மலேசியத் தமிழர்களும் வரலாறும்

- அ.பாண்டியன்

மிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்கப் பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக்கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கியக் குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின் நிலம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. மேலும்,  இனவாதிகள் முன்வைக்கும்  வந்தேறிகள் என்னும் அவப்பெயரை மறுக்கவும் பண்டைய வரலாற்றுத் தகவல்களைப் பொதுச் சமூகத்திடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஆனால் வரலாறு என்று இங்கு முன்வைக்கப் படுவனவற்றில் பலவும் வாய்மொழிக் கதைகளாகவும்  திரிபுகளாகவும் இருப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மிகப்பழமையான வரலாற்றுத் தகவல்களை இனப்பெருமையோடு இணைத்துக்கொண்டு பேசுவது வழமையாகியுள்ளது. ராஜேந்திர சோழன், கடாரம், பரமேஸ்வரா என வரலாற்றின் வெகுதூரம் பயணம்செய்து வெகுஜன மனம் குளிரும் சித்தரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. மக்களைத் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்க வீரக்கதை வடிவில் வரலாறு சுருக்கி ஒற்றைப்படையில் கூறப்படுகிறது. இந்நாட்டின் பிற இன மக்களுக்கு முன் தங்களை உயர்த்திக் காட்டும் நோக்குடன் பண்டைய வரலாறுகள் உணர்ச்சியோடு பேசப்படுகின்றன. இது நாட்டார் கதையாடலுக்கு நிகரானதுதான். ஓர் இனப்பிரிவின் எழுச்சியைத் தக்கவைக்க முன்னோரின் வாழ்க்கை பல்வேறு புனைவுகளுடன் சமூகத்தில் நீடிப்பதைப்போல, இங்கு வரலாறு பயன்படுகிறது.  மேலோட்டமான ஆய்வுகளின் மேல் கட்டியெழுப்பப்படும் இவ்வகை கதைகள் அரசியல் மேடைகளிலும் தன்முனைப்பாளர் பேச்சுகளிலும் அதிகம் புழங்குவதைக் காணலாம். அவர்களுக்கு வரலாறு என்பது மக்களைக் கவரும் சந்தைப் பொருளாகப் பயன்படுகிறது.

வரலாற்றை அறிவுத்துறையாக வாசிப்பவர்களும் ஆய்வாளர்களும் ஆவணங்களின் வழிதான் வரலாற்றுக்குள் பயணம் செய்ய முயல்வர் ஆவணங்களின் துணையோடு சொல்லப்படும் வரலாற்றுக் கருத்துகள்தாம் ஆய்வுலகில் ஏற்கப்படும். ஆவணங்களின் வழிதான் புதிய வரலாற்றுத் திறப்புகளையும் உண்மைகளையும் அடைய முடியும். இந்த வகையில்தான் மா.ஜானகிராமன் அவர்களின் நூல்கள் மலேசியத் தமிழ் எழுத்துலகில் முக்கியத்துவம் அடைகின்றன. 2021ஆம் ஆண்டிற்கான ‘வல்லினம் விருது’ இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!