புது மனிதர்கள்
வருடம் முழுமைக்கும் வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் போகிறவரும், மதவாத அரசியலைச் செய்பவரும், பெரும் முதலாளிகளின் செல்ல நாய்க் குட்டியுமான அந்நாட்டு பிரதமரின் முழு உருவ பொம்மை ஒன்றைச் செய்வதற்காக அப்பெருநகரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து பார்த்து ஏமாற்றமடைந்தான் அவன். பொம்மை செய்யும் கலைஞர்கள் பலரையும் அணுகினான். அனைவரும் காரணம் கேட்டார்கள். அவனும் சொன்னான். காரணத்தைக் கேட்ட யாரும் அந்தப் பொம்மையைச் செய்து தர முன் வரவில்லை. சிலர் அறிவுரை கூறினார்கள். சிலர் பயந்தார்கள். சிலர் ஆர்வம் காட்டவில்லை. சிலர் அவனைத் துரத்தியடித்தார்கள். எது எப்படியாகினும் பிரதமரின் உருவ பொம்மை மட்டும் அவனுக்குக் கிடைத்தபாடில்லை. சோர்வுடன் நடந்து வரும் வழியில் ஒரு புது மனிதனைச் சந்தித்தான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then