ஆதிதிராவிட நெசவாளர்களின் கோரிக்கையை முன்வைத்த ‘சமத்துவம்’

ஜெ.பாலசுப்பிரமணியம்

சேலம் ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் சார்பில் 10 பிப்ரவரி 1936இல் இப்பத்திரிகை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் தலைவர் V.நாராயணன் இதன் ஆசிரியராக இருந்தார். P.K.ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான ஆக்ஸ்போர்டு பிரஸ் எனும் அச்சகத்தில் இப்பத்திரிகை அச்சிடப்பட்டது. ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக ஆவணங்களில் அறிய முடிகிறது. ஆனால், தொடங்கிய வருடத்திலேயே பத்திரிகை முடிவுக்கு வந்தது. பின்பு இப்பத்திரிகை 1945இலிருந்து பி.முத்துசாமி என்பவரை ஆசிரியராகக் கொண்டு அகில இந்திய பட்டியல் இனக் கூட்டமைப்பின் (All India Scheduled Castes Federation) இதழாக நாமக்கல்லிலிருந்து வியாழன் தோறும் வாரப்பத்திரிகையாக வெளிவந்தது. இது நாமக்கல்லில் வரதப்பன் என்பவரின் நம்நாடு அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இப்பத்திரிகை ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டது என்று காலனிய அரசின் வருடாந்திர அறிக்கை குறிப்பிடுகிறது.1 ஆண்டுச் சந்தா ரூ. 4-0-0, ஆறு மாதச் சந்தா ரூ. 2-8-0, ஸ்தல ஸ்தாபனங்கள் (சர்க்கார்) ரூ. 7-0-0, சிலோனுக்கு ஆண்டுச் சந்தா ரூ. 5-0-0, தனிப்பிரதி 10 சதம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமத்துவம் பத்திரிகை நடத்திய V.நாராயணனால் 29 ஜூன் 1936இல் தமிழர் சேவை என்ற பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகை வாரப் பத்திரிகையாகவும் மாதப் பத்திரிகையாகவும் ஒரே நேரத்தில் வெளிவந்தது. சமத்துவம் பத்திரிகை போலவே தொடங்கிய வருடமே நின்று போன தமிழர் சேவை, 7 ஏப்ரல் 1939 அன்று மீண்டும் தொடங்கப்பட்டது. பிராமண எதிர்ப்புக் கருத்தியல்களைத் தாங்கிவந்ததாக ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.2

இப்பத்திரிகையின் செயல்பாட்டுக்களம் தமிழகம் முழுதும் பரவியிருந்துள்ளது. இதில் வெளியான செய்திகள், வாசகர் கடிதங்கள், விளம்பரங்கள் போன்றவற்றைக் கொண்டு இதன் செயல் பரப்பு பெரியகுளம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம், இராசிபுரம், மதுரை, சென்னை, திருச்சி, பம்பாய் எனப் பரந்து விரிந்துள்ளதை அறிய முடிகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger