“…man survives only where traditional child training provides him with a conscience which will guide him without crushing him and which is firm and flexible enough to fit the vicissitudes of his historical era.”
– Erik H. Erikson
‘Childhood and Society’
‘ஜெய் பீம்‘ சுமார் பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் மெல்ல காலூன்றி வந்து கொண்டிருக்கும் தலித் மறுமலர்ச்சி (Dalit Renaissance) சினிமாவிற்கொரு பலமான இணைவாக வந்து சேர்ந்துள்ளது. பா.இரஞ்சித்தின் இயக்கத்திலோ அல்லது ‘நீலம்‘ தயாரிப்பு நிறுவனத்தின் கீழோ உருவான திரைப்படங்களே பெருவாரியாக இத்தகையவொரு திரைப்பட இயக்கத்தை உருவாக்கித் தக்கவைத்துக்கொண்டிருந்த சூழலில், அந்தப் பின்புலமின்றிச் சற்று வெளியிலிருக்குமொரு இயக்குநரால் இந்தக் கதைப் படமாக்கப்பட்டிருப்பது, துவக்க நிலையிலிருந்த இந்த சினிமா இயக்கத்தின் பரப்பு தொடர்ந்து விஸ்தீகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகின்றது. இதுகாறும் வெளியான திரைப்படங்களில் தலித் மக்களின் வாழ்வியல் வலுவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை தமிழ் வெகுஜன சினிமாவின் எழுதப்படாத விதியாக விளங்கும் கதாநாயக மிகை பிம்பத்தால், அந்தப் பிம்பத்துக்கும் கதையில் பேசப்படும் அரசியலுக்கும் சரிசமமான முக்கியத்துவம் வழங்கும் வகையிலொரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சிகளே அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. இந்தப் பிம்பக் கட்டுமானத்தின் இறுகிய தன்மைக்குள்ளிருந்து கொண்டு தலித் அரசியலை இயைந்தளவிற்குச் சமரசங்களின்றிக் காட்சிப்படுத்த முயல்வது பெரிய சவால். புதியதலைமுறை இயக்குநர்கள் குறிப்பாக இந்தப் பாதையைத் தெரிவு செய்துகொண்டது தமிழ் சினிமாவிற்குள் அவர்களுக்கொரு நிலையான இடம் கிடைக்க வகை செய்திருக்கின்றது. இருப்பினும் எந்தளவிற்கு அந்த முன்னணி நடிகர்களின் ரசிகப் பட்டாளங்கள் இந்த அரசியலின் பக்கம் நகர்ந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே! ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்தமான நடைமுறை வாழ்க்கைகளின் திரைப் பிரதிநிதித்துவம் அவற்றுக்குள்ளிருக்கும் இயல்பான உண்மையை வெளிக்கொணரும் பொழுது, திரையில் கட்டமைக்கப்படும் அந்த வெளிப்பாட்டின் நம்பகத்தன்மை அந்த வாழ்வியலோடு அறிமுகமில்லாமல் இருக்கும் வெகுஜன சினிமா ரசிகர்களை அதனைப் புறக்கணிக்க இயலாத நிலைக்குக்கொண்டு செல்லும். அத்தகையவோர் இடத்தில் சினிமாக்களுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் கோட்பாடுகளால் பொது மக்கள் மத்தியில் வலுவாக வேரூன்ற முடியும். அதற்கு மாறாக, நிலுவையிலிருக்குமொரு வணிக சினிமா சட்டகத்தை ஓர் அரசியல் நிலைப்பாட்டின் பரப்புரை வடிவமாக மாற்ற முனையும் பொழுது அங்கு வேரூன்றுவது அந்தச் சட்டகம் தானே தவிர அரசியல் நிலைப்பாடாக இருப்பதில்லை.
வணிக சினிமா சட்டகத்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? என்று கேட்போமேயானால், அந்தச் சட்டகம் எவ்வாறு தலித் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படங்களுக்கு உதவுகின்றனவோ அதைப் போலவே பிற அரசியல் நிலைப்பாடுகளுக்கும், சொல்லப் போனால் இந்த அரசியலுக்கு நேரெதிராக இருக்கும் சாதி அரசியல் படங்களுக்கும் உதவிவிடும். நாயகப் பிம்ப சினிமாவைக்கொண்டு பாசிசத்தையும் பேச முடியும் சமத்துவத்தையும் பேச முடியும் என்ற அதன் குதர்க்கப் போக்கு, இறுதியில், அதன் பின்புலமாக விளங்கும் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒரு சராசரியான திரைச் சுவாரசியம் என்ற இடத்தில் பார்வையாளர்கள் அதை உண்டு செரித்திடும் இடத்தையே உருவாக்குகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then