“காசக் கொண்டுபோய்த் தூரப் போடுடா’ என வளர்மதி கத்தவும் அப்போய் கொஞ்சம் பயந்துதான் போனான். திடுக்கிட்டு உறங்கி எழுந்தவளின் கண்கள் சிவப்பேறியிருந்தன. கரகரத்த குரலில் உறுமல்.
உறங்குவதற்கு முன் நெஞ்சை அழுத்திய அழுகை அப்படியே அங்கேயே அடைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். இன்னும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சுழ்ந்திருந்த சீன ஊதுவத்திகளின் புகை கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்து மூக்கை எரித்தது. தொலைவில் கேட்ட நன்யின் இசை இருண்டு கிடந்த சாயுங்கால வீட்டை மேலும் துக்கமாக்கியது.
வாசலுக்கு நேராக நீட்டி நகங்களைப் பார்த்துக்கொண்டாள். கையின் அசைவுகளை நகங்கள்தான் நளினமாகவும் கம்பீரமாகவும் மாற்றுவதாகத் தோன்றியது. அவை கைகளின் கிரீடங்கள். நாளை அவற்றை வெட்ட வேண்டும். கிரீடம் இல்லாத கரங்களில் மலவாளியைத் தூக்க வேண்டும். தன்னால் அது முடியாது எனத் தோன்றியது. ஓடிப்போய் கப்பளாவின் முகத்தில் ரப்பர்க் கையுறைகளை வீசி எறிந்துவிட்டு வர வேண்டும் போல இருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then