புனைவுலகில் பிரதிநிதித்துவம் என்பது சமூக இருத்தலைக் குறிக்கிறது. பிரதிநிதித்துவம் இல்லையென்றால் அது அழித்தலுக்கான குறியீடு.
இந்த இரண்டு வரிகளைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 1976 இல், லாரா முல்வே ‘ஆண் பார்வையை’ பற்றி எழுதிக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஜார்ஜ் கெர்ப்னர் என்ற தகவல் தொடர்புத்துறை பேராசிரியர் எழுதிய வார்த்தைகள் மேற்கண்டவை. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஊடகங்களில், குறிப்பாக சினிமாவிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ‘பிரதிநிதித்துவம்’ என்ற வார்த்தையை நாம் இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். சரி, உண்மையில் ‘பிரதிநிதித்துவம்’ என்றால் அதன் அர்த்தம் என்ன? நாம் இப்போது வரை அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே, ஏன்?
எளிமையாகச் சொல்வதென்றால், சினிமாவில் நாம் காணும் கதாபாத்திரங்கள் பல்வேறு இனங்களைப் பிரதிபலிக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரங்கள் பாலினப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைய வேண்டும். இருந்தாலும் திரையில் நாம் யாரைப் பார்க்கிறோம் என்பது அவ்வளவு முக்கியமா என்ன?
நீங்கள் இதுவரை பொறுமையாகப் படித்திருந்தால், அதற்கு நன்றி. இனிமேலும் தொடர விரும்புபவர்களுக்கு – அந்தக் கடைசிக் கேள்வி கொஞ்சம் எடக்கு மடக்கானது என்று உங்களுக்கே தெரியும். கண்டிப்பாக முக்கியம்தான், சந்தேகமேயில்லை. ஆனால், அது ஏன் அவ்வளவு முக்கியம் என்று விவாதிக்க இந்தக் கட்டுரையின் முதல் வரியை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். கெர்ப்னரின் வார்த்தைகள் துணிச்சலானவை. அதைவிட முக்கியம் அவை சத்தியமானவை. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நீங்கள் சிறுவயதிலிருந்து இன்றுவரைப் பார்த்த படங்களை மீண்டும் ஒருமுறை ஓட்டிப்பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும்.
விஷயம் இதுதான்: நீங்கள் சினிமாவில் உங்களைப் பார்க்கும்போது, அதாவது உங்களைப் போல் தோற்றமுள்ள, உங்களைப் போலவே பேசும், உங்களைப் போலவே வாழும் கதாபாத்திரங்களைச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பார்க்கும்போது, இவ்வுலகில் உங்களின் இடத்தை அது நிலைநிறுத்துகிறது. உண்மையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்; நிஜமாகவே சமூகத்தில் ஒரு பங்கு வகிக்கிறீர்கள் என்பதை அது உறுதி செய்கிறது. இந்த எண்ணம் உங்களின் சிறுவயதிலேயே தோன்றிவிடுகிறது. உங்கள் வீடு, குடும்பம் என்ற யோசனைகள் தோன்றுவதற்கு முன்பாகவே சினிமாவின் கற்பனை உலகில் உங்களைப் பொருத்திப்பார்க்கும் எண்ணம், நீங்கள் ‘பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை’ பார்க்கும் நிகழ்வு உங்களின் சமூக இருப்பை உங்களுக்குச் சுட்டிக்காட்டிவிடுகிறது. நீங்கள் வளர வளர இந்த எண்ணம் வேர்பிடித்து, கிளைவிட்டு, தொடர்ந்து வளர்கிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then