“எனது கலை என்னையும் உங்களையும் பற்றியது. மனிதம் முழுவதையும், நம்மைப் பிணைக்கும் அன்பு என்ற அழகிய பிணைப்பையும் குறித்தது… எனது கித்தானில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. நான் கண்டடைந்த, கண்டடையப் போகும் வண்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த மனிதர்களையும், நான் இன்னும் பெறாத நண்பர்களையும் போன்றவை. வண்ணங்கள் எனக்கு மக்களாக, நிலப்பரப்புகளாக, உணர்வுகளாக, தூய்மையான, எளிமையான அன்பைப் போன்று இன்பம் தரும் எல்லாமுமாகத் தோன்றுகின்றன. வண்ணங்கள் ஓடி ஒன்றோடொன்று கலந்து உருமாறும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்… ஒரு கலைப் படைப்பின் அதிமுக்கியச் செய்தி அன்புதான்0 சுற்றிலும் எந்தப் பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல், இயற்கையின் தூய இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் கட்டற்ற அன்பு.”
– அதிவீரபாண்டியன்.
எழுத்தின் இன்பம் என்பது அதிகம் வாசிப்பதிலேயே இருக்கிறது. கதைகளானாலும் சரி, கட்டுரைகள் என்றாலும் சரி, எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த ஒரு திசையில் வாதமோ பிம்பங்களோ உருவாவதை எதிர்கொள்வதில்தான் இன்பம் இருக்கிறது. எழுத்தை உருவாக்குவதிலும் இன்பம் இருக்கிறதென்றாலும், அது எவ்வளவு திருப்தி தருவதாக அமைகிறது என்பதன் அடிப்படையில் இருக்கிறது. நம் மனதில் எண்ணியபடி அமையாத எழுத்து இன்பம் தருவதாக இல்லை. ஆனால், ஓவியமோ, இசையோ அப்படியில்லை. அவற்றில் மிக இயல்பான இன்பம் ஒன்றிருக்கிறது. எண்ணற்ற காகிதங்களும் வண்ணக் குப்பிகளும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கொடுக்கப்பட்ட குழந்தையின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால், அதிலிருக்கும் இன்பத்தை ஓர் ஓவியத்தால் தன் பார்வையாளருக்கு நினைவுபடுத்த முடியுமா? அதிவீரபாண்டியனின் ஓவியங்களில் சில அதையே நினைவு+ட்டின. அந்தப் புள்ளியிலிருந்துதான் அவற்-றின் மீதான என் ஈர்ப்பும் தொடங்கியது. காட்சியை, கற்பனையை, நினைவை ஓவியமாக ஆக்குவது மட்டுமல்லாமல், இந்த ஓவியங்கள் ஓவியம் செய்தல் என்ற செயல்பாட்டிலிருந்தே காட்சியை, கற்பனையை, நினைவை உருவாக்-குகின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then