“சோத்துல இத்தினி உப்பக் கூடயாடா ஒனக்குப் போடத் தெரியாது. இம்புட்டு போடட்டுமா, அம்புட்டு போடட்டுமானு கேக்குற”னு சோத்துப் பானைக்கிட்ட ஒக்காந்து கத்திக்கிட்டு இருந்தா கட்டு அம்மா. காலையில சோத்தக் காச்சிட்டு அத தூக்குச் சட்டியில போட்டுக்கிட்டு காட்டு வேலைக்குப் போக அம்புட்டு அவசரம் அவளுக்கு. அதுக்குள்ளைக்கு ஒத்த டீய குடிக்கணும்… “ஏலே, டீ வாங்கிட்டு வாடா”னு அவா சொல்லவும், கட்டு வீட்டுலருந்த சொம்ப எடுத்துக்கிட்டு வாசலுக்கு வந்ததும் அங்கிருந்த வாளில சொம்ப ஒரு முக்கு முக்குனான். அதுவே சொம்பக் கழுவுனதா நெனச்சுட்டு நடுத் தெருவழியா வெறும் மேலோட நடந்து டீக்கடைக்குப் போனான். தெருவப் பாத்தா சிமிண்டுத் தெருவுதா. எவளும் இப்ப காலையில எந்திருச்சு வீட்டு வாசல கூட்டித் தெளிக்கிறதுயில்ல. சும்மா தண்ணிய மட்டும் தெளிப்பாளுக. சாணிய வச்சுத் தெளிச்சக் காலமெல்லாம் போச்சு. அந்தச் சிமிண்ட, வெறகு ரெண்டா பொளந்தா எப்பிடிக் கெடக்கும்… அதுமாதிரி குடிதண்ணி பைப்பு லைனுக்காகத் தோண்டி மூடிட்டானுக. ஆனா திரும்ப சிமிண்ட வச்சு அத மட்டப்படுத்தல. ஒரே நேருக்கா பள்ளமா கெடக்கும். பள்ளம்னா ஆழமானதெல்லாம் இல்ல.
நடுத்தெரு வழியா வந்தவன், தெக்குத் தெரு வழியாப் போனப்ப கண்ண அம்மா விசயா தோச சுட்டுக்கிட்டு இருந்தா. அப்பருந்து இப்பவரைக்கு வெறகு அடுப்புதா வச்சு எறிக்கிறா. ஒரு தோச, இப்ப மூன்றுவா. இட்டிலி ஒன்னு அஞ்சு ரூவா. இவாட்ட பத்து வருசத்துக்கு முன்னாடி கட்டு டெய்லி தோச வாங்கித் திம்பான். காலையில ஏழு மணிக்கெல்லாம் கட்டு ரெண்டு ரூவா துட்டோட தோசக் கல்லுக்கு முன்னாடி வந்து ஒக்காந்திருவான். அப்ப ஒரு தோச ஒத்த ரூவா. ரெண்டு தோச வாங்கித் தின்னுட்டு தட்ட கழுவிட்டுப் போவான். அவா தோசையும் அவா வைக்கிற தேங்கா தக்காளி சட்டினியும் அப்பிடி இருக்கும். ரெண்டு சட்டினியும் கட்டியாலாம் வைக்க மாட்டா, தண்ணியாத்தா வைப்பா. கட்டுக்கு ரெண்டு தோச பத்தாது. இன்னு திங்கணும் போல இருக்கும். பெறகு என்ன செய்ய அவெ அம்ம ரெண்டு ரூவாத்தா காலையில தருவா. அத பள்ளிக் கொடத்துக்குக் கொண்டுகிட்டுப் போய் வாங்கித் திங்கக் கூடாதுனு இவாட்ட வந்து குடுத்திருவான். அவா பாக்குறதுக்கு அப்பிடி தக்காளி கலராட்டம் இருப்பா. தலமுடி மட்டுதா கருப்பு. சேலப் பாத்தினா ஒடம்புக் கலருக்குத் தக்கன எடுப்பான சேலையாத்தா கட்டுவா. எப்பையாச்சும் ஒருதடவ பைப்புலைன் வேலைக்குப் போற எளவட்டப் பெயக இவாட்ட வந்தானுகனா, அவளுக்கு வரும்பாரு சந்தோசம். மொகம் பூரா சிரிப்பா இருக்கும். ரெண்டு பெயக வந்தாலும் ஒக்காந்த எடத்துல பத்து இருபது தோச திம்பானுக. அப்பிடி எவனாவது வந்துட்டானுகனா கதவ மூடிக்கிருவா. தோசையப் பூரா இவனுகளே தின்னு தீத்திருவானுக.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then