போலி ஜனநாயக முகங்களைக் கீறும் விராட்ஜூரிகள்

- ஸர்மிளா ஸெய்யித்

மே 25, 2020 அன்று மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்கா முழுவதும் பரவிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற எதிர்ப்பானது அமெரிக்க வரலாற்றில் சிவில் உரிமைகளுக்கும் இன நீதிக்குமான வெகுஜன இயக்கங்களின் நீண்ட வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வு.

குறைந்தபட்சம் 15 மில்லியன் அமெரிக்கர்கள் 2,500 நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது உலகளவிலும் மாபெரும் அலையை உருவாக்கியது. லண்டன், சிட்னி, கேப் டவுன், ரியோ டி ஜெனிரோ, ஸ்டாக்ஹோம், டோக்கியோ எனப் பல நாடுகளின் தலைநகரங்களிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் அற ஒற்றுமையுடன் தெருக்களில் இறங்கினர். மூல சக்தியாக வீடியோவில் பிடிபட்ட ஃபிலாய்டின் கொடூரமான மரணத்தின் காட்சி இன வன்முறை, சமத்துவமின்மை போன்ற உள்ளூர்ப் பிரச்சினைகளை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தது.

இனப் பாகுபாடு, பாலினச் சமத்துவமின்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் எதிர்மறையாக ஒன்றையொன்று வலுப்படுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் கறுப்பினத்தவர், பெண்கள் இருவரையும் இருமடங்கு சுமைக்கு உட்படுத்துகின்றது.

உண்மையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கம் 2020க்கு முன்பே தொடங்கப்பட்டது. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கம் சமூகச் செயற்பாட்டாளர்களும் கல்வி அறிஞர்களுமான அலிசியா கார்சா, பாட்ரிஸ் கல்லர்ஸ், ஓபல் டோமெட்டி ஆகிய மூன்று கறுப்பினப் பெண்களால் நிறுவப்பட்டது. 2013 இல், டிரேவான் மார்ட்டின் என்ற இளைஞன் புளோரிடாவில் காவல் துறை பணியிலிருந்த ஜார்ஜ் சிம்மர்மேன் என்பவரால் கொல்லப்பட்டபிறகு #BlackLivesMatter என்ற தன்னிச்சையான ஹேஷ்டேக்குடன் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரச்சாரமே இப்போது தடுக்க முடியாத சர்வதேச நிகழ்வாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் முக்கிய உந்து சக்தியாகப் பெண்களே உள்ளனர்.

ஜூலை 13, 2013 அன்று, ஜார்ஜ் ஜிம்மர்மேன் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். வரலாற்றில் இது ஒரு வேதனையான தருணம். ஏனெனில் இந்த வழக்கின் விவரங்கள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன. டிரேவோன் மார்ட்டின் வெறும் 17 வயதேயான இளைஞன். புளோரிடாவில் தனது தகப்பனாருடன் விடுமுறையில் இருந்த ஓர் நாள் இரவு குளிர்பானம் வாங்குவதற்காக வெளியே சென்ற டிரேவோன் மார்ட்டின் வீடு திரும்பவில்லை. மகனைக் காணவில்லை என்று முறைப்பாடு அளிக்கும் வரைக் கைது செய்த இளைஞனைப் பற்றிக் காவல் துறை பெற்றோருக்கு அறிவிக்கவில்லை. கடைசியில் பெற்றோருக்குக் கிடைத்தது மகனின் சடலம் மட்டும்தான்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!