வில்கர்சன் புலிட்சர் விருது பெற்ற பத்திரிக்கையாளர், எழுத்தாளர். அவருடைய முந்தைய நூல் ‘The Warmth of Other Suns: The Epic Story of America’s Great Migration’ பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். இந்நூல் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆப்ரிக்க – அமெரிக்கர்கள் சந்திக்கும் பிரச்சினையை நிறவெறி, இனவெறிப் பிரச்சினையாகக் கருதுவது மேலேட்டமானது, அது உண்மையில் சாதியப் பிரச்சினை. இதுதான் இந்நூலின் கரு. இந்திய சாதிய அமைப்பையும் அதில் தலித்துகளின் நிலையையும் அறிந்துகொண்ட வில்கர்சன் இந்திய தலித்துகள் சந்திக்கும் சாதியப் பாகுபாடுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆப்ரிக்க – அமெரிக்க மக்கள் சந்திக்கும் பாகுபாடுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் புரிந்துகொள்கிறார். அதன்மூலம் டாக்டர் அம்பேத்கரைத் தெரிந்துகொள்வதுடன், அவர் ஆய்வுகளை ஆழ்ந்து படித்து, ஆப்ரிக்க – அமெரிக்க மக்கள் சந்திக்கும் இனப் பிரச்சினைகளுக்கு மூலவேராக அடித்தளமாக இருப்பது சாதியம் என்கிறார். இனம் என்பது தோல், சாதி அதை தாங்கி நிற்கும் எலும்புக்கூடு – சாதி நிரந்திரமானது. யார் வௌ;ளையர்கள் என்பது அமெரிக்காவில் காலப்போக்கில் மாறினாலும், யார் ஆதிக்கச் சாதியினர் என்பதும், யார் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதும் மாறவில்லை.
ஆப்ரிக்க – அமெரிக்கர்களையும், இந்திய தலித்துகளையும் ஒப்பிட்டு முதன்முதலில் பெரும் ஆய்வுகளைச் செய்தவர் அம்பேத்கர் தான். தீண்டாதவர்கள் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள் என்கிற நூலிலும், காந்தியும் காங்கிரஸும் தீண்டத்தகாதவர்களுக்கு செய்தது என்ன? நூலிலும், ஆப்ரிக்க – அமெரிக்கர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும், இந்திய தலித்துகளுக்கும் இருக்கும் ஒற்றுமையையும் வேற்றுமையையும் விலாவரியாக எழுதியிருக்கிறார். அவர்களை மட்டுமல்ல, யூதர்களை குறித்தும் பல இடங்களில் எழுதியிருக்கிறார். மேலும் தொடர்ச்சியாக ஆப்ரிக்க – அமெரிக்கர்கள் விடுதலைப் போராட்டத்தை கவனித்த அம்பேத்கர், இந்திய தலித்துகளின் நிலையும் அமெரிக்க கறுப்பின மக்களின் நிலையும் ஒன்றே என்றும், கறுப்பின மக்களை குறித்து தலித்துகள் தெரிந்துகொள்வது இயற்கையானது மட்டுமல்ல அவசியமானதும்கூட, என்று பேராசிரியர் W.E.B. Du Boisவுக்கு கடிதம் எழுதினார். இதுபோல, ஆப்ரிக்க – அமெரிக்கச் செயற்பாட்டாளர்கள், இந்திய தலித் விடுதலைப் போராட்டங்களை கவனித்தது போல தெரியவில்லை. மார்ட்டின் லூதர் கிங் Jr., இந்தியாவிற்கு வந்திருந்த போது, கேரளாவில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் மார்ட்டின் லூதர் கிங் Jr., அவர்களை அமெரிக்காவின் தீண்டப்படாதவரென மாணவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். முதலில் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்தாகவும், பின் அதிலுள்ள உண்மை புரிய தனக்கு சில மணித்துளிகள் ஆனதாகவும், மார்ட்டின் லூதர் கிங் Jr., குறிப்பிடுகிறார். ஆக, மார்ட்டின் லூதர் கிங் Jr., -க்கு இந்திய தலித்துகள் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் பெரிய அறிமுகம் இல்லையெனலாம். அந்த வகையில், இந்நூல் ஒரு முக்கியமான மைல்கல். மிகவும் பிரபலமாகிவிட்ட இந்நூல் முழுவதும் அம்பேத்கரை பேசுகிறது, அவரின் சிந்தனைகளை அமெரிக்க இனவெறிப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக முன்மொழிகிறது. அம்பேத்கரை இந்தியாவின் மார்ட்டின் லூதர் கிங் Jr., என்கிறார் வில்கர்சன். மார்ட்டின் லூதர் கிங் Jr., அவர்களை இந்தியாவின் காந்தியாக அறிந்த அமெரிக்கர்களுக்கு இது முற்றிலும் புதிய செய்தி.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then