சமூகச் சிக்கல்களைக் கேள்வியெழுப்புவேன் – ஜாபர் ஃபனாஹி

தமிழில்: ராம் முரளி

அரசுக்கெதிராகத் திரைப்படங்களை உருவாக்குகிறவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டில் ஈரானிய புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் ஃபனாஹி கைது செய்யப்பட்டார். 20 வருடங்களுக்குக் கலைச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அதோடு, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் இது வீட்டுச் சிறை என மாற்றப்பட்டது. ஊடக நேர்காணல்களில் கூட அவர் பங்கேற்க முடியாத சூழல். சர்வதேச அளவில் அவருக்குப் பல்வேறு ஆதரவுக் குரல்கள் எழுந்தன என்றாலும் ‘செயல்படாத்தன்மையில்’ ஃபனாஹியை வைத்திருக்கத் தீர்மானித்திருந்த ஈரானிய அரசு அக்குரல்களுக்குத் துளியும் மதிப்பளிக்கவில்லை. 1995இல் வெளியான ‘The White Balloon’ எனும் தனது முதல் திரைப்படத்திலிருந்து முழுக்க முழுக்கச் சமூகவயப்பட்ட கதைகளையும் மத இறுக்கங்களினால் உண்டாகும் அழுத்தங்களையும் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் பேசி வந்தார். இதுவே அவரது படைப்புச் செயல்பாடுகளை ஈரானிய அரசு முடக்குவதற்கான முக்கியக் காரணமாகும்.

எனினும், தன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையையும் எதிர்த்து ஃபனாஹி கலகம் புரிந்துவருகிறார். ‘This is Not a Film’, ‘Closed Curtain’, ‘Taxi’, ‘Three Faces’ முதலிய திரைப்படங்களை இந்தத் தடைகளுக்கு மத்தியிலேயே உருவாக்கப்பட்டன. இதில் ‘This is Not a Film’ திரைப்படத்தை ஒரு பென் டிரைவில் பதிவேற்றிப் பிறந்த நாள் கேக் ஒன்றில் செருகி, அரசுத் துறையைச் சார்ந்த எவருக்கும் தெரியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருக்கிறார் ஃபனாஹி. சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஒரு படைப்பு மனதின் தத்தளிப்புகளை இத்திரைப்படத்தில் நம்மால் உணர முடிகிறது. துவக்கத்தில், புறச் சூழல்களிலேயே தனது காட்சி அமைப்புகளைப் பதிவுசெய்து வந்திருந்தவர், இப்போது தனது வீடு, வீட்டின் உள்ளறை, தனது கார் எனக் குறுகிய சூழல்களில் இயங்க நேர்ந்தாலும் வெவ்வேறு விதமான திரைப்படமாக்கல் உத்திகளைக் கையாண்டு, தன்னால் இயன்ற அளவில் படைப்பாக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். வெவ்வேறு இதழ்களில் வெளியான நேர்காணல்களில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி- பதில்களில் கைதுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் குறித்தும், 2010இல் திரைப்படங்களை உருவாக்குவதற்கான தடை விதிக்கப்பட்டதற்குப் பிறகான காலங்களில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்தும், அரசு மற்றும் கலாச்சார இறுக்கங்களுக்கு எதிரான அவரது மனப்பதிவுகளையும் பகிர்ந்தளித்திருக்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!