இளங்கோவுக்குப் பசித்தது.
வயிற்றினுள் அமிலம் ஊற்றியதுபோல கொதித்துக் கொதித்து அடங்கியது. கொதிக்கும்போது கை கால்கள் நடுங்கின. அடங்கும்போது தலை வலித்தது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட டிராகன் படத்தை சுருட்டி வைத்தான்.
அம்மா இன்னும் வரவில்லை.
எப்படியும் வரும்போது ஏதாவது திண்பதற்கு எடுத்து வருவாள். அதுவரை தாங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டான். பசி தோன்றும்போதெல்லாம் அம்மா நினைவுக்கு வந்துவிடுகிறாள். உடனே அம்மாவைத் திட்டியதும் நினைவுக்கு வரும். நெஞ்சுக்குள் ஏதோ கனத்துத் திரண்டு பின் திரவமாக உதிர்ந்து வயிற்றில் கூடுதலாக வலி அழுத்துவது போல உணர்ந்தான்.
“என்னையாடா தேவடியா சிறுக்கின்னு சொன்ன… என்னையாடா சொன்ன…” என மத்தை எடுத்துக்கொண்டு வந்தவள் அவன் அருகில் அப்படியே அமர்ந்துவிட்டாள். மத்தில் ஒட்டியிருந்த தயிர் தெறித்து அவள் கன்னத்தில் வழிவது வெண் ரத்தம்போல இருந்தது. ஒரு வார்த்தையும் பேச முடியாமல் வாயை அகலத்திறந்து கதறியழுதாள். வண்டியை நோக்கி தவழ்ந்துபோக வலு இல்லாமல் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடந்த தன் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கோ. சு+ம்பிக்கிடந்த அவை பல சமயங்களில் அவனுக்கு வால்போலத் தோன்றும். அவளால் நிறுத்தமுடியவில்லை. முட்டிய மூச்சை வாய்வழியாக விடும் முயற்சியெல்லாம் அழுகையானது. இது நடந்து ஒரு மாதமாகி விட்டது என்றாலும் இரவுகளில் அம்மாவின் கதறும் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டு விழிப்பதுண்டு. அம்மா அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பாள். முழுமையாக உறக்கம் களைந்து நினைவு தெளிவாகும் வரையில் அந்த அரட்டல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னர் அது மெல்ல மறைந்து அம்மாவின் அழுத்தமான சுவாசமாக மாறும். எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் நாளை எல்லாமே சரியாகிவிடும் என நினைத்துக்கொள்வான். மறுநாள் இறுகிய முகத்துடன் உலாத்துபவளிடம் ஒன்றும் கேட்க வாய் வராது. அப்பாவை நினைத்துக்கொள்வான். தான் சொன்னதில் தவறு ஒன்றுமில்லை எனத் தோன்ற அவர் நினைவுகள் உதவக்கூடியவை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then