வள்ளல் பெருமாள் – பாலசிங்கம்

டலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலம்பாடி எனும் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பிறந்தவர் மருத்துவர் வள்ளல் பெருமாள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து அரசியலுக்கு வந்தவர். இவரது தந்தை பக்கிரிசாமி, பெரியாரின் திராவிடர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். சிதம்பரம் நகரில் நடக்கும் பெரியார் கூட்டங்களில் முக்கியப் பங்கு வகிப்பவர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த வள்ளல் பெருமாள், மருத்துவ உயர் படிப்பை வெளிநாட்டில் பயின்றார். தன் தந்தை திராவிடர் கழகத்தில் இருந்தபோதிலும் வள்ளல்பெருமாள் சமய நம்பிக்கை கொண்டவராகவே விளங்கினார். காங்கிரஸில் எப்படி ஓர் அட்டவணைச் சமூகத்தவர் தன்சமூகம் சார்ந்த உரிமைகளில் செயல்படவும் போராடவும் முடியுமோ அதற்கேற்றாற்போல் செயல்பட்டவர் வள்ளல்பெருமாள். அந்த வகையில், சுவாமி சகஜாநந்தர், இளையபெருமாள், கக்கன், மரகதம் சந்திரசேகர் வரிசையில் வள்ளல் பெருமாளும் இடம்பெறுவார்.

1975களில் மருத்துவப் படிப்பை முடித்த வள்ளல்பெருமாள், சிதம்பரம் நகர் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை இடத்தில் மருத்துவத் தொழிலைத்  தொடங்கினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் ஏதேனும் தொழில் தொடங்குவதும் அதனை நடத்துவதும் இயலாத காரியமாகும். காரணம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சாதி இந்துக்களே பெரும்பாலும் வசித்தனர். இப்பகுதி சிதம்பரத்தின் மையப்பகுதி என்பதாலேயே வள்ளல் பெருமாள் கீழவீதியில் ஓர் இடத்தை வாடகைக்குப் பெற்று மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். ஆனால், அந்த இடத்தைக் காலி செய்யச் சொல்லி சாதி இந்துக்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். தந்தை பக்கிரிசாமி திராவிடர் கழகத்தில்  இருந்தாலும் சாதியச் சக்திகளை எதிர்கொள்ள வள்ளல் பெருமாளுக்கு அது உதவவில்லை. அந்நேரம் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட இளையபெருமாள், உடனடியாகத் தலையிட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததோடு அங்கு தொடர்ந்து மருத்துவத் தொழில் செய்யவும் வழிவகை செய்தார். இந்த உறவின் காரணமாக இளையபெருமாளுடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார் வள்ளல்பெருமாள். மேலும், 1984ஆம் ஆண்டு சிதம்பரம் நகரில் இளையபெருமாளின் மணிவிழாவை முன்னின்று நடத்தியவர் வள்ளல் பெருமாள்தான். சிதம்பரம் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இந்திய உள்துறை முன்னாள் அமைச்சர் மரகதம் சந்திரசேகரால் இளையபெருமாளின் மணிவிழா மலர்  வெளியிடப்பட்டது. இளையபெருமாள் காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய மனித உரிமைக் கட்சி தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட மாபெரும் நிகழ்வு இதுவாகும். 1984ஆம் ஆண்டு இளையபெருமாள் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது, அவரது ஆதரவாளராக இருந்தபோதிலும், வள்ளல் பெருமாள் தொடர்ந்து காங்கிரஸிலேயே இயங்கினார்.

இதன் காரணமாக, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இளையபெருமாளின் இடத்தை நிறைவு செய்வதற்கு வள்ளல்பெருமாளைப் பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ். 1984, 1989, 1991ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றுமுறை சிதம்பரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் வள்ளல்பெருமாள். தொடர்ந்து 12 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகப்  பணியாற்றினார். இக்காலங்களில்  திராவிடக் கட்சிகளின் உறுப்பினர்கள் போல் அல்லாமல் தன் சமூகம் சார்ந்த பல முன்னெடுப்புகளை வள்ளல் பெருமாள் செய்துள்ளார். அதில் பாராளுமன்றத்தில் அட்டவணைச் சமூக இடஒதுக்கீடு தொடர்பாகத் தனிநபர் மசோதா கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்பாடுகளைத் தற்போதுள்ள திமுக, அதிமுக தனித்தொகுதி உறுப்பினர்களால் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினராக  இருந்த காலங்களில் பட்டியலினச்  சமூகத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராகச் சமூக உணர்வுடன் பணியாற்றியவர். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவற்றில் ரெட்டியூர் பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவமும் ஒன்றாகும். 1985ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று பறையிசை ஒழிப்புக்கெதிராகப் போராடிய ரெட்டியூர் பாண்டியனை அன்றைய எம்.ஜி.ஆர் அரசு சுட்டுக் கொன்றது. அப்போது சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வள்ளல்பெருமாள், துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட டி.எஸ்.பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. போராளி ரெட்டியூர் பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாள் சிதம்பரம் நகரில் பட்டியல் சமூகம் சார்பாக வள்ளல் பெருமாள் தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. 

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!