இருத்தலியலுக்கான போராட்டம் – இலஞ்சி அ.கண்ணன்

(ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவல் குறித்து)

ன்னுடைய அம்மாவும் அக்காவும் இந்திய இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். அக்கா கொல்லப்படுகிறாள். முன்னதாக தங்கையும் இராணுவத்தினரின் குண்டு வீச்சிற்குப் பலியாகிறாள். ஊருக்கே சாத்திரம் சொல்லிப் பலன் பார்த்த நயினாதீவு சாத்திரியான தந்தையும் அவனும் தாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் சொந்த நாட்டிலே எப்போது வேண்டுமானாலும் இந்திய அமைதிப்படை மற்றும் சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்படலாம் என்கிற  ஒரே காரணத்திற்காக, இதுவரை இழந்த இழப்புகளே போதும், எப்படியாவது வெளிநாடு சென்று அங்கு எம்மாதிரியான இன்னல்களை அனுபவித்தாலும் பரவாயில்லை, தன்னுடைய இருத்தலை நிலைநாட்டி விடலாம் என்றெண்ணி அகதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அய்.நா. அலுவலகத்தில் மாதக் கணக்கில் காத்திருப்பவர்களின் இன்னல்களைச் சொல்லியது மட்டுமல்லாது, இடைவழியில் நிற்கும் அகதிகள் தங்களது உடலையும் உயிரையும் கூட இழக்கத் தயாராகிறார்கள் என்கிற சொல்லொண்ணாத் துயரத்தையும் உள்ளது உள்ளபடியே எடுத்துரைத்திருக்கிறது சமீபத்தில் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்த ஷோபாசக்தியின் ’ஸலாம் அலைக்’ நாவல்.

இந்நூலின் சிறப்பம்சமே தொடக்கம் எது, முடிவெது என்று அறுதியிட்டுக் கூற முடியாததும், இரு பக்கங்களிலிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பதும்தான். அதன் காரணமாகவே இந்நூலை எந்தப் பக்கத்திலிருந்து வாசித்தாலும் முழுமை பெற்ற வடிவமாகவே  இருக்கிறது. ஒருபக்கம் நீல வண்ணத்திலும் மறுபக்கம் சிவப்பு வண்ணத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், நீல வண்ணப் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினால், ஃபிரான்ஸ் நாட்டில் அன்றாடம் அகதிகள் சந்திக்கும் இன்னல்களும் சிவப்பு வண்ண அட்டையிலிருந்து தொடங்கினால் ஈழத் தேசத்தில் இனவெறியால் இரத்த ஆறோடும் போரில் சிக்குண்ட சாமானியனின் வாழ்வியலும் அதோடு கூடிய கழிவிரக்கமும் சொல்லப்பட்டிருக்கும்.

பொதுவாக, அனைத்து நாடுகளும் அகதிகளை மனிதாபிமானத்துடனே நடத்த வேண்டுமென அகதிகளுக்கான அய்.நா.ஆணையம் குறிப்பிடுகிறது. மேலும், “ஒருவருடைய இனக்குழு, மதம், தேசிய இனம், குறிப்பிட்ட ஒரு சமூகக் குழுவின் உறுப்புரிமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாகவோ அல்லது அவர் வெளிப்படுத்திய அரசியல் கருத்துகளுக்காகவோ தனது நாட்டில் துன்புறுத்தப் படலாம் என்று நிரூபணமாகக் கூடிய அச்சத்தால் அவர் இன்னொரு நாட்டுக்குப் புலம் பெயர்ந்தால், அவரை ஓர் அரசியல் அகதியாகக் கருதி, அவருக்குப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்” என்று ஜெனிவா ஒப்பந்தம் (Geneva Convention-1951) வலியுறுத்துகிறது. ஆனால், ‘ஜெனிவா-51’ அனைத்துலக உடன்படிக்கையில் கையப்பமிட்டிருக்கும் நாடுகள் அதை மதிப்பதில்லை என்பதையும் அகதிகளினதும் வெளிநாடுகளில் பிழைப்பிற்காகச் சென்றவர்களினதும் உயிர் மூன்று மூலங்களால் (அதாவது, ஆன்மா, உடல், பாஸ்போர்ட்) ஆக்கப்பட்டதென்று கதையில் சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தத்தையும் இந்நாவலை முழுவதுமாகப் படிப்பதன் மூலமே புரிந்துகொள்ள முடியும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!