இந்த உலகம் எல்லாருக்குமானது என்றும், இங்கு அனைவரும் சமம் என்றும் பேசும் நாம், இந்த உலகின் அனைத்து இடங்களுக்கும் சென்று இருக்கிறோமா? அல்லது குறைந்த பட்சம் மனிதர்கள் நிம்மதியற்றிருக்கும் இடங்களைப் பார்த்து, அங்கு நிலவும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, எதுவும் சரி செய்து இருக்கிறோமா? அப்படிச் சரி செய்தாலும், அடுத்த தலைமுறைக்குப் புதிதாக ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறோமா? என்று பல கேள்விகளை அடுக்கும்போதுதான் நமக்குத் தெளிவாகப் புரியவரும், இன்றும் பழைய பிரச்சனைகளைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டும், அலசி ஆராய்ந்து கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம் என்று.
பெரும்பாலும் மனிதர்கள் நிம்மதி அற்றுத் துவண்ட நிலையிலிருக்கும் இடம் எதுவென்றால் மருத்துவமனைகளாகத்தான் இருக்கும். இங்குதான் ஒவ்வொரு மனிதனுடைய மனமும் உடலும் தளர்ந்து வாழ்க்கை மீது பற்றற்றிருப்பார்கள். அப்போது அவர்களுக்குள் நிகழும் சிந்தனை ஓட்டங்களின் தொடர்ச்சியாக ஏற்படும் மன எழுச்சிகள் எல்லாமே, அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட மன அழுத்தங்களின் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் உச்சகட்டத்திற்குச் செல்லும்போது, அதன் தொடர் விளைவாக இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நம் சமூகத்தில் ஒரு புதிய தொழில் வளர்ந்துவருகிறது.
உடல்நலமோ, மனநலமோ சரியில்லை என்றால், நோயாளியுடன் அங்கு எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் உடன் இருந்து, மருத்துவ நிர்வாகத்தில் இருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் சொல்வதைக் கேட்டு நோயாளியின் மன உணர்வுகள் சார்ந்தும், உடல்நிலையின் பக்குவம் அறிந்தும் நோயாளிக்கு உதவியாக இருப்பார்கள், அதன் பின் அவர்களை இயல்பான மனநிலைக்கும் கொண்டு வருவார்கள். ஒரு நபர் மனதளவில் துவண்டிருக்கும்போது, நம்பிக்கைக்குரிய நபர்கள் அவர்களுடன் இருந்தால், எந்தவொரு நபரும் எளிதாக மீண்டு வந்து வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் உதவியாக இருப்பார்கள். ஆனால், தற்போது நோயாளி மட்டும் இருக்கும் இடமாக, அதுவும் சில மாதங்கள் தங்கியிருக்கும் இடமாக ஒருசில இடங்கள் உருவாகிவருகின்றன. அந்த இடங்களில் தங்கி சிகிச்சை பெறும் நபர்களின் மனநிலையும் வாழ்க்கையும் என்ன மாதிரி மாறிக்கொண்டுவருகிறது என்று தெரியுமா, இல்லை தெரிந்துகொண்டு, அதைச் சரி செய்ய முயற்சி எடுத்து இருக்கிறோமா என்றால், கண்டிப்பாக இல்லை என்றுதான் பதில் வரும். என்றாவது ஒருநாள் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்திற்குச் சென்றிருக்கிறீர்களா, அல்லது பார்வையிட்டிருக்கிறீர்களா? சில நேரங்களில் செமினார் எடுப்பதற்கு மனநல ஆலோசகராகச் சென்றுவருவேன். அங்குள்ள ஒவ்வொரு ஆணின் கண்ணீரையும் பார்க்கும்போது, ஒட்டுமொத்த இயலாமையின் வடிவத்தில் இருக்கும். அனைவருமே உணர்வைக் கையாளத் தெரியாமல், போதைக்கு அடிமையாகி, குடும்பத்தைவிட்டு விலகி, மனநோயுடன் தன்னை மீட்க ஒவ்வொருவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். குடிப்பதும் போதைக்கு அடிமையாவதும் சரியா, தவறா என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டவில்லை. மாறாக, போதைக்கு அடிமையாகும் ஆண்களின் கண்ணீரைப் பற்றித்தான் பேச முயற்சி செய்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then