கறுப்பிலக்கிய எழுத்தாளர் கூகி வா தியாங்கோவும் தமிழ்ச் சிந்தனையாளர் அயோத்திதாசரும் காலனியச் சிந்தனையை எவ்வாறு எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவிருக்கிறோம். காலனியம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரி பொருள்படவில்லை. எனவே காலனியத்தை முழுமையாக எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்கிற ஒற்றை நிலைப்பாட்டிலிருந்து அணுக முடியாது. பொதுவாகக் காலனியவாதிகள், குடியேறிய நாட்டைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும்போது, அரசியல் ரீதியாக மட்டுமல்லாது அங்கு இருக்கக்கூடிய மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீதும் மேலாதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.
பொதுவாக ஆதிக்கத்தை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று வெளிப்படையாகத் தெரிவது. அதாவது, கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஆதிக்கம் . வன்முறை, பார்த்தாலே தீட்டு, சாதி வெறியாட்டம், பேசும் மொழியால் புறக்கணித்தல் என்பது ஒருவகை. சடங்குகள், கதையாடல்கள், கருத்தியல்கள், வாய்மொழி வழக்காறுகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளின் வழியில் மறைமுகமாக மேலாதிக்கம் செலுத்துவது இரண்டாவது வகை.
பண்பாட்டின் வழியாகக் கடைப்பிடிக்கக்கூடிய இத்தகைய ஆதிக்கத்தைத்தான் பண்பாட்டு மேலாதிக்கம் என்கிறார் இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி. இந்நிலையில் காலனிய ஓர்மை ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் எவ்வாறு தொழிற்பட்டது என்பதையும் காலனியச் சிந்தனையை அயோத்திதாசரும் கூகி வா தியாங்கோவும் தங்களது சூழலுக்கேற்ப எவ்வாறு புரிந்துகொண்டனர் என்பதையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then