கிம் கி டுக்

- அன்பு

தென் கொரியாவில் பிறந்திருந்தாலும் பாரிசில் தன் படிப்பை முடித்தவர் கிம் கி டுக். சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக ஓவியராக இருந்தவர். ராணுவத்தில் பணியாற்றியவர். சினிமா வாழ்க்கையில் கதையாசிரியராகத் தன் பயணத்தைத் தொடங்கி திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் எனப் பல பணிகளைச் செய்தவர். உலக சினிமா விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு விருதுகளைக் குவிக்கும் இவரின் திரைப்படங்கள்தான் இவருடைய தனித்தன்மைக்கான அடையாளம்.

Crocodile‘ திரைப்படம் மூலம் 1996ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தவர் கிம் கி டுக். அதைத்தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு வெளியான ‘The Isle‘ திரைப்படம்தான் அவருக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத்தந்தது. ‘Spring, Summer, Fall, Winter… and Spring‘, ‘Samaritan Girl‘, ‘3 Iron‘, ‘Birdcage Inn‘, ‘Time‘, ‘Amen‘, ‘Bad guy‘ மற்றும் ‘Pieta’ உள்ளிட்ட படங்கள் அவரின் படைப்புகளில் மிக முக்கியமானவை. திரையுலக மாமேதை கிம் கி டுக் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று கொரோனோ வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தார்.

ஓராண்டின் நிறைவில் அவரின் படைப்புகளின் வழி கிடைக்கும் அலாதியான அனுபவங்களைக் காட்டிலும் அவரை நினைவுகூர வேறெந்த நிகழ்வுகளையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையில்லை. அப்படி ஓர் அனுபவத்தைக் கொடுத்த அவரின் மிக முக்கியப் படைப்பான ‘3 Iron ‘ குறித்து பார்ப்போம். அதீதமான வன்முறை, அதீதமான செக்ஸ் என்று இருக்கும் இயக்குநர் கிம் கி டுக்கின் திரைப்படங்களில் ‘3 Iron’ முற்றிலுமே விதிவிலக்கான ஒரு படம். கிம் கி டுக்’கின் திரைப்படங்களை நுட்பமாகப் பார்க்கத் தொடங்கினால், அதில் பல கதைகள் ஒளிந்திருக்கும். அந்தக் கதைகளின் வெவ்வேறான பரிமாணங்களைத் தேடி சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதுதான் இவரின் திரைப்படங்களில் இருக்கும் மிக முக்கியச் சிறப்பம்சம். அந்தச் சிறப்பம்சம் 3 Iron திரைப்படத்துக்கும் உள்ளது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger