பாண்டி டூ பாரிஸ்

- ஜோதி சங்கர் | புகைப்படக் கலைஞர் - முஸ்தபா

லக வரலாற்றில் கொரோனா பெருந்தொற்றுக் காலம் என்றும் நினைவில் நிலைத்து நிற்கும். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின் மனித அவலங்களையும் மனித மாண்பையும் மனித எழுச்சியையும் கலையின் விழியே வரலாற்றில் பதிவு செய்வதே மனித இனத்தின் அடையாளமாக இருந்துவிட முடியும். பாரிஸ் மாநகரத்தின் கொரோனா காலப் போராட்டத்தின் சாட்சியாகத்தான் அந்தப் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது. மெட்ராஸ் நுங்கம்பாக்கத்தில் பிரான்ஸ் அரசின் கலாச்சார மையமான அலியான்ஸ் பிரான்சேவில் ‘Pondy to Paris – A Lockdown Series’ எனும் தலைப்பில் சமீபத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியானது பாரிஸ் மாநகரத்தில் எட்டு மாதங்கள் தனித்துச் சிக்கிக்கொண்ட ஓர் இந்தியப் புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களால் ஆன ஒரு நகரத்தின் கொரோனா கால வரலாற்று ஆவணம்.

அங்கிருந்த புகைப்படங்கள் கொரோனா காலத்திற்கு முன்பான பாரிஸ் நகரத்தின் இயல்பான கொண்டாட்ட வாழ்வியலில் இருந்து தொடங்கிக் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த நிமிடங்களின் நிழலாய், அந்த வெறிச்சோடிய நகர வீதியில் உலாவிய சில மனிதர்களின் நம்பிக்கையாய், மெல்ல மீண்டெழுந்த அந்த நகரத்தின் உறுதியாய், மீண்டும் இயல்பிற்குத் திரும்பிய அந்த நகரத்தின் தெருவோரப் பாடகர்களின் இசையாய்ப் பல கதைகளைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ளன. உயிரோட்டத்துடன் திகழும் இப்புகைப்படங்களைப் பிரசவித்த முகமது முஸ்தபாவின் பின்புலமும்கூட பல கோணங்களும் பல அடுக்குகளும் கொண்டவையே ஆகும்.

முகமது அனீஃப் மற்றும் ஜொஹரா தம்பதியருக்கு ஐந்து மகள்களும் நான்கு மகன்களும் இருந்த நிலையில் 1982-ஆம் ஆண்டு இவர்களின் பத்தாவது குழந்தையாக முகமது முஸ்தபா பிறந்தார். புதுச்சேரியின் திப்ராய்பேட்டையில் வசித்து வந்த முகமது அனீஃப்பால் ஒரு கூலித் தொழிலாளியாகக் குறைந்த அளவே வருவாய் ஈட்ட முடிந்தது. அவரின் தாயர் ஜொஹரா, லசார் கோயில் தெருவில் தன் வீட்டு வாசலில் இட்லிக் கடை நடத்திக் குடும்பத்திற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளித்து வந்தார். சில சதுரடியே கொண்ட அந்தச் சிறிய குடிசையில்தான் குடும்பத்தின் அத்தனை நபர்களின் ஜீவிதமும் நடந்துகொண்டிருந்தது. தன் ஐந்தாவது வயதில் மருத்துவத்திற்குப் பணம் இல்லாமல் வறுமையால் நிகழ்ந்த தன் அக்காவின் மரணம் அந்தக் குழந்தைப் பருவத்திலுமே கூட முஸ்தபாவின் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!