‘சந்ரு மாஸ்டர்’ என்றழைக்கப்படும் ஓவியர் சந்ரு, நம் காலத்தில் வாழ்ந்து வரும் மகத்தான கலைஞன். இயல்பாக இருப்பதே கலை என்று நம்புவதால்தான் ‘ஒரு கலைஞனைப் போல இருக்கிறேன் பார்’ என்று கூட எத்தகைய உரிமைக் கோரலிலும் அவர் ஈடுபட்டதில்லை. சென்னை கவின் கலைக்கல்லூரியில் பல்லாண்டு காலம் பேராசிரியராக பணியாற்றிவிட்டு முதல்வராக இருந்து ஓய்வுபெற்றார் சந்ரு. நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கலை பற்றிய தன்னுடைய பார்வையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இயங்கியவர். அவரோடு இணைந்தும் பின்பற்றியும் செயல்படும் பெரும் மாணவர் பரப்பினர் உண்டு. அவரோடு பயணிப்பதும் விளக்கங்களைக் கேட்பதும் கலைப்பயணத்தின் சுவாரஸ்யமான அங்கம்.
மலைகள், குகைகள், கோயில்கள் போன்றவற்றில் விரவி நிற்கும் எல்லா காலகட்டத்தின் ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள் தொடர்பான உரையாடல்களையும் அவரோடு நிகழ்த்த முடியும். ஓவியம் கற்பது என்பது ஓவியம் அல்ல.மாறாக இந்தச் சமூகத்தோடு ஒட்டியும் விலகியும் நாம் கொள்ளும் உறவுதான் என்பார். சமூகத்தோடு அவர் கொண்ட உறவின் நீட்சியாக மாணவர்களோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட வெட்டவெளி ஓவியங்கள் உள்ளிட்ட ஓவிய முகாம்கள் முக்கியமானவை. ஓவியரான அவர் சிற்பியாக இருந்து உருவாக்கிய சிலைகளும் ஏராளம். சிற்பம், ஓவியம் மட்டுமல்லாது கவிதை, சிறுகதை, இதழ்கள், நவீன படைப்புகளுக்கான ஓவியங்கள் என்று அவரது பயணம் விரிந்தவை. ‘சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள்’ என்பது அவருடைய நூல்களுள் ஒன்று. அவரின் தொகுக்கப்படாத ஓவியங்களும் எழுத்துகளும் அதிகம். தாமிரபரணிக் கரை ஓரத்தில் ஓவிய – சிற்ப பள்ளிகளுக்கான கனவோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மாஸ்டரை ‘நீலம்’ இதழுக்காக சந்தித்தோம். அவரின் இதுவரையிலான நேர்காணல்களிலிருந்து வேறுபட்ட அனுபவத்தை இது தருமானால் அதுவே மகிழ்ச்சி.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then