சமத்துவம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சமூகத்தைக் கட்டமைக்க விரும்பிய அறிஞர்களில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர். அவருடைய சிந்தனை விடுதலை கோட்பாடுகளில் இருந்தது. ஏறக்குறைய அவருடைய அனைத்து ஆய்வுகளிலும் உரைகளிலும் அவர் குறிப்பிடுகிற சமத்துவமும் நீதியும் இந்தியச் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலுள்ள ஒடுக்கப்பட்ட இனங்களுக்குமானது. அவற்றில் பெற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் உரிய கருத்தாக்கங்கள் இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூகத்தின் அடிப்படையான விழுமியங்களைப் பிரெஞ்சு புரட்சியிலிருந்து பெற்றுக்கொண்டதாக முதலில் குறிப்பிட்ட அம்பேத்கர், பௌத்த மரபிலிருந்து கற்றுக்கொண்டதாகப் பின்னாளில் விளக்கமளித்தார். அம்பேத்கர் தன்னுடைய சமூக தத்துவம் எது என்பதற்குரிய விளக்கமாகவும், தான் கட்டமைக்க விரும்புகிற முன்மாதிரியான சமூகத்திற்கும் (Ideal Society), தான் விரும்புகிற மதம் என்பதற்குரிய விளக்கத்திற்கும், தன்னுடைய அரசியல் கொள்கை என்ன என்பதற்குரிய விளக்கத்திற்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதையே பதிலுரையாக முன்வைக்கிறார். அம்பேத்கருடைய வாழ்வின் அரசியலாக, செயல்பாடாக, சிந்தனையாக இந்தச் சமூகப் பிரகடனங்களே இருந்திருக்கின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then