கன், மாதங்கர் என்றால் ஒருமுனி சண்டாளன், செருப்புத் தைப்போன், கீழ்மகன், வேடன், முருகன் என்றும்72 மாதங்கி, மதங்கி என்றால் காளி, துர்க்கை, பதினாறு வயதுப்பெண், பாடுவாள்73 என்றும் பொருள்கள் உண்டு. கைக்கோளரின் மாதங்கி ஆட்டம் அவர்கள் பாணர், பறையிசை, மாயவித்தை, தோல் போன்றவற்றோடு தொடர்புடையவர்கள் என்பதைத் தெரிவிக்கிறது. ’வீரபாகு’ புராணத்தில் சிவன் கைக்கோளரை இசைத்தொழிலையும், உயிர்களுக்கு தீங்கிழைக்காத தொழிலையும் செய்யக் கூறியதும் மாதங்கியோடு இணைந்து நிற்கிறது. இப்புராணத்தையும் மாதங்கி ஆட்டம், மதங்கம், மாதங்கன், மாதங்கி இவற்றுக்கான பொருள்களையும் கைக்கோளரோடு இணைத்துப் பார்த்தால் அவர்கள் பறையரின் உட்பிரிவுகளான பாணர் அல்லது கோலியப் பறையரிலிருந்து தோன்றினர் என விளங்கிக் கொள்ளலாம். இவ்விடத்தில் நெசவைக் கைக்கொண்டிருந்த கோலியப் பறையரையும் காணவேண்டும். பறையரின் பிரிவான இவர்கள் பின்னலையும், முடைதலையும் செய்த பறையர், பாணரிலிருந்துதான் உருவாகியிருக்க இயலும். பறையரோடு உண்ணுவதையும், மணவுறவையும் கைவிட்டதாக 1901ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் கூறுகிறது74 இவர்கள் “முரட்டுக் காடா” நெசவில் ஈடுபட்டனர்75. முருட்டுத்துணி, மெல்லியதுணி, ஒருவிதப் புடவை ஆகியவற்றுக்குப் பறைக்காளி, பறைக்கால், பறைக்காலி, பறைத்துணி என ஆனந்தவிகடன் அகராதி (ப. 1828) பொருள் கூறுவது பறையரிடமிருந்து நெசவுத் தொழில் உருவானது விளங்கும். இப்பொருட்களும் முடைதல் பின்னலிலிருந்து நெசவு தோன்றியதும் பறையர், பாணர், கோலியர் ஆகியோருக்கு இடையே ஒப்புமைகளைக் காணமுடியும். பறையரிடமிருந்து உறவை அறுத்த கோலியர் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட்டனர். சிவபுராணத்தில் கைகோளருக்குக் கூறப்பட்ட உயிர்களுக்குத் தீங்கிழைக்-காமையைக் கோலியரோடு இணைத்தால் கோலியர், (கை)கோலர் இருவருக்கும் உச்சரிப்பைத் தவிர, வேறு என்ன வேறுபாடு இப்போது இருக்கிறது. கோலியர் / (கை)கோலர்கள் பறையர் உறவை அறுக்கக் காரணம் “புலை”த் தொழிலுக்கு இழிவு கற்பிக்கப்பட்டதால் ஆகும். சங்க இலக்கியத்தில் புலைச்சியின் தொழில் இழிவாகக் கூறப்படவில்லை அவை போற்றப்பட்டது. காரணம், அவள் இரத்தத்தில் வினைபுரியாததே ஆகும். ஆணாதிக்க அகமண சாதி உருவாக்கம் நிகழ்ந்தபோது பறைச்சியின் நெய்தல் தொழிலைக் “கற்றுக்கொண்ட கோலியப் பறையர்கள் புதிய குலத்தொழிலுக்குள் சுருங்கிவிட்டனர். முடைதலும் நெய்தலும் ஒழுங்குமுறைகள், வடிவியல், எண்கணித அறிவியலுக்கு வித்திட்டது எனப் ’பெர்னல்’ கூறுவதை மறுக்க இயலாது76 பறையரின் பிரிவான வள்ளுவப் பறையரும், கணியரும் சோதிடத்தைச் செய்வர். இவ்விருவரின் சடங்கியல் தலைமையையும், நெய்தலையும் சோதிடத்தில் வரையப்படும் கட்டங்களையும் இணைத்துப் பார்த்தால் இவர்கள் சடங்கியலாலும், முடைதலாலும் பின்னப்பட்டு பரிணமித்தனர் என ஊகிக்கலாம்.

மேலே விவாதித்ததிலிருந்து, புராணங்கள் புனைவதுபோல் எவரும் திடீரெனத் தோன்றவில்லை. பறையர்கள் இயற்கையின் மீது நிகழ்த்திய தொடர் வினையால் மாயவித்தை, தோல், தோலைப் பதப்படுத்தல், பறையிசைக் கருவிகளும், பிற தோல்பொருட்களும் தயாரித்தல், வவ்வுவர்ப்பு, வெள்ளாவி, சுண்ணாம்புச் சூளை, அறுவைச் சிகிச்சை, மூலிகைமருத்துவம், கூடை, ஓலைப்பெட்டி முடைதல், துணிநெய்தல் என இயற்கை அறிவியல், வேதியியல், இயற்பியல், கணிதம் பறையரோடு பிணைந்ததால் அதில் வினை புரிந்தோர் தனிச்சிறப்பான வினைஞராகப் பரிணமித்து பறையரின் உட்பிரிவாகி தனித்த சாதியாக மாறினர். ஆகவேதான் பறையர், பாணர், வெட்டியார், செம்மார், கோலியர், தச்சர், தோல்கொல்லர், நாவிதர் ஆகியோருக்கு இடையே மாயவித்தையின் எச்சங்களும் அதிலிருந்து பரிணமித்த ‘தனிச்சிறப்பான’ விஞ்ஞான அறிவும் வினையும் அவர்களோடு பிணைந்திருக்கின்றன. இப்பரிணாமத்தைத் தெளிவாக விளங்கிக் கொண்ட ’எட்கர் தர்ட்ஸன்’,

“பறையர்கள் வளர்ச்சிப்பெற்ற சமூக அமைப்பைப் பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். பறையர்களுக்கான கைவினைஞர், நெசவாளர், தச்சர், அம்மட்டர், பூசாரிகள், ஆசிரியர்கள் முதலியோர் பறையர் சாதிக்குள்ளாகவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டனர்”

எனக் குறிப்பிடுகிறார்77. மேற்குறிப்பிட்ட விஞ்ஞான-த்தில் பிற சாதிகள் வினைபுரியாதபோது, பறையிசை எவ்வாறு “தமிழர்” இசை எனக் கூற இயலும்? பிற்காலப் பேரரசுகளின் அரண்மனை, கோட்டை கொத்தளம், பண்ணையாரின் மச்சுவீடுப் போன்றவை பறையரின் இயற்கை அறிவியல் அறிவினால் விளைந்தது திண்ணம். இக்கண்டுபிடிப்புகளுக்கான இயக்கப்-போக்குகள் சங்க காலத்திற்கு முன்பிருந்தே தோன்றியது. இத்தகைய வளர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணி இயற்கை குறித்த புராதான கால புரிதல்களும் பறையரின் எதிர்வினையை உந்தித் தள்ளிய மாயவித்தையும் ஆகும். வண்ணாரின் வெள்ளாவியிலும் செம்மான், சுண்ணாம்புப் பறையரின் சுண்ணாம்புச் சூளையிலும், நெருப்பை உருவாக்கியப் பறையர்கள் மொத்த சமூகத்திற்கும் உற்பத்தியையும், வெளிச்சத்தையும் கொடுத்தனர்.

ஆதாரங்கள்:

ஆனந்த விகடன் சித்திரப்போட்டி அகராதி (சென்னை, பிராட்வே: ஆனந்த விகடன் பிரஸ், 1935).

எட்கர் தர்ட்ஸன், தொகுதிகள், 1-3 ரூ 5-7 (தஞ்சாவு+ரை: தமிழ்ப் பல்கலைக் கழகம்).

சிவசுப்பிரமணியன். ஆ . தமிழக வண்ணார்: வரலாறும் வழக்காறுகளும் (சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2014).

தனஞ்செயன், த. தமிழகத்தில் புரத வண்ணார்கள் (சென்னை: அலைகள், 2014).

தண்டபாணி,ஏ.விழுப்புரம் மாவட்ட புதிரை வண்ணார் வராறு 2000 – 2015 (2017), ப. 10, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்காகச் சம்ர்ப்பிக்கப்பட்ட வெளியிடப்படாத ஆய்வேடு).

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம் (சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2014).

பகவதி, கு. தமிழர் ஆடைகள் (சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003).

ரகுபதி, கோ. ஆதிமருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு (பாண்டிச்சேரி: வல்லினம், 2006).

ரகுபதி, கோ. தீண்டப்படாதோரின் தீண்டப்படாத அறிவியல் தொழில்நுட்பம், புதுவிசை, 2008. (ஏப்ரல் – ஜூன்), பக். 8 – 15).

ரகுபதி, கோ. மயிரின் சாதியியலும் சமத்துவ மயிரும் தலித் (ஜூலை – ஆகஸ்ட், 2020).

ராகுல் சாங்கிருத்தியாயன், வால்கா முதல் கங்கை வரை (சென்னை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ்).

ரோஸலிண்ட் மைல்ஸ், உலக வரலாற்றில் பெண்கள் (மொர். வி. ராதாகிருஷ்ணன்), (சென்னை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 2001).

ஜார்ஜ்தாம்ஸன், சமயம்பற்றி (கோவை: விடியல், 2005).

மார்க்ஸ் ஏங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (சென்னை: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 2018).

Debiprasad Chattopadhyaya, Science, Philosophy and Society, Social Scientist, 1993.

Footnotes:

    1. தாம்ஸன்,2005,ப.13
    2. மார்க்ஸ் ஏங்கல்ஸ்,2018). ரோஸலிண்ட் மைல்ஸ்,2001). ராகுல் சாங்கிருத்தியாயன் 2018).
    3. தர்ட்ஸன்,தொ. 3,ப. 17
    4. தர்ட்ஸன் தொ. 5,ப. 469
    5. தர்ட்ஸன்,தொ. 5,ப. 465
    6. தர்ட்ஸன்,தொ. 6,ப. 31
    7. ஆ. அ. பக். 1905–1906
    8. தர்ட்ஸன்,தொ. 5,ப. 469
    9. ஆ.அ. ப. 1533
    10. ஆ. அ. ப. 863 *ஆ. அ. -ஆனந்த விகடன் அகராதி
    11. தர்ட்ஸன்,தொ. 5,ப. 61
    12. தர்ட்ஸன்,பக். 81–82
    13. தர்ட்ஸன்,தொ. 6,ப. 29
    14. தர்ட்ஸன்,தொ. 7,ப. 267
    15. தர்ட்ஸன் தொ. 6,ப. 31
    16. தர்ட்ஸன்,தொ. 6,ப. 40.
    17. சாட்டர்டன் (1904),தர்ட்ஸன்,தொ. 6,ப. 42
    18. தர்ட்ஸன்,தொ. 7,ப. 405).
    19. தர்ட்ஸன்,தொ. 6,பக். 400–401
    20. தர்ட்ஸன்,தொகுதி,7,பக். 182–183
    21. தர்ட்ஸன்,தொ. 6,ப. 105&117–118; தொ. 7,ப. 404).
    22. தர்ட்ஸன்,தொ. 6,ப. 91
    23. தர்ட்ஸன்,தொ. 5,ப. 255,ரூதொ. 6,பக். 34,42,86,89&400
    24. கு. பகவதி,த. தனஞ்செயன்,2014).
    25. ஆ. சிவசுப்பிரமணியம்,2014,ப. 47
    26. கோ. ரகுபதி,2020
    27. தேவிபிரசாத்,2014
    28. தர்ட்ஸன்,தொ. 1,ப. 47
    29. தர்ட்ஸன்,தொ. 1,ப. 47
    30. தர்ட்ஸன்,தொ. 5,ப. 255
    31. ஆ. அ. ப. 1906
    32. தர்ட்ஸன்,தொ. 5,ப. 255
    33. தர்ட்ஸன்,தொ. 1,ப. 44
    34. தர்ட்ஸன்,தொ. 7,ப. 191
    35. தர்ட்ஸன்,தொ. 7,ப. 404
    36. தர்ட்ஸன்,தொ. 6,ப. 89
    37. ஏ.தண்டபாணி,2017
    38. தர்ட்ஸன்,தொ. 1,ப. 41
    39. னுநடிiிசயளயன,1993
    40. ஆ.அ. ப. 902
    41. ஆ. அ. ப. 902
    42. த. தனஞ்செயன்,2014,பக். 130–131
    43. தர்ட்ஸன்,தொ. 7,ப. 316
    44. தர்ட்ஸன்,தொ. 5,ப. 463
    45. எ. சார்ட்ன்,‘தோல் பதனிடுதலும் தோல் தோல் தொழிலும்’,தர்ட்ஸன்,தொ. 5,பக். 181–182)
    46. தர்ட்ஸன்,தொ. 3,ப. 175
    47. தர்ட்ஸன்,தொ. 7,ப. 405
    48. தர்ட்ஸன்,தொ. 7,ப. 1
    49. தர்ட்ஸன்,தொ. 3,ப. 219
    50. தர்ட்ஸன்,தொ. 6,ப. 87
    51. தர்ட்ஸன்,தொ. 6,ப. 82
    52. ஆ.அ.ப. 1905
    53. ஆ.ஆ.ப. 1187
    54. ஆ. அ. ப. 1916
    55. ஆ.அ. ப. 500
    56. ஆ. சிவசுப்பிரமணியன்,2014,ப. 31
    57. ஆ. அ. பக். 1159 ரூ 1916
    58. தர்ட்ஸன்,தொ.2,ப. 47
    59. தர்ட்ஸன்,2,ப. 453
    60. தகவல்: வைகை குமாராசாமி,திருநெல்வேலி
    61. தர்ட்ஸ்ன்,தொ. 7,ப. 1
    62. தர்ட்ஸன்,தொ. 6,பக். 400&ப. 456; தொ. 7,பக். 182–183
    63. தர்ட்ஸன்,தொ.6,பக். 31–32
    64. தர்ட்ஸன்,தொ.6,ப. 140
    65. க.அ.ஜோதிராணி,2005,ப.62
    66. தர்ட்ஸன்,தொ. 5,ப. 413
    67. தர்ட்ஸன்,தொகுதி,ஆறு. பக். 182–183
    68. க.அ.ஜோதிராணி,பக். 64–65
    69. தர்ட்ஸன்,தொ. 3,பக். 44–45
    70. தர்ட்ஸன்,தொ. 3,ப. 57
    71. ஆ. அ. ப. 1951)
    72. ஆ. அ. ப. 1951
    73. ஆ.அ. பக். 1951&1970–1971
      ஆ. அ. பக். 1951&1970
    74. தர்ட்ஸன்,தொ. 3,ப. 395
    75. தர்ட்ஸன்,தொ. 3,ப. 396.).
    76. J.D. Bernal> Science in History (Bhopal: Eklavya> P.. 436
    77. தர்ட்ஸன்,தொகுதி ஏழு,ப. 436
Subscribe
Notify of
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இரா.சுரேஷ், தமிழ்ப்பல்கழைக்கழகம்
11 months ago

தமிழகத்தில் பரவலாக இருந்த சமூகத்தில் புலையரும் ஒருவர் மலையாளத்தில் புழை என்பது ஆறு/நீரோடைகளைக் குறிப்பதாக அறியமுடிகிறது.(Chandra sehendira,sarsvathi,1958p22) இடைக்காலக் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள “புலத்திக்குளகரை” (தெ.இ.க.2-69) என்பது நீரோடை/குளக்கரை பகுதியாக இருக்கலாம் இது வரியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. “பாடி” என்பது முல்லை நிலக் குடியிருப்புகளைக் குறிக்கும் சொல்லாகும். (நாகசாமி.இரா.(பொ.ஆ)1979ப-13) இதன் வழி நோக்கினால் புலைப்பாடி என்பது முல்லை நிலத்தில் (காட்டுபகுதி) நீரோடையை ஒட்டியச் குடியிருப்புகள் எனப்பொருள் கொள்ளலாம். இப்பகுதியில் கடவர், மலைசர், மலைமலசர், புலையர் இனமக்கள் குடியேற்றங்கள் இருக்கும் என அறியமுடிகிறது. (இராமச்சந்திரசெட்டியார்2004ப.65)

           சங்கக் காலத்தில் பாணன், பறையன், துடியன், கடம்பன் உள்ளடங்கிய சமூகப் பிரிவே புலையர் என்றப் பெயரில் அழைக்கப்பட்டுள்ளனர்.(தெட்சிணமூர்த்தி. ஆ1980ப-350) தமிழ் அகராதியில் புலையன் என்றச் சொல்லுக்கு சங்க இலக்கியப் பாடலை (புறம்-360) சான்றாக்கொண்டு “புரோகிதன்” என்ற பொருளும், அரிச்சந்திர புராணத்தை சான்றாகக் கொண்டு“கீழ்மகன்” என்ற பொருளும் தரப்பட்டுள்ளது.(Tamil Lexicon,p-2791)

           புலையன் என்ற சொல்லுக்குப் புலால் உண்ணக்கூடிய/புழங்கக்கூடிய இனம் என ஆங்கிலேய அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் (George Hart) “பண்டைத் தமிழிலக்கியம்” என்ற ஆய்வுக் கட்டுரையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.(BurtonStein,(Ed)1976p55) பண்டைய தமிழ்ச் சமூகத்தில் உணவு உண்பதன் அடிப்படையில் வேறு எந்தச் சமூகமும் இனம் பிரிக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

            பழங்காலச் சமுதாயத்தில் கடவுள் வழிபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. இதனை இரும்புக் காலத்திய ஈமக்காடுகளும் அதில் கிடைத்த தொல்பொருட்களும் உறுதிச்செய்கின்றன. பழந்தமிழகத்தில் இறுதிச்சடங்கை நடத்திவைக்கும் பண்டிதராகப் “புலையர்” இருந்துள்ளனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.(தேமொழி,2018ப142)

           சுடுகாட்டில், இறந்த மன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு,புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும் என என்பதை புறானூற்று பாடல் எண்: 360 வழியாக அறியமுடிகிறது.

                                    “புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி

                                      புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

                                      அழல்வாய்ப் புக்க…

இப்பாடலை மேற்கோள் காட்டிப் “புலையர்“ புரோகிதராயிருந்தனர் என “தமிழ் அகராதி (Tamil Lexicon,p-2791) விளக்கம் தந்துள்ளது.

            இடைக்காலப் பக்தி இலக்கியமான பெரியப்புராணத்தில் புலையர்கள் வாழும் பகுதி “புலையர்பாடி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகப் “புலத்தி” என்றச் சொல்லுக்கு புலையர் என்ற சொல்லின் பெண்பாலாக விளக்கம் தரப்பட்டுள்ளது. (நாகசாமி.இரா.1979ப24) ஆனால் சலவைத் தொழிலைக் குடும்பமாகச் செய்வதால் இதுப்பொருத்தப்பாடாக இல்லை. புலையர்பாடி வாழ்விட அமைப்பிலும் “புலைத்தி” என்றச்சொல் நீருடன் புழங்குதலைத் தொடர்புப்படுத்தி குறிப்பட்டது போல் தெரிகிறது. இடைக்காலத்தில் துணி வெளுப்பர்கள் ஈரம்கொள்ளி (தி,வி.செ.84) என அழைக்கப்பட்டுள்ளர். 

           சங்க இலங்கியம், தேவாரப்பாடல், இடைக்காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புலையர் என்ற சமூகம் தற்போதும் கேரளா மாநிலத்திலும், தமிழகத்தின் மேற்குத் தொடச்சி மலைப்பகுதியில் உள்ள உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், பழனிப் பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அறியமுடிகிறது. (மேலது.1979-ப12)

            ஆனால் இடைக்கால தமிழகத்தில் இவர்களது குடியேற்றங்கள் பரவலாக சமவெளி பகுதியிலும் இருந்துள்ளன காட்டாக இந்த ஆய்வுப்பகுதியில் இடைக்காலத்திய புலையக்குடி() தற்போது புளியாங்குடி(திருப்புகளூர்) என்ற பெயரில் மாற்றம் பெற்றுள்ளதை பார்க்கமுடிகிறது. மேலும் இந்த ஆய்வுப்பகுதியில் புலையர் என்றப் பெயருடன் தொடர்புடைய, புளியாங்குடி, (திருமருகல்) புளிச்சாக்காடி (நன்னிலம்) புளியஞ்சேரி,(குடவாசல்) திருப்புலியூர் (நன்னிலம்) ஆகிய ஊர்கள் உள்ளன. மேலும் இந்த ஆய்வுப்பகுதியில் இடைக்காலத்தில் இருந்த பலையக்குடி, (ந.க.தொ.3-391) திருகொட்டாரம் (நன்னிலம்) என்றப் பெயரிலும்,பலையனூர் (இ.க.ஆ,அ.522-1922) திருகண்ணப்புரம் (திருமருகல்) என்றப் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேற்காண்ட ஊர்பெயர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளன. இவ்வூர்கள் முந்தைய புலையர் வாழ்விடங்களாகவும் இருக்கலாம்.

           புலையர் என்ற சொல் பறையர் என்று மருவியதாக இரா.பூங்குன்றன் கல்வெட்டில் பறையர் என்ற கட்ரையில் குறிப்பிடுகிறார்.(நாகசாமி.இரா.1976ப9) இதன் வழியாக முற்காலத் தமிழகத்தில் வாழ்ந்தப் புலையர்கள் தற்போது பறையர் என்று மாற்றம் பெற்றுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.இதனை  இடைக்காலத்தியப் பக்தி இலக்கியங்களும் உறுதிப்படுத்துக்கின்றன.காட்டாக சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் புலையராக அறியப்படுகிற நந்தனார் கோபால கிருஷ்ண பாரதியார் (1967) எழுதிய “திருநாளப்போவர் சரித்திரத்தில்” பறையராக காட்சிப்படுத்தப் பட்டுள்ளார். நாயன்மார்களில் ஒருவரான அம்பர் மகாளத்தை (திருமாளம்-நன்னிலம்) சேர்ந்த சோமாசி மாறநாயனார் புராணத்தில் அவர் வளர்த்த வேள்வியில் தோன்றியச் சிவன் பெரியப்புராணத்தில் புலையராகவும், (மீனாட்சிசுந்தரம்1965ப174) நாயன்மார்கள் தொடர்பான ஆய்வுகளில் பறையராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.(பாஸ்கரதொண்டைமான்.மு1964ப-176)

 இந்த ஆய்வுப்பகுதியில் உள்ள திருமாகளம், திருவாரூர் சிவன் கோயில் இறைவன்கள் புலையர் உருவில் உள்ளதாக மேற்குறிப்பிட்டுள்ள புராணங்களில் வழியாக அறியமுடிகிறது.

           சங்க இலக்கியம், தேவாரப்பாடல்கள் மற்றும் இடைக்காலக் பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் புலையருக்கு உரிய சிலப் பணிகளை இன்றும் ஒரு சில கிராமங்களில் பறையர்கள் செய்துவருகின்றனர். தற்காலத்தில் இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வருபவர்களை அரசு இனம் கண்டு அவர்களுக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களில் “சாம்பவ பறையர்” எனக்குறிப்பிடுகிறது. சில ஊர்களில் இவர்களுக்குக் காணியாட்சி (சேவைப்பணிக்குரிய 100 குழிக்கு குறையாத அளவுள்ள விளைநிலம்) உரிமை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இவர்களைக் காணியாட்சி வேலை செய்யக் கூடியவர்கள் என அடைமொழி இட்டு அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக தென்தமிழகத்தில் உள்ள பறையர்கள் தங்களை சாம்பவர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றர்.(SrinivasaAyangar,1915.p69)

இரா.சுரேஷ், தமிழ்ப்பல்கலைக்கழகம்

ஆய்வேட்டில் இருந்து ஒருப்பகுதி புலையரை பற்றி பார்வைக்காக

கட்டுரையின் நோக்கம் ஆக்கபூர்வமானவை …வாழ்த்துகள்
கட்டுரையாளர் புலையர் என்பதற்கு ஸ்டுவர் ஹர்ட் கொடுத்த விளக்கத்தின் மீது விசாரணைகள் ஏதும் இன்றி அப்படியே ஏற்றுகொண்டு விரிந்து எழுதியுள்ளார், ஆனால் புலையர் என்றச்சொல் புனால் உண்பதால் மட்டும் வந்ததல்ல புலை என்பது மலையாளத்தில் நீரோடையை குறிப்பதை அவர் கணக்கில் கொள்ளவில்லை, நீரோடை ஒட்டி குடியேறிவர்கள் என்றப்பொருளில் புலையர் என்ற சொல் உள்ளது .தொடக்கா வாழ்விடங்கள் இயற்கையான நிலவியில் பெயரில் அமைந்துள்ளதை கவனததில் கொள்க .நீருடன் புலங்குவதால் புலைச்சி என்ற அழைக்கப்பட்டுள்ளனர், முந்தையவது வாழ்விட ம் பிந்தையது பயன்பாடு . இடைக்காலக் கல்வெட்டுகளில் புலத்திற்குளம் என்ற சொல்லாடல் உள்ளது இது நீரோடைகளை குறிப்பதை அறியமுடிகிது. இது வரியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. புலை என்பது பறையென திரியும் என்பது இலக்கணம். இவை இரண்டையும் வேறாக பிரித்து பார்க்க அவசியம் இல்லை ஆனால் எல்லவற்றையும் ஒன்று போல் பினைத்து எழுதுவது முரண்பாடாக உள்ளது, இது கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள மையகருத்தியலுக்கு முரணாக உள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!