13
நந்தன் என்னும் பெயரையும் அதற்கு மாற்றீடான நன்னன் என்னும் பெயரையும் சங்கப் பாடல்களில் காண்கிறோம். தற்போது நன்னன் என்னும் பெயர் எழுத்திலக்கியங்களில் காணப்படுவதில்லை. ஆனால், நந்தன் என்னும் பெயரைப் பிந்தைய இலக்கியங்களில் காண்கிறோம். அந்த வகையில் சங்கப் பாடல்களுக்குப் பிறகு பஞ்ச காவியங்களில் ஒன்றான நீலகேசியில் அப்பெயர் இடம்பெற்றிருக்கிறது. எழுத்து மரபிலும் வழக்காறுகளிலும் நீலி என்பதற்கு நெடுமரபு இருந்திருக்கிறது. அது வழக்காற்றில் பகுதிக்கேற்ப பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது; பிற பெண் தெய்வங்களின் மேலேறியும் வழங்கிவருகிறது.
நீலகேசி, தமிழின் ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் இல்லை. பௌத்த – ஜைனப் பிரதிகள் வழி தமிழில் உருவான தருக்க வடிவம் சிறப்பாக வெளிப்பட்ட நூலாக அது உள்ளது. மணிமேகலை காப்பியத்தில் கதையின் அங்கமாக வெளிப்பட்ட தருக்கம், இங்கு நூலின் மையமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இந்நூலைத் தமிழின் முதல் தருக்க நூல் என்று குறிப்பிடுகின்றனர். பௌத்த சமய காப்பியமான குண்டலகேசிக்கு சமணம் தரப்பிலான மறுப்பாக நீலகேசி அமைந்திருக்கிறது. அன்றைக்கு நீடித்திருந்த சமயப் பெயர்களின் தலைப்புகளைக் குறிப்பிட்டு அதற்கு மறுப்பாக நூலின் அங்கங்கள் அமைந்துள்ளன. விருத்தப்பா என்னும் பாவகையில் 10 சருக்கங்கள்; 11 பகுதிகள்; 894 பாடல்கள் என அமைந்துள்ளது. இதில் புத்தவாத சருக்கம் எனும் பகுதியில் 192 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then