1920 ஜனவரி 31 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் மூக்நாயக் இதழைத் தொடங்கினார். எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அப்பணியை மேற்கொள்வதற்கான அவசியமென்ன என்று ஒரு நெடிய குறிப்பைத் தருவது பாபாசாகேப் அவர்களின் பாணி. தொகுப்பாக வெளிவந்துள்ள அவரது பல ஆய்வுக்கட்டுரைகளுக்கு அவரெழுதிய முன்னுரைகளே சான்று. சாதியக் கட்டுமானங்கள் வலுவாக இருக்கும் இந்தியாவில் வேறொருவரையும் விட ஒரு தலித்தாக தன் இயங்குதளம் தனித்துவமாக இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதை ஒவ்வொரு முறையும் பதிவு செய்தே வந்திருக்கிறார். மூக்நாயக் இதழ் தொடங்கப்பட்டு அதன் முதல் கட்டுரையிலும் அவர் அது குறித்து விவரிப்பதைக் காணலாம்
தலித்துகள் தங்களுக்கெனத் தனித்துவமான இயங்குதளத்தை உருவாக்கிக்கொள்ளும் ஒவ்வொரு சூழலிலும் அவர்கள் தங்களைப் பொதுச் சமூகத்திலிருந்து அதன் வழியாகத் துண்டித்துக் கொள்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுவதுண்டு. காந்தி காலத்திலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. தின்-மித்ரா, ஜெக்ருக், டெக்கான் ரியாத், விஜயி மராத்தா, தியான் பிரகாஷ், சுபோத் பத்ரிகா போன்ற இதழ்கள் தீண்டப்படாத மக்களின் சிக்கல்களைப் பேசுவதற்குத் தனியான பத்திகளை ஒதுக்கியிருந்தாலும் அதை விரிந்த பின்புலத்தில் விரிவாக அலசுவதற்குத் தனியாக ஒரு பக்கம் அவர்களால் ஒதுக்க முடியவில்லை என்கிற யதார்த்தத்தைக் குறிப்பிடுகிறார்.
இதனடிப்படையிலிருந்து சுதந்திரமான ஒரு செய்தி இதழ், குறிப்பாகத் தீண்டப்படாதவர்கள் என்றழைக்கப்படுபவர்களின் சிக்கல்களை உரையாடுவது இன்றியமையாதாகிறது, இந்த இதழ் அத்தேவையை நிறைவேற்றவே தோற்றுவிக்கப்படுகிறது என்கிறார். மூக்நாயக் இதழில் வெளிவந்த இம்முதல் கட்டுரையின் மொழிப்பெயர்ப்பை வெளிக்கொண்டு வருவது வரலாற்றின் பக்கங்களை மீண்டும் அசை போடுவதற்காக மட்டுமேயல்லாமல், நாம் மேற்கொண்டிருக்கும் பணி குறித்தான கேள்விகள் நம்மை ஆட்டுவிக்கும் போது அதிலிருந்து விடுபட்டு ஆற்றலோடு பணிபுரிய வேண்டிய தேவையை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then