இந்தியாவில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில், ‘உள்இடஒதுக்கீடு’ (Sub Classification) செய்துகொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தனது தீர்ப்பில், பட்டியல் சாதியினர் குறித்தும், பட்டியல் சாதியினர் என்ற தொகுப்பின் தன்மை குறித்தும், அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் முரண்பட்ட கருத்துகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, பட்டியல் சாதிகளுக்குள் ‘கிரீமிலேயர் முறை’ கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூகக் காரணங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பட்டியல் சாதியினரிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள அந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் பட்டியல் சாதியினரிடையே உட்சாதிப் பிளவுகளைக் கூர்மைப்படுத்தி, சமூக அரசியல் தளங்களில் அம்மக்களைச் சிதறடிக்கச் செய்து, அவர்களிடையே சமூக – அரசியல் திரட்சி ஏற்பட்டுவிடாமல் பிரித்தாளும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரமாக இறங்கும் அபாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளையில் அந்த அபாயம் குறித்து எந்தக் கருத்தையும் ஏன் தெரிவிக்கவில்லை என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then