வெள்ளையதிகாரத்தைத் தகர்த்தெறியத் தயாராக இருக்கிறீர்களா?
கட்டிட்டங்களை எரித்துச் சாம்பலாக்க நீங்கள் தயாரா?
தேவையேற்பட்டால் கொலை புரியவும் நீங்கள் தயாரா?”
தனக்கு முன்னால் திரண்டு நின்றிருக்கும் கறுப்பின மக்களிடத்தில் தனது உறுதிமிகுந்த குரலால் நினா சிமோன் (Nina Simone) தனது பாடல் வரிகளின் வழியே கேள்வியெழுப்ப, மறுபக்கத்திலிருந்து ”நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனும் குரல் ஒருமித்தெழுகிறது. பன்னெடுங்காலமாக அமெரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்டுவந்த கறுப்பினத்தவர்களின் எழுச்சிக்கான குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருந்த நேரமது. மனித உரிமைகள் சார்ந்த விவாதங்கள் தீவிரம் பெற்றிருந்தன. மார்ட்டின் லூதர் கிங் மனித உரிமைகள் இயக்கத்தின் பெருந்தலைவராக உருவெடுத்திருந்தார். தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தங்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தாமல், தாம் பயன்படுத்தப்படுவதை, நிறவெறியின் பேரில் படுகொலை செய்யப்படுவதை, துரோகமிழைக்கப்படுவதைத் தமக்குள்ளாகப் புதைத்துக்கொண்டு வாழ்ந்துவந்த மக்கள் இப்போது தமக்கான உரிமைகளைக் கோரி வீதியில் இறங்கியிருந்தார்கள். கறுப்பின மக்களின் வரலாற்றில் பெரும் கலகக் காலமாகக் கருதப்படும் அவ்வருடங்களில் தனது இசையின் மூலமாக, பாடல்களின் மூலமாக அக்னிக் கதம்பமாக வெடித்துக்கொண்டிருந்தார் நினா சிமோன். அவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் பெருங்கோபபம் கனன்று, எதிரில் திரண்டு நிற்கும் மக்களின் இருதயத்தில் சுதந்திர உணர்வை கிளர்ந்தெழச் செய்தன.
ஜாஸ், நாட்டுப்புற இசை, செவ்வியல் கூறுகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகலந்த நினாவின் இசை அவருடைய செயல்பாடுகளின் காரணமாக ‘மனித உரிமைகளுக்கான இசை’ என்றே வகைப்படுத்தப்பட்டது. அமரிக்காவின் முதல் கறுப்பினச் செவ்வியல் பியானோ கலைஞராக வளர வேண்டும் என ஆசைகொண்டிருந்த நினா பிறிதொரு காலத்தில், அமெரிக்கா என்பதே பொய்களால் கட்டப்பட்ட ஒரு தேசம் என்றும் பியானோவைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும் அவநம்பிக்கையுடன் கருத்துத் தெரிவிக்கும் நிலைக்குக் காலங்களாலும், தமது அனுபவங்களாலும் கொண்டுசெல்லப்பட்டார். மனிதயுரிமைகளுக்கான போர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், தொடர்ந்து அவர் அமெரிக்க நிறவெறி எதிர்ப்பாளராக, மனிதயுரிமை போராளியாகத் தனது இசையின் வழியே காலங்களைக் கடந்தும் தனித்ததொரு ஆளுமையாக மனிதகுல வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then