சிறையிலிருந்து… – ஷர்ஜீல் இமாம்

தமிழில் : சிவராஜ் பாரதி

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020இல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அவர் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

இந்தச் சிறை வாழ்க்கை என்னுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை இன்னும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, என்னை நான் எப்படிப் பார்க்கிறேன்? மற்றொன்று, பிறர் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்? நிச்சயமாக இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

முதலில் மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஆய்வோம். மக்கள் என்னைப் பலவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கு நான் தீவிரவாதி; தில்லியில் கலவரத்தைத் தூண்டியவன். அவர்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. நான் கைதாகி ஒருமாதம் கழித்துதான் கலவரம் ஏற்பட்டது என்ற உண்மையில் அவர்களுக்கு அக்கறையில்லை. இங்கிருக்கும் மற்றோர் அறிவாளிக் கூட்டம் சொல்கிறது, “இவன் தீவிரவாதியல்ல; ஆனால், நிச்சயமாக இவன் தேசவிரோதி” நான் பிரிவினைவாதி என்ற இவர்களின் நம்பிக்கைதான் இத்தகைய கூற்றுகளுக்குக் காரணம். சர்ச்சையாக ஏதாவது பேசி அதன்மூலம் ஒரேநாளில் புகழடைய விரும்பும் அரசியல்வாதி என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. இப்படியாகச் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் என் சிறைவாசத்தை நியாயப்படுத்தும் பெரும்பான்மை மக்களுக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை. மாறாக, ஊடகத் தகவல்கள் கொண்டும் அவரவர் அரசியல் சார்பு கொண்டும் என்னை இகழ்ந்துரைப்பதில் மனநிறைவு கொள்கிறார்கள்.

இவனுக்கு மேலதிகச் சிறை தண்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்பும் இக்கூட்டத்தினர் தவிர்த்து, அநியாயமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன் என்று பரிதாபப்படும் ஒரு கூட்டமும் உண்டு. “அவன் அரசியல்வாதிதான், சர்ச்சையாகப் பேசிப் புகழடைய விரும்பியவன்தான். ஆனால், அதற்காக ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கக் கூடாது. அவன் தீவிரவாதியல்ல, சாதாரண கல்லூரி மாணவன்” என்று பேசும் இவர்களுக்கும் முந்தைய வகையினருக்கும் பெரிய வேறுபாடில்லை. உங்கள் பரிதாபம் எந்தவகையிலாவது உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. இருப்பினும் நன்றி. இவர்களல்லாமல் வேறுசில மக்களும் உள்ளனர். கொஞ்சம் எல்லை மீறினாலும், ஆளும் பாசிச அரசால் பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம் மக்களுக்காகப் போராடிப் பொய்யான குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்று அவர்கள் நம்புகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ளும் இவர்களே எனக்கு நம்பிக்கையளிக்கின்றனர். கடைசியாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தோ, நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கும் விதம் குறித்தோ எந்தப் புரிதலுமற்றுத் தன்னியல்பாக என்மீது இரக்கம் கொள்ளும் அப்பாவி முஸ்லிம்கள். இந்தப் பெரும்பான்மை – பிற்போக்குச் சமூகத்தில் அன்றாடம் வறுமையையும் வன்முறையையும் எதிர்கொண்டு வாழும் இம்மக்களின் அன்பே எனக்கு நிறைவையும் ஊக்கத்தையும் தருகிறது. வாழ்நாளில் நான் எழுதும், பேசும் அனைத்தும் இவர்களுக்கு உடனடியாகப் புரியாமல் போகலாம். ஆனால், நிச்சயம் பெரும்பாலானவற்றைத் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்வார்கள். சமத்துவம், சமூகநீதி என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியவைக்க முடியும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!