3
உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் அறிவு இருக்கிறது. அவை தங்கள் வாழ்வுச் சூழலுக்கு ஏற்ப புத்தறிவைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. காட்டில் வேட்டையாடி தன் உணவை அடைய வேண்டிய விலங்குகள், உணவு இன்மையால் ஊருக்குள் வந்து உண்கின்றன. காட்டில் மரங்களில் தாவியோடி தன் இரையை உண்ண வேண்டிய குரங்குகள், ஊருக்குள் கடைகளில் இருக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவினை எடுத்து உண்ணும் அறிவைப் பெற்றிருக்கின்றன.
அதைத்தான் உயிரியலில் ‘பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாமை விதி’ என்று லாமார்க்கால் கூறப்பட்டுள்ளது. மனித சமூகத்திற்கு அப்படியல்ல. பகுத்தறிவைப் பெற்றிருப்பதால் தொடர்ந்து சிந்திக்கும் ஆற்றல் மனிதருக்கு வாய்த்திருக்கிறது. அதனால்தான் இன்று செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறியுடன் நம் காலம் கலந்திருக்கிறது. ஆனால், இந்த அறிவு மட்டும் வாழ்வை இனியதாக்கிவிடுமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. அப்படியானால் மனித வாழ்வு பொருள் சார்ந்த வாழ்வாக மட்டுமல்லாமல், மன நிறைவுடனான அமைதி கொண்ட வாழ்வாக மாற வேண்டுமென்றால் மனிதர் அறிவு என்ற நிலையிலிருந்து நீண்டு ஞானம் என்னும் உயர்வினை அடைய முற்பட வேண்டும். அப்படி ஞானத்தை அடைந்தால் மனித வாழ்வு மிகவும் எளிதானதாகவும் இனிமையானதாகவும் மாறிவிடும். புத்தரின் பல உரையாடல்கள் ஞானத்தை அடைவதைக் குறித்து இருக்கின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then