இந்து தேசியக் களியாட்டம் – அ.ஆசிர் முஹம்மது

“அதற்கு மறுபடியும் மதம் பிடிக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டு அவ்வாறு நடக்கவில்லையெனில் வீட்டுக்குத் திரும்பச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்பொழுதுதான் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மக்களைக் கண்ணுற்றேன். அது ஒரு பெருங்கூட்டம், குறைந்தது இரண்டாயிரம் பேர் கொண்ட அந்தக் கூட்டம் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்துகொண்டே இருந்தது. பளபளப்பான வண்ணங்களைக் கொண்ட உடைகளின் மேலேயிருந்த அவர்களது அந்த மஞ்சள் முகத்தையெல்லாம் பார்த்தேன். இதை வேடிக்கை பார்க்கும் அவர்களது முகங்களெல்லாம் சிரிப்போடும் கிளர்ச்சியோடும் காணப்பட்டன. ஒரு மாய மந்திரவாதி ஏதோ வித்தை காட்டப்போகிறான் என்பதைப் போல அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், அந்த மாயாஜால துப்பாக்கி எனது கைகளில் இருந்ததால் நான் இப்பொழுது அவர்களுக்கு வேடிக்கை பார்க்கத் தகுந்தவனாக இருந்தேன். அந்தக் கணம் அந்த யானையைச் சுட்டாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் படர்ந்தது…”

– ஜார்ஜ் ஆர்வெல், ‘யானையைச் சுடுதல்.’

ழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் இந்தக் கதை நிகழுமிடம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழிருந்த அன்றைய பர்மா ஆகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் உள்ளூர்க் குடிகளுடன் தொடர்புகொள்ள வேண்டிய ஒரு நடுத்தர அலுவலராகத் தான் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவத்தையே மேலே விவரிக்கிறார் ஆர்வெல். இரண்டாயிரம் பேருக்கு மேல் அந்தக் களத்தில் நிரம்பியிருந்தாலும் யாரும் யாரோடும் எதுவுமே பேசிக்கொள்வதில்லை என்பது இந்த விவரணையில் கவனம் செலுத்த வேண்டிய பகுதி. யானையைக் கொல்ல வேண்டுமா வேண்டாமா என்ற விவாதங்கள் நடைபெறுவதில்லை, செயல்பாட்டாளர்கள் யாரும் அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஒரு பொதுக்கருத்தை உருவாக்க முயலவில்லை, காலனிய அதிகாரி யானையைச் சுட்டு வீழ்த்தியே ஆகவேண்டுமென்று எந்தக் கோரிக்கையையும் உள்நாட்டுக் குடிகள் வைக்கவில்லை.

ஆனாலும், அங்கு அந்த யானையைச் சுட்டு வீழ்த்தியே ஆகவேண்டுமென்றொரு பொதுக்கருத்து உருவாகிவிட்டது என்பது ஆசிரியருக்கு மட்டுமல்ல, வாசகர்கள் நமக்குமே மனதில் தெள்ளெனப் புலப்பட்டுவிடுகிறது. இங்கு சுட்டு வீழ்த்துவதையும் தாண்டி அங்கு சுடுவதற்கான ஏற்பு எவ்வாறு உற்பத்திச் செய்யப்படுகிறது என்பதைக் கண்ணுறுவது அவசியமாகும். அதனது பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் மதம் பிடித்திருந்த யானை ஒன்று இலக்கு வைக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலனிய அதிகாரியின் கைகளுக்கு அவ்வதிகாரம் எவ்வாறு வந்தது? பதில், அந்த யானையைக் கொல்லக் கூடிய ஆற்றல் கொண்ட, ‘மாயாஜாலத்தன்மை’ கொண்ட துப்பாக்கி அவரது கைகளில்தான் இருக்கிறது. இங்கு துப்பாக்கியினுடைய ஆற்றல் காலனிய அதிகாரியைக் கவர்ச்சிகர தலைமையின் (charismatic leadership) சொரூபமாக வடித்தெடுக்கிறது. 

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger