இளம் போராளி என்னுடைய முள்ளந்தண்டு வரை ஊடுருவிப் பார்ப்பதாகத் தோன்றியதுமே என்னுள் சிறு துணுக்குறல் எழுந்து வியர்த்தது. பனிக்கட்டிக் குளிராக நிலைகுத்தி நரம்புகளில் ஊடுருவும் சில்லிட்ட பார்வை. மெல்லிய நடுக்கம் என்னுள்ளே ஊறினாலும் அதை மறைக்கக் குரலை லேசாக உயர்த்தினேன். எனக்கே என் குரல் அருவருப்பூட்டுவதாக இருந்தது. யாரோ இன்னொருவனின் கரகரத்த குரல் போல, என்னிலிருந்து பிரிந்து காலடியில் நிழலாக நின்றிருக்கும் பிறிதொருவன் குரல் போல ஒலித்தது. போராளியின் பார்வையில் எந்த அசைவும் இல்லை. என் தடித்த குரல் அவனிடம் சென்று சேர்ந்ததற்கான எந்தச் சலனமுமில்லை. சிறு தடுமாற்றமோ அச்சமோ தெரியாத கண்கள், ஈரலிப்பான கரிய பளிங்குக் கல்லாகச் சலனமற்றிருந்தன. அவனது மூச்சுக் காற்று சீரில்லாமல் சீறி எழுந்து அடங்கியது. அறையின் புழுக்கக் காற்றை மார்புக்கூடு இழுக்கச் சிரமப்படும் தோறும், உதடுகளை மீன்போலக் குவித்து வாயால் சுவாசித்தான். தேகமெங்கும் சிறிய முடிச்சுகளாகக் கண்டல் குருதி கட்டியிருந்தது. உதடு கிழிந்து இரைப்பை வீங்கிய கண்கள் சுற்றிக் கண்றியிருந்தன.
“அப்படியா” என்றேன் மீண்டும். சற்றே அழுத்தமாக.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then