நவீனத்துவம் என்னும் வளர்ச்சி நிலை சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது என்பதை அறிவோம். அந்நவீனத்துவமும் பொதுத்தளமும் (Public Sphere)மேற்கத்தியச் சூழலில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை ஒட்டி வடிவம் பெற்றவை. அது இந்தியத் துணைக்கண்டத்தில் காலனியத்தின் கீழைத்தேய மரபின் தொடர்ச்சியிலிருந்தே அமைந்தன என்பதும் நாம் அனுமானிக்கக் கூடியவையே.
பொதுவெளியில் வெகுஜனத்தின் பங்கேற்பு, அரசியலில் (ஒரு) மதச்சார்பின்மை, பகுத்தறிவு, அறிவுச் சு+ழலில் அச்சு, இதழ்கள்- இவை சமூகத்துடன் கொண்ட உறவு என்பவை அடுத்தடுத்த அளவில் வரிந்துகொள்பவை. தென்னிந்தியாவில் (தமிழகத்தில்) இவை அனைத்தின் துவக்கமாக இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளை அடையாளம் காண்கிறோம். அது உண்மையே. எனினும் அவை ஏற்பட அல்லது முழுமைபெறக் காரணிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்தவையே. அவற்றைப் புரிந்துகொள்ளாமலோ, கணக்கில் எடுத்துக்கொள்ளாமலோ அறுதியிட்டுச்சொல்லக்கூடிய முடிவுகளுக்கு நாம் வர முடியாது என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் உணர்த்துகின்றன. அப்படியான ஒரு நூலே- காலனிய தென்னிந்தியாவில் சடங்குகள் சாதி மற்றும் மதம் (2010-2011) என்னும் கட்டுரைத் தொகுப்பு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then