மாஞ்சோலை: நூறாண்டு கால அடிமை வாழ்வும் நீதிக்கான மக்கள் போராட்டமும்

ஜெயராணி

சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சோலை எஸ்டேட்டை 1929 தொடங்கி 99 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி), குத்தகை காலம் முடிய இன்னும் நான்காண்டு காலம் உள்ள நிலையில் எஸ்டேட்டை மூடுவதாக, 2024 ஜனவரி மாதம் அறிவித்தது. பணியில் இருக்கும் சுமார் 600 தொழிலாளர்களும் ஜூன் 14ஆம் தேதிக்குள் விருப்ப ஓய்வுப் படிவத்தில் கையொப்பமிட்டு, தான் கொடுக்கிற கருணைத் தொகையைக் கேள்வியில்லாமல் பெற்றுக்கொண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் எஸ்டேட்டைக் காலி செய்ய வேண்டுமென பிபிடிசி உத்தரவிட்டது. நான்கு தலைமுறைகளாகத் தேயிலைக் காடுதான் வாழ்வு என்று இருந்துவிட்ட மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உணரும் முன்னரே எஸ்டேட்டை இழுத்து மூடி பிபிடிசி நிறுவனம் வெளியேறிவிட்டது. தேயிலை வர்த்தகத்திற்காகத் தலைமுறைகளை அடிமையாக்கி ஒரு நூற்றாண்டு காலம் வெளியுலகத்துடன் தொடர்பறுக்கப்பட்டு மலையில், தேயிலைக் காடுகளுக்குள் முடக்கப்பட்ட மக்கள், நிறுவனத்தின் திடீர் அறிவிப்பால் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கே போவது, எப்படி வாழ்க்கையைத் தொடங்குவது, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மலையை விட்டு இறங்க மறுத்து, கடந்த இரண்டு மாத காலமாக நீதிக்கான போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

மனிதர்கள் பரபரவென்று இயங்கிய தேயிலைத் தோட்டங்கள் இப்போது ஆளரவமற்று மயான அமைதியில் மூழ்கிக் கிடக்கின்றன. லயன் வீடுகளில் இருந்தபடி தாம் பயிரிட்டு வளர்த்த செடிகளைக் கண்ணீரோடு பார்த்திருக்கின்றனர் தொழிலாளர்கள். இரவு பகலாக ஓயாமல் இயங்கிய தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட கட்டடங்களாக மூடிக் கிடக்கின்றன. மலைமேல் வாழ்வாதாரம் எதுவுமின்றி அடுத்த வேளை உணவிற்கு வழியற்று, காட்டுக் கீரைகளைச் சமைத்து உண்ணும் மக்களின் நிலை இங்கே யாரையும் பாதிக்கவில்லை! 450 குடும்பங்கள், 600 தொழிலாளர்கள் எனச் சுமார் இரண்டாயிரம் பேரின் வயிற்றலடித்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றன பிபிடிசியும் தமிழக அரசும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!