கொட்டடி
சிறைக் கொட்டடி போன்ற அறையின் சுவர்களிலிருந்து அவனது துயரங்கள் இடைவிடாது வளர்ந்துகொண்டே இருந்தன. காதுகளையும் கண்களையும் இறுக அடைத்துக்கொண்டு கட்டிலின் அடியில் படுத்திருந்தவனின் கைகளில் சுருள் சுருளான அவனது முடி அகப்பட வெளிவருகிறான். கண்ணாடியைப் பார்க்கிறான். முற்றாகத் தளர்ந்த உருவம். அவசர அவசரமாக இறுக்கமான சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு சலூனுக்கு ஓடுகிறான்.
கண்களை மூடி சலூன் சேரில் சாய்கிறான். கத்தரியின் சீரான ஓசையை இசைக் கோவையென இலயித்துக் கேட்டுக்கொண்டே கத்தரிக்கப்பட்டு விழும் சுருள் முடிகளை, அவனுள் இருந்து கீழே விழும் துயரமெனப் பாவித்துக்கொள்கிறான். கண்களைத் திறக்கிறான். முன்பை விட எல்லா வகையிலும் படு கோரம்.
நகரின் பிரதான வீதிகளில் தனக்காகத் தொப்பியொன்றைத் தேடி மூச்சிரைக்க அலைகிறான். பல வண்ணங்களில், வடிவங்களில் ஆயிரம் ஆயிரம் தொப்பிகள் அந்நகரெங்கும் இருந்தும் எதுவும் அவனுக்குப் பொருந்தவில்லை.
நோயால் பீடிக்கபட்டவன் போல் மெல்ல வீட்டை அடைகிறான். இறுக்கமான சட்டையைக் கழட்டி வீசியவன், வழியும் துயரங்களின் ஓசையை மெல்ல கேட்கத் தொடங்குகிறான்.
m
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then