இளையராஜாவின் பாடல்கள்: காலமும் வெளியும் – ஸ்டாலின் ராஜாங்கம்

நிழற்படங்கள் : ஸ்டில்ஸ் ரவி

இளையராஜா வணிக சினிமா என்னும் தளத்தில் செயல்பட்ட இசைக்கலைஞர். வெகுஜனம் நோக்கி இயங்கியவர். அதே வேளையில் அவருடைய பங்களிப்பு மேதமை நிறைந்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. வெகுஜனதளமும் மேதமையும் எப்போதும் இணையாதவை என்பதான கருத்து இளையராஜா விசயத்தில் மாறியிருக்கிறது. இதற்கு இசை என்ற வடிவமும் முக்கியக் காரணம். அடிப்படையில் இசை என்பது நுண்கலை. இசை கேட்பதற்கு இனிமையானது என்றாலும் அது இயங்கும் விதம் பூடகமானது; நுட்பமானது. அதனால்தான் இளையராஜாவின் இசை மேதமை கொண்டதா இல்லையா என்ற யோசனை பற்றிக் கவலைப்படாமலேயே அதன் இனிமை கருதி வெகுஜனம் ரசித்தது.

இளையராஜா பாடல்கள் இனிமையானவை, இன்னிசையானவை என்கிற கூற்றுகளை விளக்கச் சொன்னால் ஒரு வெகுஜன ரசிகனால் எவற்றையெல்லாம் சொல்ல முடியும்? இளையராஜாவின் பாடல்கள் முதன்மையாகக் காதலுக்குரியவை; காதலர்களுக்குரியவை. காதலின் பல்வேறு உணர்வுகளுக்கும் அவர் இசையில் இடம் இருந்தது. காதலின் உணர்வேக்கங்களுக்கு அவரின் இசையே இருப்பானது. தவிப்பு, ஏக்கம், வாட்டம், பிரிவு, காணுதல், தொடுதல், சிணுங்குதல், மரணம் என யாவற்றிற்கும் அவர் பாடல்களில் இடமிருந்தது. இவை தவிர துள்ளல், சோகம் என்பவற்றிற்கான ஓசையையும் பிரதிபலித்தது. அவரின் இசை ஒரேநேரத்தில் அன்றாடத்தைப் பிரதிபலித்ததோடு, அன்றாடம் என்பதைக் கட்டமைக்கவும் செய்தது. 1980களில் அவர் பாடல்கள் இவ்வாறுதான் தமிழ் வாழ்வை ஊடுருவியிருந்தன. 1980களுக்குப் பிறகும் அவரின் பங்களிப்புகள் தொடர்ந்தன என்றாலும் அவரைக் குறிப்பிடும்போது 1980களுக்கு அழுத்தம் தரப்படுவது இந்தக் காரணத்திற்காகத் தான். இந்த வகையில்தான் வெகுமக்கள் அவர் பாடல்களின் ‘இனிமை’யைக் கண்டடைந்துள்ளனர். ஆனால், இந்தக் கட்டுரையில் இளையராஜாவின் ‘இனிமை நீங்கிய’ பாடல்களையே பார்க்கப் போகிறோம். 1970களுக்குப் பிந்தைய தமிழ்ச் சமூக மாற்றங்களையும் அவை இளையராஜா வழி வெளிப்பட்ட விதத்தையும் புரிந்து கொள்வதற்கான முயற்சி இது. இதன்மூலம் ஒரேவேளையில் தமிழ் வரலாறையும் இளையராஜாவின் பயணத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பது நம்முடைய சிறு நம்பிக்கை.

முதலில் இளையராஜாவின் ‘இனிமை’ நீங்கிய பாடல்களை வசதிக்காகச் சில வகைகளாகப் பிரித்துப் புரிந்துகொள்ளலாம். 1. சமூக அரசியல் மாற்றத்தோடு தொடர்புடைய பாடல்கள் 2. கட்டியங்காரன் பாணியில் அமைந்த நாட்டார்மயப் பாடல்கள் 3. அம்மா பாடல்கள் / தன்னைப் பற்றிய / மெய்ம்மை நோக்கிய பாடல்கள்  4. பக்தி அல்லது அம்மன் பாடல்கள். இவற்றில் சமூக அரசியல் மாற்றத்திற்கான பாடல்கள் என்ற முதல் வகையே இக்கட்டுரையின் வாதத்திற்கானது. நிலவும் சமூக அரசியல் சூழலைச் சாடுவதும் புதிய சூழலைக் கோருவதும் இப்பாடல்களின் அடிப்படை. அவலம், கோபம் போன்றவை இப்பாடல்களின் மையம் என்பதாலும், காதல் முதன்மை பெறாததாலும் இவற்றை ஒரு வசதிக்காக ‘இனிமை நீங்கிய’ பாடல்கள் என்று குறிப்பிட வேண்டியிருக்கிறது. மற்றபடி இச்சுட்டல் இறுக்கமான விதியல்ல.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!