குலத்தொழில் 2.0

ஆதவன் தீட்சண்யா

ரியர் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் விஸ்வகர்மா. அவர் 43,20,000 ஆண்டுகளைக் கொண்ட கிருத (17,28,000 ஆண்டுகள்), திரேத (12,96,000 ஆண்டுகள்), துவாபர (8,64,000 ஆண்டுகள்), கலி (4,32,000 ஆண்டுகள்) ஆகிய நான்கு யுகங்களிலும் கடவுள்களுக்காகவும் மன்னர்களுக்காகவும் இந்தியா, இலங்கை மற்றும் தேவலோகத்தில் பல நகரங்களையும் மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் உருவாக்கிய கட்டுமானப் பொறியாளர் என்று புகழப்படுகிறார். கிருத யுகத்தில் சொர்க்கலோகத்தை இவர்தான் உருவாக்கியிருக்கிறார். நரகலோகத்தை யார் உருவாக்கினார்கள் என்கிற தரவேதும் கிடைக்கவில்லை. திரேத யுகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது சிவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்கத்தாலான லங்கா என்கிற அரண்மனையைக் கட்டுவித்திருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசத்திற்கு வந்திருந்த ராவணன், அரண்மனையின் அழகைப் பார்த்து வியந்து கிடந்திருக்கிறான். அந்நேரம் பார்த்து சிவனானப்பட்டவர் ராவணனிடம் ‘வேண்டியதைக் கேள்’ என்று தெரியாத்தனமாகக் கூறிவிட, ராவணனோ இதுதான் சாக்கென்று அரண்மனையையே கேட்டிருக்கிறான். வேறுவழியின்றி சிவனும் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. பின்னாளில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதை அங்குதான் தன் காலத்தைக் கழித்தாள்.

இவையன்றி விஸ்வகர்மா, துவாபர யுகத்தில் மதுராவில் பிறந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து குஜராத் வந்து சேர்ந்த கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க துவாரகா என்கிற நகரை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். சமுத்திரதேவனால் தானமளிக்கப்பட்ட 12 யோஜனை பரப்பளவில் (776 சதுர கி.மீ) அமைக்கப்பட்ட அந்நகரத்தின் அழகையும் விஸ்வகர்மாவின் கட்டுமான நுட்பங்களையும் காண விரும்புகிறவர்கள் அரபிக்கடலுக்கடியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படியே கலியுகத்திற்கு வந்தோமானால், விஸ்வகர்மா பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமாக ஹஸ்தினாபுரம் என்கிற நகரை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், பங்காளிச் சண்டையினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பாண்டவர்கள் தமக்கெனத் தானமாகப் பெற்ற இடத்தில் ஒரு தலைநகரை நிர்மாணித்துக் கொடுக்குமாறு விஸ்வகர்மாவிடம் வேண்டியுள்ளனர். அப்போது அவர் நிர்மாணித்த நகரம்தான் இந்திரபிரஸ்தா. அதாவது, ஆரியக்கடவுளான இந்திரனின் நகரம். விஸ்வகர்மாவின் கட்டடக்கலை நுட்பம், அழகுணர்வின் உச்சம் என்று போற்றப்படுமளவுக்கு அங்கு பளிங்குக்கற்களை இழைத்திழைத்துக் கட்டிய அரண்மனைக்கு வந்த துரியோதனன், தரை எது தண்ணீர் எது என்று பகுத்துணர முடியாத குழப்பத்தில் தவறிப்போய் குளத்தில் விழுந்துவிடுகிறான். இதுகண்டு பாண்டவர்களின் மனைவி திரெளபதி கெக்கலியிட்டுக் கேலியாகச் சிரித்துவிட்டதில் அவமானப்பட்டுப் போன துரியோதனனுக்குக் குருஷேத்திரப் போரை நடத்துவதற்கு அதுவே போதுமான காரணமாகிப் போனது. இப்பேர்க்கொத்த விஸ்வகர்மாவின் பரம்பரையில் வந்தவர்கள் என நம்புவோரிடம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டித்தரும் பொறுப்பை ஒப்படைக்காமல், டாடாவுக்குச் சில ஆயிரம் கோடிகளைத் தூக்கிக் கொடுத்தவர்தான் பிரதமர் மோடி என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!