சன்டான்ஸ் விருதினைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இயக்குநர். சிறந்த இயக்குநருக்கான கோல்டன் க்ளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். சிறந்த படத்திற்கான விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்.
இவை எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் ஏவ டூவர்னே. அம்மா, சித்தி, பாட்டி எனப் பெண்கள் சூழ்ந்த வீட்டில் வளர்ந்தவர். ஏவ டூவர்னேவின் குடும்பத்தில் யாரும் திரைப்படத்தோடு நேரடித் தொடர்பு கொண்டவர்கள் அல்லர். இவரது சித்திக்கு மட்டும் திரைப்படங்கள் பார்ப்பதென்றால் அத்தனை ஆர்வம், படம் பார்க்கப் போக வேண்டுமென்றால் முதல் ஆளாகத் தயாராவது, எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும் அதன் அத்தனை நுணுக்கங்களைப் பற்றியும் பேசுவது எனத் திரைப்படக் கலைக் களஞ்சியமாக இருந்திருக்கிறார். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஏவ டூவர்னேவை அப்படியே திரையரங்குக்கு அழைத்துச் சென்றுவிடுவாராம், புத்தகங்கள் வாசிப்பதிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் சித்திக்கு இருந்த ஆர்வம் ஏவ டூவர்னேயுடன் உரையாடும்போது ஒரு வெள்ளமெனப் பாய்ந்திருக்கிறது. தன்னையறியாமல் அத்தனையையும் பெற்றுக்கொள்ளும் சேமிப்புக் கிடங்காக இருந்ததை ஏவ டூவர்னே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் கூட தான் ஒரு திரைப்பட இயக்குநராவோம் என ஏவ டூவர்னே நினைத்ததில்லை. அவரின் கவனமெல்லாம் ஆங்கிலத்தில் புலமை பெறுவதும், அமெரிக்க, ஆப்பிரிக்க இனத்தவர் குறித்து ஆய்வு செய்வதிலுமாக இருந்திருக்கிறது.
இப்படியாக இருந்தவர்தான் விளம்பரத் துறைக்குப் பணியில் சேர வருகிறார். ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் வேலை கிடைக்கிறது. ஒரு படத்தினை எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் எனக் கற்றுக்கொள்கிறார். குறிப்பாக இளைஞர்களிடம் எப்படி சினிமாவைவைக் கொண்டு சேர்ப்பது என்பதைப் புரிந்துகொள்கிறார். இரண்டாண்டுகள் அங்கு பணி செய்தபின் சொந்தமாக விளம்பர நிறுவனம் தொடங்குகிறார். அப்போது ஏவ டூவர்னேக்கு வயது 27. இந்த விளம்பர நிறுவனத்தை அவர் படம் இயக்கத் தொடங்கிய சில வருடங்கள் வரை தொடர்ந்து நடத்திருக்கிறார். இப்போதும் கறுப்பினத்தவர் தயாரிப்பில் வெளிவருகிற சுயாதீனப் படங்களுக்கு மட்டுமே விளம்பர ஆலோசகராகப் பணி செய்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then