பாபாசாகேப் அம்பேத்கர் பன்முகத்தன்மை கொண்ட அறிஞர். அவர் வாழ்ந்த காலத்தில் மேலெழுந்துவந்த கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் (Dogmas and Ideologies) கற்றுக்கொள்ள ஆர்வங்கொண்டிருந்தவர். குறிப்பாக நடைமுறையியல், மார்க்ஸியம், சோசலிஸம், கம்யூனிஸம், நேர்க்காட்சிவாதம், தர்க்கவியல், இனவியல், இனஒப்பாய்வியல், இனமேம்பாட்டியல், அறவியல், இறையியல், மானுடவியல், அரசியல் அறிவியல் என்பதாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். எனவே அம்பேத்கருக்குச் சமூகப் படிநிலையாக்கம், வர்க்கம், சமத்துவம், நீதி, விடுதலை குறித்த தீர்க்கமான பார்வைகள் உண்டு. அவரைப் பற்றி உலகளாவிய பார்வைகளோடு புதிய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘அலட்சியப்படுத்தப்பட்ட செவ்வியல் தத்துவங்கள்’ என்னும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீட்டில் 1916ஆம் ஆண்டு மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ ஆய்வுக்கட்டுரை அவருடைய அரசியல் தத்துவமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. அம்பேத்கருடைய சிந்தனைகளைப் பன்னாட்டு அளவில் விவாதிப்பதற்கேற்ப கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடாக ‘Companion to B.R.Ambedkar’ விரைவில் வெளிவர இருக்கிறது. ‘சமத்துவச் சிலை’ என்ற பெயரில் அமெரிக்காவில் மிகப்பெரிய சிலையானது அம்பேத்கர் மதம் மாறிய நாளான அக்டோபர் 14-இல் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் ‘சாதியத் தலைவர்’ என்னும் படிமம் பொதுப் புத்தியில் உறைந்து போயிருப்பதனால் அவருடைய பெரும்பாலான சிந்தனைகள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை. அவ்வாறு பெரிதாகக் கவனங்கொள்ளாததாக இருக்கிற சிந்தனைதான் அம்பேத்கரின் பொருளியல் விடுதலை என்பது. அதை விளங்கிக்கொள்வதற்குரிய அறிமுகமாக இந்தக் கட்டுரை அமைகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then