ஆண்டைகளே
இன்னும் இரண்டாயிரம்
செயற்கைக் கோள்களை
நீங்கள் விண்ணுக்கு அனுப்பலாம்
இன்னும் இரண்டாயிரம்
பிரமாண்டச் சிலைகளை
மண்ணில் கிளப்பலாம்
இன்னும் இரண்டாயிரம் கோயில்களை
நீங்கள் கட்டி எழுப்பலாம்
ஆண்டைகளே….
சாதிகள் எனும் மலக்குவியல்
மலைகளாக இருக்கும் வரை
எத்தனை பெருமை பேசினாலும்
அது உலக அரங்கில்
ஆகப்பெரும் நகைச்சுவையே!
தலையறுக்கப்படும் ஜனநாயகம்
மாட்டில்
உனக்குப் பிடித்தது
சாணியும் மூத்திரமும்!
எனக்குப் பிடித்தது
எலும்பும் கறியும்!
உனக்குப் பிடித்ததை
நீ ருசித்துப் பருகு
எனக்குப் பிடித்ததை
நான் ருசித்து உண்ணுகிறேன்
உன் விருப்பத்தில் நானோ
என் விருப்பத்தில் நீயோ
தலையிடுவோமானால்
தலையறுக்கப்படும்
ஜனநாயகம்!