“ஹாலிவுட் கதாபாத்திரங்களுக்கும் எனது கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது தெரியுமா! எனது கதாபாத்திரங்கள் உண்மையானவை”
ஹாலிவுட்டின் கதவுகளுக்குள் நின்றுகொண்டு இப்படிச் சொல்ல வேண்டுமெனில் ஒருவருக்கு அசாத்திய தைரியம் இருக்க வேண்டும், அல்லது தன்னுடைய படைப்புகளின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்பைக் லீக்கு இரண்டும் உள்ளன.
ஸ்பைக் லீயின் ரசிகர்களுக்கு அவரின் தொப்பியும் நன்கு அறிமுகமாயிருக்கும். 1619 என்கிற எண்களிடப்பட்ட தொப்பி அது. அவை வெறும் எண்களல்ல. அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதன் பின்னணி தெரிய வேண்டும் என்றே ஸ்பைக் லீ அணிகிறார். அவருடைய மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள். ஒட்டுமொத்த அமெரிக்கக் கறுப்பினத்தின் மூதாதையர்கள். சொந்த நிலத்திலிருந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக ஏற்றிவந்த முதல் கப்பல் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்த வருடம் 1619. அமெரிக்கப் புரட்சியில் முதல் இரத்தப் பலி கொடுத்ததும் ஆப்பிரிக்கனே. தங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும், எந்த வரலாற்றையும் மறந்துவிடக்கூடிய மனித மூளைகளுக்கு அறிவுறுத்த வேண்டியே 1619 எண்ணிட்ட தொப்பியை ஸ்பைக் லீ அணிகிறார்.
ஸ்பைக் லீ அரசினைக் கேள்வி கேட்பார்; தனது கருத்துகளை வெளிப்படுத்தியதற்காகச் சர்ச்சைகளுக்கு உள்ளாவார்; திரைப்படத்துறையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேடையில் பட்டெனப் போட்டு உடைப்பார். இதற்கென அவருக்குத் தனித் தைரியம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவருக்கு இருந்த ஒரே உறுதி, அவர் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அறிந்தவர் என்பதுதான். தனது படங்களின் வழி அவர் இவை இரண்டையும் குறித்த சிந்தனையைத்தான் கேள்வியாக முன்வைக்கிறார்.
படங்களில் பேசுவதோடு அவர் தன்னை ஒதுக்கிக்கொள்வதில்லை. அமெரிக்காவில் ஹரிகேன் புயல் தாக்கியபோது விளிம்புநிலை மக்களை அரசு கைவிட்டதை ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டதோடு, அப்போதைய புஷ் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கவும் செய்தார். அந்த ஆவணப்படத்தில் அவர் கருப்பு, வெள்ளை இனப்பாகுபாட்டினைப் பார்க்கவில்லை, மிகவும் பின்தங்கிய பகுதிகளைப் புஷ் அரசாங்கம் எவ்வாறு புறந்தள்ளியது என்பதைப் பதிவு செய்திருந்தார். அதில் வெள்ளை இன மக்களின் துயரங்களும் மிகுந்திருந்தன.
ஸ்பைக் லீயின் அம்மா இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். மகனுக்கு அவர் சொன்னக் கதைகளில் வரலாறுகளும் உண்டு. அப்பா ஜாஸ் இசைக் கலைஞன். பாப் டைலனுடன் இசைக் கச்சேரிகள் செய்தவர். பாப் டைலன் எலெக்ட்ரிக் கிதாருக்கு மாறியபோது, “என்னால் அதோடு ஒத்துப் போக முடியவில்லை“ என நல்ல வருமானம் தந்துகொண்டிருந்த மேடை நிகழ்வுகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டவர். அவருக்கு அப்போது ஸ்பைக் லீயோடு சேர்த்து ஐந்து குழந்தைகள். அப்பாவுக்கு வேலையில்லை என்றதும் லீயின் அம்மா வேலைக்குச் சென்றார். பள்ளிகளில் கறுப்பின இலக்கிய வகுப்பினை எடுக்கத் தொடங்கினார். “எல்லோருக்கும் நான் சமமானவன் என்று நிரூபிக்க வேண்டுமானால், அவர்களைவிட எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்பதை முதலில் காட்டியாக வேண்டும்” இது லீயின் அம்மா தனது குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தது. அம்மாவின் பாதிப்பும் அப்பாவின் பிடிவாதக் குணமும் கொண்ட குழந்தையாகவே வளர்ந்தார் லீ. அவருடைய அப்பாவிற்குத் திரைப்படங்கள் பார்ப்பதென்பது அறவே விரும்பத்தகாத ஒன்று. அவருடைய ஆர்வமெல்லாம் விளையாட்டுகளில் மட்டுமே. லீயின் அம்மா திரைப்பட ரசிகை. மார்ட்டின் ஸ்கார்சியின் ரசிகையாக இருந்திருக்கிறார். அவர் மூலமே திரைப்படங்கள் குறித்த பார்வையும், அதைப் பகுத்தறியும் திறனும் வாய்க்கப்பெற்றதாகப் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் லீ. தனது கல்லூரி காலகட்டத்தில் அம்மாவை இழந்தார் லீ.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then