வ.புதுப்பட்டியில் பள்ளன் பறையன் சண்டையில எப்பையும் போலீசுக்காரனுக பறத்தெருவுல புகுந்து சைட்டு மாணிக்க பொம்பள பிள்ளைகள அடிப்பானுக. இப்ப சண்டைக ஓஞ்சது. இந்தப் பேனர் கலாச்சாரம் தல தூக்கிருச்சு. எந்தச் சாதிக்காரனப் பாத்தாலும் பொது எடத்துல பேனர் வைப்பானுக. கல்யாணம்னா பேனரு, காது குத்துக்கு பேனரு, புதுமணை புகுவிழானா பேனரு. இப்பிடி எங்னனாலும் பேனரு இருந்துகிட்டே இருக்கும். இந்தப் பேனரு கூட யாரு அதிகமா வைப்பாங்கன்னா பள்ளர், பறையர், சக்கிலியர், தேவர், பெற செட்டிமார் தெருக்காரங்க வைப்பாங்க. இதுல செட்டிமார், தேவருக மேல செக்கடி பொது எடத்துல பேனர் வைப்பாங்க. செக்கடியில ஸ்பீகர் வைச்சுப் பாட்டுப் போடுவாங்க. திர்ழா அன்னைக்குப் பள்ளர்க கூட மேல செக்கடில ஓரமாத்தா பேனர் வைப்பாங்க. ஸ்பீகர் அவுங்க தெருவுல வைச்சுப் பாட்டுப் போடுவாங்க. அப்பிடியே பள்ளப் பெயக ஸ்பீகர் பாக்ஸ மேலச் செக்கடில கொண்டுகிட்டு வைச்சுப் பாட்டுப் போட்டா, இந்தப் போலீசுகாரனுகளுக்கு எப்பிடித்தா தெரியுமோ தெரியல… வந்ததும் ‘ஸ்பீகர் பாக்ஸ எடு, ஒ தெருக்குள்ள வைச்சுப் பாட்டுப் போடு’னு சொல்லுவாங்க.
இப்பிடித்தா ஒருநா விக்னேசும் ஆரோக்கியமும் பள்ளிக்கொடத்துக்கு வௌ£டப் போகும்போது தேவமார் தெருக்காரனுக மேலச் செக்கடில ஸ்பீகர் பாக்ஸ் வைச்சுப் பாட்டுப் போட்டத பாத்தானுக. மேலச் செக்கடில ஒரு ஓட்டல்கூட இருக்கு. அங்க எல்லாச் சாதிக்காரனும் திங்க மாட்டானுக. எப்பெல்லா பள்ள, பறப்பெயலுக அந்தக் கடையில் திங்கிறானுகளோ அப்பெல்லா மத்த சாதிக்காரனுங்க வந்து திங்க மாட்டானுக. அந்தக் கடைய நடத்துறது செட்டிமார் தெருக்காரந்தா. ஆனா, அவெ கடைக்கு அவெ தெருக்காரனே வரமாட்டானுக. அவெ ஒன்னு அவெ சாதிக்காரன வைச்சு கடை நடத்தல. காலையில பைப்பு லைன், மரவெட்டப் போய்ட்டு வர்ற பள்ளப் பறப்பெயலுக சாந்தரம் இவெ கடையில வந்து புரோட்டா, சிக்கனுன்னு வாங்கித் திம்பானுக. காலையில கட இருக்காது. அதுனால அந்தக் கடையில மூனு போலீஸ்காரனுக ஒக்காந்திருந்தானுக. தேவமார் தெருக்காரனுக திர்ழா கொண்டாடுறதுக்குப் பாதுகாப்பா. இவெனுக அந்தப் போலீசுகாரனுகளப் பாத்துட்டு, இவெனுகளுக்குள்ள பேசிக்கிட்டானுக.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then




