நவீனக் கவிதையின் பொதுவரைபடத்துடன் ஒட்டாத தனித்த வீறும் திமிறலும் கொண்டவை என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள். அந்தரங்க மௌன வாசிப்பு வடிவமாகவும் சுயத்தின் ’உள்ளொளி’யாகவும் முன்வைக்கப்பட்ட நவீனக் கவிதையின் சனாதனங்களை உலுக்கியபடி, உயிர்த்துடிப்பான நிகழ்த்துவடிவமாக, மாந்திரீகம், வழக்காறு, உச்சாடனங்கள், புனைவு, தொன்மக்கூறுகள் எனப் பைசாசம் கொள்பவை என்.டி.ராஜ்குமார் கவிதைகள். அது மாந்திரீக மொழியுடன் இயற்கைக் கூறுகளும், பிரபஞ்ச சக்திகளும், எதிர்க்கடவுளர்களும் புகுந்து ஆடும் உக்கிரநிலம். அங்கு தலித் கலையரசியலின் அறிவாண்மையும் விசேட அழகும் துடிகொண்டு வேறு ஞானத்தை வேறு வரலாற்றை இறக்குகின்றன. இந்திய வருண ஒழுங்கின் புனிதமையங்களை அவை எதிர் அழகியலால் எதிர் பண்பாட்டுக் குறிகளால், கலகப் படிமங்களால் விபரீதப்படுத்துகின்றன. `நேற்று வைத்த மரச் சீனி கெழங்கும் முள்ளும் தலையும் பழங்கஞ்சியிலிட்டு விரவி வாரிக் குடித்துவிட்டு பீ அள்ளப் போகும் என் கவிதை’ என்ற என்.டி.ராஜ்குமாரின் தனித்த சொற்பாட்டை இன்னும் நவீனக் கவிதைமொழி கடந்து செல்லவில்லை.
இவர், நாகர்கோவிலைத் தலைநகரமாகக்கொண்ட கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட குலசேகரம் என்னும் ஊரில் இந்திராபாய் – திவாகரன் ஆசான் தம்பதியருக்குப் பிறந்தவர். `தெறி’, `ஒடக்கு’, `ரத்த சந்தனப் பாவை’, `காட்டாளன்’, `பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’, `சொட்டுச் சொட்டாய் வழிகிறது செவ்வரளிப் பூக்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் `கல் விளக்குகள்’ என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இவரது கவிதைகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏ.அய்யப்பன், பவித்ரன் தீக்குன்னி, பொய்கையில் அப்பச்சன் ஆகிய மலையாளக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விரைவில் `கொடிச்சி’ என்னும் கவிதைத் தொகுப்பும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் புது எழுத்துப் பதிப்பகம் மூலம் வெளிவரவுள்ளன. `லில்லி சிகாமணி’, `எரிமலை அறந்தை நாராயணன்’, `மணல்வீடு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கவிஞர், நிகழ்த்துக்கலைஞர், இசைஞர், மொழிபெயர்ப்பாளர், நடிகர், பாடலாசிரியர் எனப் பல்கலை வடிவங்களில் ஆளுமைத்திறன்கொண்ட கவிஞர் என்.டி.ராஜ்குமாருடன் நீலம் சார்பாக உரையாடினேன்.
ஆல மரத்தின் மீதேறி நின்று குளத்தில் மீன் பாய்ச்சலிட்டுக் குதிப்பேன். நண்பர்களோடு சேர்ந்து மரக் குரங்கு, கபடி போன்ற விளையாட்டுகளைக் களித்து வந்தேன். ஆனாலும் பள்ளி அறைக்குள் புகுந்து விட்டால் ஒரு புலிக்குகைக்குள் புகுந்து புலிவாலைப் பிடித்ததைப் போன்று திணறுவேன். இந்த வாத்திச்சிகள் மிகக் கொடூரமாக நடந்துகொள்வார்கள். எங்களிடமிருந்து காசு பிரித்துச் சந்தையிலிருந்து வாங்கி வந்த பிரம்பைத் திண்ணை வெய்யிலில் காயவைத்துப் பிரம்பு முறிய முறிய அடிப்பார்கள். அது ஒரு நோயாகவே அவர்களைத் தொற்றிக்கொண்டிருந்தது. நாங்கள் படிக்காத மாணவர்கள். எங்களைப் பின் பெஞ்சில்தான் உட்கார வைப்பார்கள். முதல் பெஞ்சில் இருப்பவர்களோ மாணவிகளோ சத்தமிட்டால் பின்னால் உட்கார்ந்திருக்கும் எங்களைக் கைகளும் குண்டியும் ரத்தம் கன்னி வரும் வரை அடிப்பார்கள். முந்தைய நாள் புத்தகத்தில் அடையாளப்படுத்தித் தந்த பாடத்தை மனப்பாடம் செய்து வந்து நிற்போம். இவர்கள் பிரம்பை எடுத்து வைத்துக்கொண்டு மனப்பாடப்பகுதியைச் சொல்லச் சொல்வார்கள். எங்களுக்கு மறந்து விடும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then