பஞ்சமி நிலமும் மிராசு நிலவுடமையும்

- இலஞ்சி அ.கண்ணன்

ட்டுமொத்த உலக நாடுகளுக்கிடையேயான மோதலுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், நிச்சயமாக அந்த மோதல்கள் அனைத்தும் ‘நிலம்’ சார்ந்த பிரச்சனையாகவே இருக்கும். அந்த அளவிற்கு நிலமென்பது மிக முக்கியமான அரசியலைத் தீர்மானிக்கிறது. சாதிய இறுக்கம் நிறைந்த இந்திய மண்ணில் நிலம் சாதியோடு பின்னப்பட்டிருப்பது கூடுதல் சிக்கலுக்குரியது. இதன் காரணமாகவே நூறாண்டுகளுக்கு முன் J.H.A. திரமென்ஹீர் என்கிற ஆங்கில ஆட்சியாளரால் பஞ்சமர்களுக்குக் கொடுத்த ’12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம்’ (Depressed Class Land, தீர்வை நிலங்கள், சிவாயி ஜமா, தர்காட்ஸ் நிலம், கண்டிசன் நிலம்) பஞ்சமரல்லாத சாதிய இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இன்று. பொதுவாக எந்தத் தேசமாக இருந்தாலும் அங்கு வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நிலமென்பது அவர்களது அடிப்படை உரிமை. அந்த அடிப்படை உரிமை கூட இந்தச் சாதிய தேசத்தில் சாதியின் பெயராலும் பொருளாதாரத்தின் பெயராலும் காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் பஞ்சமர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வேறெந்த தேசத்திலும் இல்லாத பகுத்தறிவற்ற சனாதன நடைமுறையை இந்திய தேசத்தில் மட்டும் கடைப்பிடித்து, அதன் மூலமாகத் தன்னைப்போன்ற சகமனிதன் மீதே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வுகளைப் போதித்து, இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவனென்று வகைப்படுத்திய காரணத்தால் சாதியச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் சொல்லொண்ணாத் துயரத்திற்கும் ஆளான ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது விடுதலைக்கான விதைகளைக் காலனிய ஆட்சிக்காலத்திலும் விதைத்தனர். இதில் ‘திராவிட மகாஜன சபை’ என்கிற அமைப்பின் மூலம் டிசம்பர்-01,1891 அன்று உதகை மண்டலத்தில் அயோத்திதாசப் பண்டிதர் முன்னிலையில் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றிய 10 அம்சக் கோரிக்கைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!