தலித் விடுதலையின் அங்கமே தலித் கலைகள்

நேர்காணல்: பா.மோகன் லார்பீர் | சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம், பொய்யாமொழி முருகன், ஊ.முத்துப்பாண்டி

முனைவர் பா.மோகன் லார்பீர் (1951) மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் படித்தவர். அங்கு பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் கல்லூரி முதல்வராகவும் ஆனார். தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் உருவான தலித் ஆதார மையத்தின் (DRC) நிறுவனராகவும், முதல் இயக்குநராகவும் ஆனவர். இவர் பொறுப்பில் இருந்தபோதே முதல் தலித் கலை விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழாண்டுகளுக்கும் மேலாக தலித் கலை விழாக்கள் இவர் தலைமையில் நடந்தன. தலித் ஆதார மையம் சார்பாகப் பல்வேறு முன்னெடுப்புகளுக்குக் காரணமானார். பல்வேறு தலித் இயக்கத் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரோடு தொடர்பு கொண்டிருந்தவர். சீரிய சிந்தனையாளர். ‘கலக மொழி: தலித் கலைகளும் கலை விழாக்களும்’ (2003), ‘தலித் விடுதலையின் வண்ணங்கள்’, ‘தலித் பெண்ணியம்’ ஆகிய நூல்களின் இணை தொகுப்பாசிரியர். ‘தலித் விடுதலைக்கான அரசியல்’ (1998) நூலின் தொகுப்பாசிரியர். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு Ambedkar on Religion: A Liberative perspective என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. அவர் எழுதி தொகுக்கப்படாத கட்டுரைகள் நிறைய உள்ளன.

ஓய்வு பெற்று பணிகளிலிருந்து விலகியிருக்கும் அவரை, கடந்த ஆண்டு சந்தித்து நேர்காணல் செய்ய முடிந்தது. எப்போதும் தன்னை முன்னிறுத்தியிராத அவர், இந்த நேர்காணலிலும் அவ்வாறே வெளிப்பட்டார். பேசுவதற்கு நிறைய இருந்தாலும் உடலும் மனமும் ஒத்துழைத்தவரை நம்மோடு பேசினார். அவரை அதிகம் தொந்தரவு செய்யாமல் சொன்னதைப் பதிவு செய்துகொண்டு திரும்பினோம். தாமதமான பிரசுரத்திற்கு அவரிடம் மன்னிப்பு கோருகிறோம்.

 

கல்விப் பின்புலத்தில் இருந்துகொண்டு சமூகச் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் உருவாகி வந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

இதற்கு முக்கியக் காரணமாக என்னுடைய தந்தை என்.கே.பால்ராஜ் அவர்களைச் சொல்ல வேண்டும். இசைப் பயிற்சி மையம் ஆரம்பித்தவர். என் பெற்றோர் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். வத்தலகுண்டு அரசுப் பள்ளி, பஞ்சாயத்துப் பள்ளி ஆகியவற்றில் பணியாற்றினார்கள். என் அப்பாவும் தாத்தாவும் இணைந்து திருச்சபையில் ‘கிராம கிறிஸ்தவர்கள் முன்னேற்றச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று தலித் கிறிஸ்தவர்களிடம் பேசுவார்கள். அப்போது தலித் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கிடையாது. பிஷப் உள்ளிட்டவர்களிடம் சென்று பேசுவார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமானால், சத்தம் போடுவார்கள் எனலாம். அப்போதெல்லாம் கூட்டம் சேர்ந்து போராடுவதில்லையே. ஆபீஸ் முன்னாடி சென்று சத்தம் போடுவது ஒரு போராட்ட வடிவம். அதனால் அவர்களுக்குப் பலவிதச் சிக்கல்கள் வந்தன. எனினும் அதனைத் தொடர்ந்து செய்துவந்தனர். மேலும், நான் கல்லூரி படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு Student Christian Movement (SCM)இல் சேர்ந்து, அதில் கிடைத்த சமூகம் குறித்த கருத்துகளால் பெரிய தாக்கத்தைப் பெற்றேன்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger